India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்டத்தில் முதலமைச்சரின் “மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” திட்டத்தின் கீழ் மண்புழு உரம் தயாரித்து மண் வளத்தினை மேம்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு மண்புழு உரப்படுகை வழங்கப்பட உள்ளதாக மாவட்ட வேளாண் இயக்குநர் பிரேம் சாந்தி தெரிவித்துள்ளார். ஒரு விவசாயிக்கு 2 மண்புழு உரப்படுகை 50% மானியத்துடன் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு உழவன் செயலி மூலம் அறிந்து கொள்ளலாம்.
மாமல்லபுரத்தில், அதிக அளவில் உணவு விடுதிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டும். தற்போதும் விளக்குகள் பிரகாசிக்கும் பரந்த புல்வெளி பகுதியில் சைவ, அசைவ உணவுகள், மது விருந்து, இசை, நடனம் என, கேளிக்கை கொண்டாட்டத்திற்கு விடுதி நிர்வாகம் தயார்படுத்தி வருகின்றன. இதில், முன்பதிவும் அதிகரித்து வருவதால், விடுதி நிர்வாகத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 359 ஊராட்சிகள் உள்ளன. அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 69 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு அடிப்படை வசதிகள் செய்ய ரூ.27.29 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. திட்ட பணிகள் தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதில் கான்கிரீட் சாலை, ரேஷன் கடை, அங்கன்வாடி மையம், சிமென்ட் சாலை, ஊராட்சி அலுவலகம், மழைநீர் கால்வாய், சிறுபாலம் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.
வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தென்மேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு ஆந்திர மற்றும் வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவுகிறது. இது, இன்று தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழகக் கரையை நெருங்கி வரக்கூடும். இதனால், இன்று செங்கல்பட்டு உள்ளிட்ட வடதமிழக கடலோரப் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை(டிச.23) மாலை 3 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நள்ளிரவு மையத்தில் மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் தலைமையில் குறை கேட்டு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் கோரிக்கை மனுக்களை பெறுகிறார். இந்த குறை கேட்பு கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்கின்றனர்.
படூர் ஊராட்சியில் வசித்து வரும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் – அருணா தம்பதியரின் இளைய மகன் ரக்ஷன் (6) தனியார் பள்ளியில் UKG படித்து வருகிறார். இவர் கைகளை பின்னால் கட்டிக் கொண்டு 25 மீட்டர் தூரத்தை 33 வினாடிகளில் நீச்சலடித்து கடந்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். இவரை பலரும் பாராட்டி வருகின்றனர். நாமும் பாராட்டலாமே. ஷேர் பண்ணுங்க.
விமானங்கள் தாமதம் அல்லது ரத்து போன்றவைகளால் பாதிக்கப்படும் பயணிகளுக்கு, இழப்பீடுகள் கொடுக்கப்படுவதாக பயணிகளை ஏமாற்றும் மோசடி கும்பல் அதிகரித்துள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்தில் இருந்து பேசுவது போல், போலியான செல்போன் அழைப்புகள் மூலம் பயணிகளிடம் பேசி அவர்களின் ஆதார் பான் வங்கிக் கணக்கு விவரங்களை சேகரிக்கும் மோசடி கும்பல் குறித்து, இந்திய விமான நிலைய ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – தென்மேற்கு திசையில் நாளை (டிச.24) தென்மேற்கு வங்கக் கடல் பகுதியை ஒட்டிய வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, நாளை (டிச.24) செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள்.
தாம்பரம் மாநகரத்தின் மதிமுக தோற்றுவிக்கப்பட்ட போது முதல் நகர செயலாளராக இருந்தவர் பழனி (80). இந்நிலையில் வயது மூப்பு காரணமாக கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்காமல் இருந்து வந்த அவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று காலை 10 மணி அளவில் அவர் காலமானார். அவரின் உடலுக்கு தாம்பரத்தை சார்ந்த அனைத்துக் கட்சி பிரமுகர்களும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கேரளாவைச் சார்ந்த விஷ்ணு (24) பம்மலை சார்ந்த கோகுல் (24) பெருங்குடியில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் இருவரும் இரு சக்கர வாகனத்தில் வேளச்சேரி சாலையில் மது போதையில் சென்றனர். பள்ளிக்கரணை அருகே வரும்போது சாலை தடுப்பின் மீது மோதியத்தில் தூக்கி வீசப்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கோகுல் தலை துண்டாகி உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.