Chengalpattu

News November 29, 2024

கனமழை காரணமாக மின்வாரியம் அறிவுறுத்தல்

image

*மின் கம்பிகள், மின்சார கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் அருகில் செல்ல வேண்டாம். *மின் கம்பங்கள், மின் சாதனங்களுக்கு அருகே தேங்கி நிற்கும் மழைநீரில் செல்ல வேண்டாம். *தாழ்வாக தொங்கி கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்ல வேண்டாம். *ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சாதன பொருட்களை இயக்க வேண்டாம். *மின் ஒயர் இணைப்புகளை இன்சுலேஷன் டேப் சுற்றி வைக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்

News November 29, 2024

செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டில் இன்று (நவ.29) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் செய்யுங்கள்

News November 28, 2024

செங்கல்பட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (நவ.28) மாலை முதல் நாளை காலைக்குள் தற்காலிக புயலாக மாறும் எனவும், அது வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே வரும் நவ.30ஆம் தேதி கரையை கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News November 28, 2024

பொதுமக்கள் புகார் அளிக்க ‘”வாய்ஸ் ஆப் தாம்பரம்’ செயலி

image

தாம்பரம் மாநகராட்சியில் வசிப்போர் புகார்களை தெரிவிக்கும் வகையில் ‘வாய்ஸ் ஆப் தாம்பரம்’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி உள்கட்டமைப்பு, சுகாதாரம், பொது சேவைகள் குறித்த புகார்களை தெரிவிக்கும் வகையிலும் அவற்றின் மீது துறை சார்ந்து உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இச்செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். ஷேர் பண்ணுங்க

News November 28, 2024

செங்கல்பட்டிற்கு ஆரஞ்சு அலர்ட்

image

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 480 கி.மீ. தொலைவில் நிலைக் கொண்டுள்ளது. இதனால், இன்று முதல் 30ஆம் தேதி வரை செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்க

News November 28, 2024

மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கும்

image

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சுமார் 6 மணி நேரமாக நகரமாக ஒரே இடத்தில் நீடித்து வருகிறது. முன்னதாக, புயல் சின்னம் மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில், தற்போது நகராமல் ஒரே இடத்தில் நிற்கிறது. மாமல்லபுரம் – காரைக்கால் இடையே நாளை மறுநாள் (நவ.30) கரையை கடக்கக் கூடும். இதனால், செங்கல்பட்டு மாவட்த்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 27, 2024

5 பேர் உயிரிழப்பு: நிவாரண நிதி அறிவிப்பு

image

மாமல்லபுரம் அடுத்த பண்டித மேடு பகுதியில் தறிகெட்டு ஓட்டிய காரால் விபத்து ஏற்பட்டு மாடு மேய்த்துக் கொண்டிருந்த 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதியை அறிவித்துள்ளார்.

News November 27, 2024

மாமல்லபுரத்தில் கார் மோதி 5 பெண்கள் பலி

image

மாமல்லபுரத்தில் கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்டிதமேடு ஓ.எம்.ஆர். சாலையில் ஆடு மேய்ப்பதற்காக சென்ற பெண்கள், சாலையை கடக்க முயன்றுள்ளனர். அப்போது, அதிவேகமாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது பலமாக மோதியது. இதில், 5 பெண்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 27, 2024

அம்மா உணவகத்தில் சீலிங் விழுந்து பெண் படுகாயம்

image

தாம்பரம் மாநகராட்சி சார்பில், பம்மல் பகுதியில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை உணவகத்தின் சீலிங் திடீரென இடிந்து விழுந்தது. அங்கு பணியில் இருந்த பணிப்பெண் மீது விழுந்ததால், அவர் படுகாயம் அடைந்தார். உடனே, சக ஊழியர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

News November 27, 2024

செங்கல்பட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

image

வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்புள்ளது. இதனால், செங்கல்பட்டில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கும் என்பதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடல் சீற்றமாக இருப்பதால், மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள்.

error: Content is protected !!