Chengalpattu

News December 9, 2024

நிவாரண பொருட்கள் வழங்க த.வெ.க.வினருக்கு அனுமதி மறுப்பு

image

பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகியதால் பாதிக்கப்பட்ட பலர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களுக்கு பிரட், பிஸ்கட், ரஸ்க் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்க த.வெ.க., கட்சியினர், மருத்துவமனைக்கு நேற்று சென்றனர். அப்போது மருத்துவமனை நிர்வாகம் அவர்களுக்கு அனுமதி மறுத்தனர். இதனால், த.வெ.க.வினர் வெளியே வந்து நிவாரண பொருட்களை வழங்கினர்.

News December 8, 2024

முதல்வர் மருந்தகம் அமைக்க கால அவகாசம் நீட்டிப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘முதல்வர் மருந்தகம்’ அமைக்க விருப்பமுள்ள, பி.பார்ம் மற்றும் டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் www.mudhalvarmarundhagam.in.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு கடந்த 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரும் 10ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்க

News December 8, 2024

வேலை தேடுவோரை குறிவைத்து மோசடி: டிஜிபி

image

வேலை தருவதாக இணையம் மூலமாக விளம்பரம் செய்து, அதை நம்பி வரும் மக்களை, தங்களின் இடத்துக்கு வரவழைத்து சிலர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற மோசடிகளில் சிக்கிக் கொள்ளாமல் விழிப்புடன் இருக்க வேண்டும். இத்தகைய மோசடிகளுக்கு ஆளாகி இருந்தால் சைபர் க்ரைம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1930-ஐ அழைத்து புகார் தெரிவிக்கலாம். அல்லது www. cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம்.

News December 8, 2024

வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

image

தாம்பரம் மாநகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சிவக்குமார், மறைமலைநகர் நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், வருவாய் உதவியாளராக பணியாற்றி வந்த தண்டபாணி, மாங்காடு நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தாம்பரம் மாநகராட்சியில் உதவி பொறியாளராக இருந்த சந்தோஷ் குமார், திருநெல்வேலி மாநகராட்சி உதவி பொறியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News December 8, 2024

கூடுதல் பேருந்துகள் இயக்கம்: மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு

image

சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்தியில், சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில்கள் (டிச.8) முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மறு அறிவிப்பு வரும் வரை கால அட்டவணை மாற்றம் செய்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனவே நாளை முதல் சென்னை கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு இடையே ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 7, 2024

வரதட்சணை வாங்குவது சட்டப்படி குற்றம்- காவல்துறை விழிப்புணர்வு

image

தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் சார்பில், வரதட்சணை கொடுப்பதும், பெறுவதும் சட்டப்படி குற்றம் என்றும், வரதட்சணை பற்றிய புகாருக்கு 181 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும், புகார் செய்பவரின் தகவல் ரகசியம் காக்கப்படும் எனவும் சமூக வலைத்தளங்களில் விப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

News December 7, 2024

போலியான உதவி எண்கள்; சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருக்கும் உதவி எண்களில் பெரும்பாலானவை பொய்யான உதவி எண்களாகும். மேலும், பொய்யான உதவி எண்கள் மூலம் ஏமாற்றி, பணம் பறிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறுகின்றது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி செங்கல்பட்டு மாவட்ட காவல் சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 

News December 7, 2024

காவல் வாகனங்கள் ஏல விற்பனை

image

தாம்பரம் மாநகர காவல் துறை சார்பில் பயன்படுத்தப்பட்ட  இரு சக்கர, நான்கு சக்கர காவல் வாகனங்கள், பதுவஞ்சேரியில் உள்ள தாம்பரம் மாநகர காவல் ஆயுதப்படை வளாகத்தில் வருகின்ற 16.12.2024 அன்று முற்பகல் 10.00 மணியளவில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்கு வரும் 13ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 7, 2024

முன்னாள் படை வீரர்களின் நலனுக்காக நிதி வசூல்

image

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி நாடு முழுவதும், கொடி நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த கொடி நாளையொட்டி, செங்கல்பட்டில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஆட்சியரும், மாவட்ட முப்படை வீரர் வாரியத் தலைவருமான ச.அருண்ராஜ் இன்று (டிச.7) படைவீரர் கொடிநாள் நிதி வசூலை தொடங்கி வைத்து முதல் நிதியை வழங்கினார். அனைவரும் நிதி வழங்க வேண்டுமெனவும் ஆட்சியர் அறிவுறுத்தினார். ஷேர் பண்ணுங்க

News December 7, 2024

செங்கல்பட்டு அரசு அதிகாரி தற்கொலை

image

போரூர் ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக SRMC போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரனையில், இறந்தவர் போரூர் அம்பாள் நகரை சேர்ந்த செந்தில்வேல் என்பதும், இவர் செங்கல்பட்டு வணிக வரித்துறையில் உதவி கமிஷனராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும், கடன் பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

error: Content is protected !!