Chengalpattu

News March 4, 2025

நோய் நீங்கி நீண்ட ஆயுள் பெற செய்யும் பெருமான்

image

செங்கல்பட்டு மாவட்டம், வல்லம் என்ற ஊரில் பல்லவ மன்னன் மகேந்திர வர்மனால் கட்டப்பட்ட குடவரை கோயில் உள்ளது. இங்குள்ள சிவபெருமானை தரிசனம் செய்தால் நோய் நீங்கி நீண்ட ஆயுள் பெறுவர். அம்பிகையை தரிசனம் செய்தால் திருமணம் எளிதில் கைகூடும். விநாயகரை வேண்டினால் காரியங்கள் யாவும் வெற்றிகரமாக முடியும். முருகரை வேண்டினால் நவக்கிரக தோஷம் நட்சத்திர தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News March 4, 2025

சித்தா, ஆயுர்வேதா படித்தவர்களுக்கு அரசு வேலை

image

அரசு மருத்துவமனைகளில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள 29 உதவி மருத்துவ அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன . அதிகபட்சமாக 59 வயது வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக இன்றைக்குள் (மார்ச்.04) விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு பின்னர் அறிவிக்கப்படும்.

News March 4, 2025

செங்கல்பட்டு: 9 சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

image

ஒரகடம் காவல் எல்லைக்குட்பட்ட வல்லக்கோட்டை கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 10.7.2019 அன்று அதேபகுதியை சேர்ந்த பூ வியாபாரி அருணாச்சலம் (65) என்பவரால் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று அருணாசலம் மீது குற்றம் நிரூபணம் ஆனதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர்.

News March 4, 2025

கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும்

image

போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, தென்மாவட்டங்களில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்பட்ட பேருந்துகள் இன்று (மார்ச் 4) முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலுருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு 80 வழித்தடங்களில் 589 பேருந்துகள் 3795 பயணநடைகள் இயக்கப்பட்டு வருவதுடன் கூடுதலாக 104 பேருந்துகள் 816 பயணநடைகள் இயக்கப்படும். ஷேர் செய்யுங்கள்.

News March 4, 2025

செங்கல்பட்டு: விடிய விடிய மது – கல்லூரி மாணவி உயிரிழப்பு!

image

தஞ்சாவூரை சேர்ந்த அஸ்வினி (19) என்பவர் படூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்துள்ளார். ஏகாட்டூரில் தனியார் பெண்கள் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.இந்த நிலையில் தனது தோழிகளுடன் விடிய விடிய மது அருந்திவிட்டு உறங்கிய அவர் மாலை ஆகியும் எழவில்லை.தகவலறிந்த போலீசார் அஸ்வினியின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News March 4, 2025

கூரியர் மோசடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்

image

கூரியர் மோசடிகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என  செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கூரியர் மூலம் பார்சல் அனுப்புவதாகவும், உங்கள் பெயரில் வந்துள்ள கூரியரில் போதைப்பொருட்கள் உள்ளது என்றும் பொய்யான தகவலை கூறி உங்களிடம் பணம் பறிப்பார்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

News March 3, 2025

விவசாயிகளுக்கு அடையாள அட்டை: பதிவு செய்ய அழைப்பு

image

தமிழக விவசாயிகள் அரசின் அனைத்து விவசாய சலுகைகளையும் பெறுவதற்காக தனித்துவமான அடையாள எண் மற்றும் அட்டை வழங்கப்பட உள்ளது. மார்ச் 31ம் தேதிக்குள் அனைத்து விவசாயிகளும் தங்களுடைய நில உடைமைகளை பதிவு செய்யவேண்டும். செங்கல்பட்டு மாவட்ட விவசாய பெருமக்கள் உடன பதிவு செய்ய மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பா. பிரேம்சாந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News March 3, 2025

கிடைக்காததை கிடைக்க செய்யும் எடீஸ்வரர்

image

பயனூர் கிராமத்தில் பிரசித்திபெற்ற எடீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. கிடைக்காத ( எட்டாத) தையும் கிடைக்க வைக்கும் சக்திவாய்ந்தவர் என்பதால், இத்தல இறைவன் எடீஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பலிப்பது சிறப்பு. வழக்கு விவகாரத்தில் நீதி கிடைக்காமல் திண்டாடுவோரும், சகல செல்வதை பெறவும் மக்கள் இங்கு வந்து தரிசனம் செய்கின்றனர். ஷேர் பண்ணுங்க.

News March 3, 2025

பேத்தி வயதுடைய சிறுமியை வன்கொடுமை செய்த முதியவர் 

image

ஒரகடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பூ வியாபாரம் செய்து வருபவரின் 9 வயது சிறுமியை, அதே பகுதியைச் சார்ந்த அருணாச்சலம் (60) என்ற முதியவர், தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருந்த போது சிறுமிக்கு தின்பண்டங்கள் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பேத்தி வயதுடைய குழந்தையை வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி நஷிமா பானு தீர்ப்பாளித்தார்.

News March 3, 2025

475 மனுக்கள் குறைத்தீர் முகாமில் குவிந்தன

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 475 மனுக்களை பெற்றுக்கொண்டு, மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். உடன் கூடுதல் ஆட்சியர் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வெ.ச.நாராயண சர்மா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காஜா சாகுல் ஹமீது ஆகியோர் உள்ளனர்.

error: Content is protected !!