India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ நோய் பரவுவதாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது ஒரு வகையான பாக்டீரியா தொற்று. ‘ரிக்கட்சியா’ எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள் மற்றும் உயிரினங்கள், மனிதர்களை கடிக்கும்போது இந்த நோய் ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, உடல் அரிப்பு ஆகியவை முக்கிய அறிகுறிகளாக உள்ளது. ஷேர் பண்ணுங்க
செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் 4ஆம் தேதி காலை 9 மணி முதல் 3 மணி வரை இளைஞர் திறன் திருவிழா செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. மத்திய அரசின் தீன்தயாள் உபாத்யாய கிராமின் கௌசல் யோஜனா திட்டத்திற்கு கீழ் நடைபெறும் இந்தத் திறன் பயிற்சியில் 8ஆம் வகுப்பு முதல் டிப்ளமோ படித்த மாணவர்கள் பங்கேற்கலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகம் வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை கண்டித்து பாமக மகளிரணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று பசுமை தாயகத்தின் தலைவர் சௌமியா அன்புமணி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு மத்திய மாவட்ட செயலாளர் காயார் லோ ஏழுமலை தலைமையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர் ஆகிய தாலுகாவில் உள்ள 19 கிராமங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், கிடங்குகள் அமைய உள்ளன. இதில் பெரியகயப்பாக்கம், லத்துர், நெல்லி ஆகிய 3 இடங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் கட்ட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மற்ற இடங்களில், நிலம் மாற்றம் செய்யப்பட்டதும் பணிகள் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
2025ஆம் ஆண்டின் ஆங்கிலப் புத்தாண்டு, நேற்று தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் கொண்டாட்டம் களைகட்டியது. முக்கிய சுற்றுலா இடமான மாமல்லபுரத்தில் குவிந்த பொதுமக்கள் கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு உள்ளிட்டவற்றை கண்டு ரசித்தனர். இங்குள்ள விடுதிகளில் நள்ளிரவில் வரவேற்பு கொண்டாட்டமும், பகலில் பயணியர் சுற்றுலாவும் களைகட்டியது.
செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து, அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறைக்கு தென் மாவட்டங்களுக்கு கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்ற பொதுமக்கள் விடுமுறை முடிந்து, நேற்று சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர். இதன் காரணமாக, ஆத்துார் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று இரவு 7 மணி வரை 30,000 வாகனங்கள் சென்னை நோக்கி சென்றன. போலீசார் போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர்.
சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த முகேஷ் என்பவரின் மகன்கள் நிதிஷ் (15), திவாஸ் (14), நேற்று (ஜன.1) புத்தாண்டை கொண்டாட, கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தனர். நேற்று மாலை, கல்பாக்கம் நகரியம் பகிங்ஹாம் கால்வாய் முகத்துவார பகுதி கடலில் குளித்தபோது, ராட்சத அலையில் சிக்கி இருவரும் உயிரிழந்தனர். போலீசார் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.
விஜய் படம் இருக்கும் போஸ்டர்களை ஒட்டக்கூடாது என துணை ஆணையர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது எனக் கூறி போஸ்டரை பழவந்தாங்கல் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பழவந்தாங்கல் மற்றும் பரங்கிமலை பகுதியில் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் போஸ்டர்களை ஒட்டிய தொண்டர்களை பழவந்தாங்கல் போலீசார் போஸ்டர்களுடன் காவல் நிலையம் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
மாடம்பாக்கம் டெலஸ் அவென்யூவை சேர்ந்தவர் விக்னேஷ் (37). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 29ஆம் தேதி திருப்பதிக்கு சாமி கும்பிட சென்றவர் இன்று காலை ஒரு மணி அளவில் வீட்டுக்கு திரும்பிய போது வீட்டில் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 16 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் செயல்பட்டு வரும், தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, குரூப் 4 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட உள்ளன. விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் சென்று பதிவு செய்யலாம். மேலும் அறிய 044- 27426020, 9486870577 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.