India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொடர் கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (டிச.12) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
பிறந்த நாளன்று போதைப்பொருள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேபோல் குற்றவாளிகள் ஏராளமானோர் போதை பொருள் பயன்படுத்துவதால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். பல லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாழ்க்கை ஒரு அழகான பயணம். போதை பழக்கத்தால் அதை அழிக்க வேண்டாம் என செங்கல்பட்டு காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில், அரசு உறுதிமொழிக் குழு கூட்டம், அதன் தலைவரும், பண்ருட்டி எம்.எல்.ஏ.,வுமான வேல்முருகன் தலைமையில் இன்று நடக்கிறது. கூட்டத்தில், மாவட்டத்தில் நடைபெறும் திட்டப்பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளன. மேலும், மாமல்லபுரம் கோவில் சுற்றுச்சுவர் புனரமைக்கும் பணி, மரகதப் பூங்காவில் ஒளிரும் பூங்கா ஆய்வு செய்யப்பட உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் தற்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வேளச்சேரி, தரமணி, மேடவாக்கம், தாம்பரம், ஆதம்பாக்கம், சிட்லபாக்கம், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மடிப்பாக்கம், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மீனம்பாக்கம், சேலையூர், பெருங்களத்தூர், கிளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. உங்க ஏரியாவில் மழையா?
சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு மின்சார ரயில்களின் சேவை ஞாயிற்றுக்கிழமை மாற்றம் செய்யப்பட உள்ளதாக கடந்த டிச.6ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அனைத்து நாள்களிலும் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என சில ஊடங்களில் தவறுதலாக செய்தி வெளியானது. இந்த மாற்று அட்டவணை ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் ரயில்களுக்கு மட்டுமே பொருந்தும். திங்கள் – சனிக்கிழமை வரை வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இப்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று இருக்கிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மிதமான மழை பெய்யும். இது கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி நகரும்போது, தமிழகத்தில் அந்தந்த இடங்களில் கனமழை பெய்யும். செங்கல்பட்டில் மிதமான மழையும் சில பகுதிகளில் கனமழையும் பெய்யும். ஷேர் பண்ணுங்க
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் கோரிக்கை மனுக்களைப் பெறுதல் நிகழ்வு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பங்கேற்று உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி 376 கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
இருசக்கர வாகனத்தில் செல்வோர் பெரும்பாலும் ஹெல்மெட் அணிவதில்லை. இதனால் விபத்து ஏற்படும்போது விரைவாக உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், தலைக்கவசம் அணிவதை குழந்தைகளுக்கும் சிறு வயதிலிருந்தே பழக்கத்தில் கொண்டு வருவதன் மூலம், வருங்கால தலைமுறையினரை சாலை விபத்துகளிலிருந்து பாதுகாக்கலாம் என செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
செங்கல்பட்டு, சதுரங்கப்பட்டினம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு சென்ற நிறை மாத கர்ப்பிணிக்கு மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. அப்பெண்ணிற்கு அதிக மூச்சு திணறல் ஏற்பட்டதால் அதிகாலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதனால் குழந்தை உயிரிழந்ததாக தந்தை மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
OLX செயலியின் மூலமாக குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்வதாக பொய்யாக பதிவேற்றம் செய்து விளம்பரப்படுத்தி நம்ப வைத்து ஏமாற்றி பணம் பறிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. எனவே, பொதுமக்கள் இதுபோன்ற செயல்களில் எச்சரிக்கையாக இருக்குமாறு செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அறிவித்துள்ளனர். உங்களை ஏமாற்றுவது போல் தெரிந்தால் உடனே பாதுகாப்பு உதவி எண்ணை உடனே அழையுங்கள்.
Sorry, no posts matched your criteria.