India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தாம்பரம் மாநகராட்சியில் அனைவருக்கும் சீரான வகையில் குடிநீர் கிடைக்கும் நோக்கத்தில், 24 மணி நேர குடிநீர் திட்டம் முதல் கட்டமாக 5 வார்டுகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு, டெண்டர் கோரப்பட்டதை அடுத்து விரைவில் பணிகள் தொடங்க உள்ளன. இதற்காக அண்ணா பல்கலை., வாயிலாக, மண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஒரிரு நாட்களில் தேவையான உபகரணங்கள் இறக்கப்பட்டு விரைவில் இத்திட்டத்திற்கான பணிகள் தொடங்கும்.
பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜா, கடந்த 7ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் ஜவாஹிருல்லா, விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் தேச விரோதிகள். இருவரையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என கூறினார். இதையடுத்து, வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாக எச்.ராஜா மீது போலீசார் இன்று (நவ.23) வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில், மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நேற்று தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தியாகராஜன் டேக்குவாண்டோ மையத்தில் நடைபெற்றது. இதில், அரசு நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவி ராஜஸ்ரீ தங்கப் பதக்கமும், 6ஆம் வகுப்பு மாணவி அக்சயா வெள்ளிப்பதக்கமும் வென்றனர். தங்கப்பதக்கம் வென்ற ராஜஸ்ரீ, மாநில அளவிலான போட்டியில் பங்குபெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உங்கள் வங்கி கணக்கின் நடவடிக்கைகளை அடிக்கடி கண்காணிக்கவும். ஏதாவது, அனுமதியற்ற பரிமாற்றங்கள் குறித்து கண்டுபிடித்தால் உடனடியாக வங்கிக்கு தெரிவிக்கவும். தெரியாத இணைப்புகளை கிளிக் செய்வது, செய்திகள் அல்லது மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதை தவிர்க்கவும். முக்கிய UPI தரவு மற்றும் OTP-களை பகிர கூடாது. நிதி பரிமாற்றங்களுக்கு எப்போதும் அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தவும்.
ATM மோசடி, டிஜிட்டல் கைது மோசடி வரிசையில் தற்போது UPI மோசடி நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுபோல் மோசடிகளில் சிக்கினால் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். மோசடி செய்யப்பட்ட தொகைகள் அனைத்தும், Amazon Pay-க்கு மாற்றப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. ஷேர் செய்யுங்க
வரும் நவ.26, 27 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளதால், அடுத்த வாரம் வடதமிழகத்தில் பருவமழை மீண்டும் தொடங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால், தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை அசோக் நகரைச் சேர்ந்த கால் டாக்சி டிரைவர் சரவணன்(24), இன்று அதிகாலை, செங்கல்பட்டுக்கு காரில் சென்றார். அப்போது வண்டலூர் மேம்பாலம் அருகில் வரும்போது, செங்கல்பட்டை சேர்ந்த பாலாஜி (24) அவரது நண்பர்கள் ஆசிக் (19), தரணி (22) ஆகியோர் குடிபோதையில் சரவணனிடம் ரகளையில் ஈடுபட்டு, காரின் கண்ணாடியை உடைத்து சரவணனை தாக்கினர். இதுகுறித்த புகாரின்பேரில் கிளாம்பாக்கம் போலீசார், மூவரையும் கைது செய்தனர்.
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வரையிலான மின்சார ரயில்கள், நாளை (நவ.24) முதல் நவ.28ஆம் தேதி வரை பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரையிலான ரயில்கள் காலை 11:45 முதல் மதியம் 1:45 வரை பகுதியளவில் ரத்து, மதியம் 1:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வழி ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சம்பா பயிர் காப்பீடு செய்வதற்கு, வரும் 30ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் செல்வபாண்டியன் தெரிவித்துள்ளார். இதில், கடன் பெறாத விவசாயிகள் அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளையோ அணுகி பயன்பெறலாம் என்றார். இந்த காப்பீடு கடனை பயன்படுத்தி, நல்ல விளைச்சல் பெற்று பயனடையுங்கள். ஷேர் செய்யுங்கள்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் தொடர்பான வாக்காளர் சிறப்பு முகாம், இன்றும், நாளையும் நடக்கிறது. இதில், பெயர் சேர்த்தல் படிவம் 6, நீக்கல் படிவம் 7 மற்றும் இடமாற்றம், தொகுதி மாற்றம், அடையாள அட்டை நகல் படிவம் 8 ஆகியவற்றை பெற்று, திருத்தங்களை செய்யலாம். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யுங்க
Sorry, no posts matched your criteria.