Chengalpattu

News December 22, 2024

கிறிஸ்துமஸை முன்னிட்டு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே

image

கிறிஸ்துமஸை முன்னிட்டு, தாம்பரம் – குமரி – கொச்சுவேலி இடைய சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. தாம்பரத்திலிருந்து டிச.23 மற்றும் 30 ஆகிய தேதி நள்ளிரவு 12.35 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், மறுநாள் பிற்பகல் 12.15 மணிக்கு குமரி சென்றடையும். மறுமாா்க்கமாக, குமரியில் இருந்து டிச.25 மற்றும் ஜன.1 ஆகிய தேதிகளில் மாலை 4.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் அதிகாலை 4.20க்கு தாம்பரம் வந்தடையும்.

News December 22, 2024

இன்ஸ்டாகிராம் கணக்குகளை PUBLIC-ஆக வைக்காதீர்கள்

image

பொதுமக்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் செயலியின் கணக்குகளை PRIVATE-ஆக வைப்பது நல்லது என்றும், PUBLIC கணக்குகளில் உள்ள புகைப்படங்களை தவறாக சித்தரித்து மிரட்டி சிலர் பணம் பறிக்கும் சைபர் குற்றங்கள் அரங்கேறி வருவதாக செங்கல்பட்டு மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர். அவ்வாறு, சைபர் குற்றங்கள் நடந்தால், 1930 என்ற எண்ணு அல்லது www.cybercrime.gov in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News December 22, 2024

புத்தாண்டு: கடைபிடிக்க வேண்டிய விதிகள்

image

புத்தாண்டு வாழ்த்து சொல்லும் சாக்கில் சுற்றுலா வரும் பெண்களைக் கேலி, கிண்டல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாமல்லபுரம் ஓட்டல்களில் டிச.31ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதி வழங்கக் கூடாது. இரவு 12 மணிக்கு மேல் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது. கடற்கரை ரிசார்ட்களில் தங்கி உள்ளவர்கள் இரவு 12 மணிக்கு மேல் அறைகளை விட்டு வெளியே வரக்கூடாது. ஷேர் பண்ணுங்க

News December 21, 2024

மாடுகளை திருடிய இறைச்சிக் கடை உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது

image

கூடுவாஞ்சேரி, பெருமாள் நல்லூர், காயரம்பேடு போன்ற பகுதிகளில் தொடர்ந்து ஆடு, மாடுகள் திருடு போனதாக ஏராளமான புகார்கள் காவல் நிலையத்துக்கு வந்தது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது ஆப்பூரை சார்ந்த கலைவாணன்(32), காட்டாங்கொளத்துாரை சார்ந்த மாட்டு இறைச்சி கடை உரிமையாளர் சங்கர்(47) ஆகியோர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், இருவரும் செய்து செய்யப்பட்டனர். 

News December 21, 2024

பயண நேரங்களில் ஹெட்-செட் வேண்டாம்: காவல்துறை 

image

பயண நேரங்களில் ஹெட்-செட் வேண்டாம் என்றும், கவனம் சிதறி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இ.சி.ஆர்., சாலை, ஓ.எம்.ஆர்., சாலை, தேசிய நெடுஞ்சாலை உள்ளதால் விபத்துக்கள் தொடர்ந்து அதிகரிக்கிறது. இதனை கட்டுப்படுத்த விழிப்புணர்வுகளை போக்குவரத்து போலீசார் ஏற்படுத்தி வருகின்றனர். ஷேர் பண்ணுங்க

News December 21, 2024

வரும் 31ஆம் தேதி அஞ்சல் குறைதீர் கூட்டம்

image

செங்கல்பட்டு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சண்முகசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வரும் 31ஆம் தேதி செங்கல்பட்டு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கோட்ட அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. தபால் சம்பந்தப்பட்ட புகார்களுக்கு, தொடர்புடைய ஆவணங்களை புகாருடன் இணைத்து வரும் 26ஆம் தேதிக்குள் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

News December 21, 2024

கிணற்றில் மூழ்கி பெண் உயிரிழப்பு

image

செய்யூர், கீழச்சேரி கிராமத்தில் உள்ள ஆஞ்சனேயர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி கல்பனா (28), நேற்று காலை வீட்டின் அருகே உள்ள கிணற்றில், துணி துவைக்கச் சென்றார். நீண்ட நேரமாகியும் கல்பான வீடு திரும்பாததால் கிணற்றில் மூழ்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. செய்யூர் தீயணைப்புத் துறையினர் கிணற்றில் மூழ்கிய கல்பனாவை சடலமாக மீட்டனர். இதுகுறித்து செய்யூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 21, 2024

போலி நீதிபதி கணவருடன் கைது

image

பூந்தமல்லியைச் சேர்ந்த கணபதி என்பவர், தன் மனைவி ரேவதி நீதிபதியாக இருப்பதாவும், ரூ.20 லட்சம் கொடுத்தால் ஐகோர்ட்டில் நீதிபதியின் உதவியாளராக வேலை வாங்கித் தருவதாகவும் கூறி, ஆவடியைச் சேர்ந்த ராஜேஷ் (37) என்பவரிடம் ரூ.20.76 லட்சம் வாங்கி மோசடி செய்துவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் மோசடி செய்த கணபதி, நீதிபதி என ஏமாற்றிய மனைவி ராதிகா (39) இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

News December 20, 2024

தாம்பரத்தில் 263 தெரு நாய்களுக்கு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை

image

தாம்பரம் மாநகராட்சியில் நேற்று முதல் இன்று வரை 265 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு 263 தெருநாய்களுக்கு நாய்கள் மையத்தில் கால்நடை மருத்துவக் குழுவினரால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சை முடிந்து ஐந்து நாட்கள் வரை பராமரிக்கப்பட்டு, உடல் தகுதி பெற்ற பின் நாய்க்கடி தடுப்பூசி போடப்பட்டு பிறகு பிடித்த இடத்திலேயே விடப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

News December 20, 2024

செங்கல்பட்டு காவல்துறையின் அறிவுரை பதிவு 

image

சாலையை கடக்கும்போது கவனம் தேவை என செங்கல்பட்டு மாவட்ட போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர் .அதன்படி1) சாலையில் நடந்து செல்லும்போது கைபேசியை பயன்படுத்தாதீர்.2) குழந்தைகளின் மேல் அதிக கவனம் செலுத்துங்கள்.3) வலது மற்றும் இடது பக்கம் பார்த்து சாலையை பாதுகாப்பாக கடப்பீர் என போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் அறிவுறுத்தி உள்ளனர்.

error: Content is protected !!