Chengalpattu

News December 18, 2024

அரசு பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

image

திருப்போரூர் வட்டத்திற்கு உட்பட்ட செம்பாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள மாணவ, மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்து மதிய உணவு வழங்கினார். கூடுதல் ஆட்சியர் அனாமிகா ரமேஷ், முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் உதயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News December 18, 2024

செங்கல்பட்டில் சாரல் மழை

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று காலை முதல் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக, வண்டலூர், தாம்பரம், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம், பெருங்களத்தூர், சிங்கப்பெருமாள் கோவில், கிளம்பாக்கம், மதுராந்தகம், அச்சிறுபாக்கம், சிட்லபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். உங்கள் ஏரியாவில் மழை பெய்கிறதா?

News December 18, 2024

செங்கல்பட்டில் வரும் 20ஆம் தேதி வேலை வாய்ப்பு முகாம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில், வரும் 20ஆம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் காலை 9 மணி – மதியம் 2 மணி வரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில், 50க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று 5,000 பணியிடங்களை நிரப்பப்பட உள்ளனர். 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் டிகிரி முடித்தவர்கள் வரை பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு, 044-27426020, 6383460933, 9486870577 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News December 18, 2024

செங்கல்பட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு

image

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (டிச.17) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது, அடுத்த இரு தினங்களில் மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதையடுத்து, செங்கல்பட்டு உள்பட 4 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

News December 17, 2024

புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

image

வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள 250க்கும் மேற்பட்ட மீனவ படகுகள் கடலுக்கு செல்லாமல் பாதுகாப்பான கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலையால் தொடர்ந்து பாதிக்கப்படுவதால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News December 17, 2024

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு திருக்குறள் வினாடி வினா போட்டி

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டி வரும் 21ஆம் தேதி 2 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்புவோர் 8220738038 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் என்று மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News December 17, 2024

செங்கல்பட்டில் தற்காலிகமாக உருவாகியுள்ள நீர்வீழ்ச்சி!

image

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்து 2 கி.மீ தொலைவில் உள்ளது தையூர் ஊராட்சி, வடகிழக்கு பருவமழை பெய்யும் போது இங்குள்ள ஏரி முழுவதும் நிரம்பி தற்காலிக நீர்வீழ்ச்சி உருவாகி பொதுமக்களை கவர்ந்து வருகிறது. எட்டு அடி உயரத்தில் உள்ள இந்த நீர்வீழ்ச்சியில் சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வருபவர்கள் ஆனந்த குளியல் குளித்து மகிழ்கின்றனர். இந்த வாரம் முழுவதும் தண்ணீர் வரும் என்று தெரிகிறது.

News December 16, 2024

செங்கல்பட்டில் டிச.20ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

image

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் டிச.20ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், நடத்தப்பட உள்ளது. வேலை தேடுவோர், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து இந்த முகாமில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.

News December 16, 2024

தாய்லாந்துக்கு கூடுதல் விமான சேவை

image

தாய்லாந்து நாட்டின் பாங்காக்கிற்கு இன்று முதல், சென்னையில் இருந்து கூடுதலாக ஒரு விமானம் இயக்கப்படுகிறது. அதைப்போல் ஹாங்காங்கிற்கு செல்லும் விமானத்தில், கூடுதல் பயணிகள் பயணிக்க வசதியாக, பெரிய ரக விமானம் இயக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள், தொழில்துறை பயணிகள் அதிகரிப்பால், சென்னை விமான நிலையத்தில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News December 16, 2024

வரும் 19ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

image

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஊராட்சிகளில் சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சிக்கும் தமிழக அரசைக் கண்டித்து, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. வரும் டிச.19ஆம் தேதி காலை 10 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

error: Content is protected !!