India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பல்லாவரம் அருகே திரிசூலம் பகுதியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான ஆறுமுகம் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரை இன்று அதிகாலை அடையாளம் தெரியாத கும்பல் வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது. சம்பவ இடத்திற்கு வந்த பல்லாவரம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரட்டை கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <

மாநகராட்சி-1 (தாம்பரம்), நகராட்சி-4 (செங்கல்பட்டு, மறைமலைநகர், நந்திவரம்-குடுவாஞ்சேரி, மதுராந்தகம்), நகர் பஞ்சாயத்து-6, பேரூராட்சிகள்-359, தாலுகா-8, ஊராட்சி ஒன்றியம்-8, வருவாய் கிராமங்கள்-636, MP தொகுதிகள்-3, MLA தொகுதிகள்-7 (செங்கல்பட்டு, மதுராந்தகம், திருப்போரூர், சோழிங்கநல்லூர், தாம்பரம், பல்லாவரம், செய்யூர்), மொத்த பரப்பளவு-2,945 ச.கி.மீ. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியம் மறைமலைநகர் பகுதியில் நேற்று சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சர் தா.மோ அன்பரசன் தலைமையில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த பாஜக OBC அணியின் மாநிலத் துணைத் தலைவர் துரை சண்முகமணி தலைமையில் 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் திமுகவில் இணைந்தனர்.

உத்திரமேரூர் ஒன்றியம் மானாமதி கிராமத்தை வினோத் (31). கூலித்தொழிலாளி. இவரது மனைவி தெய்வயானை (25). கணவன், மனைவி இடையே இரவு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இரவு உணவு சாப்பிட்ட பின்னர் இருவரும் ஒன்றாக உறங்கியுள்ளனர். அதிகாலை 2 மணி அளவில் தெய்வயானை எழுந்து பார்த்த போது வினோத் தூக்கில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து உத்திரமேரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செங்கல்பட்டில் நேற்று (மார்ச்-08) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.09) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை..இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டை செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க -போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க.

தமிழக சுற்றுலாத்துறை ECR-ல் ‘பீச் வெட்டிங்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மாமல்லபுரம் அருகே உள்ள TTDC கடற்கரை விடுதியில் திருமணம் நடத்த வசதி செய்யப்பட்டுள்ளது. இடத்திற்கான முன்பதிவு கட்டணம் பராமரிப்புக்காக சுமார் ரூ.10,000 செலுத்த வேண்டியிருக்கும். முன்பதிவு மற்றும் மேலும் கூடுதல் விபரங்களை, www.ttdconline.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகள் சார்பில் விருப்ப மனு பெறப்பட்டு நேர்க்காணல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நாளை மறுநாள் (மார்ச்.10) நேர்காணல் நடைபெறும் என தவெக கட்சி தலைமை அறிவித்துள்ளது. விருப்ப மனு அளித்தவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். மேலும் பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே.
Sorry, no posts matched your criteria.