India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேடவாக்கம், செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி (62). இவர், நேற்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டு திரும்புகையில், வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே சென்று திருட முயன்றபோது சத்தம் கேட்டதால், மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவை திறந்து ஓடி, அங்கிருந்த ஏரியில் பதுங்கி உள்ளனர். பின், ட்ரோன் உதவியுடன், திருடர்களை பிடித்து மதுராந்தகம் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்தவுடன், தாம்பரம் மாநகராட்சியில் வரும் 2026இல் இணைக்கப்படும். பகுதிகள் விபரம்: ஊரப்பாக்கம், வண்டலூர், திருவஞ்சேரி, அகரம்தென், மதுரப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், சித்தாலப்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், மேடவாக்கம், நன்மங்கலம், கோவிலம்பாக்கம், திரிசூலம், முடிச்சூர், கவுல் பஜார், பொழிச்சலூர், மூவரசம்பட்டு, வேங்கடமங்கலம் ஆகும்.
சிகரம் தொட்ட பெண்முத்தமிழ்செல்வி தனது 6ஆவது சாதனை பயணமாக, அண்டார்டிகா கண்டம் வின்சன் மலை சிகரத்தை ஏறி சாதனை படைத்து நேற்று முன்தினம் (ஜன.6) தாயகம் திரும்பினார். அவரை, அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சிவ.வீ.மெய்யநாதன், தங்கம் தென்னரசு ஆகியோர் இன்று நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறினர். இந்த சந்திப்பின்போது, மாவட்ட குழுத் தலைவர் மனோகரன், கூடுவாஞ்சேரி நகராட்சி தலைவர் கார்த்திக் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
புதுச்சேரியில் இருந்து சென்னை விமான நிலையம் நோக்கி, கார் ஒன்று இன்று அதிகாலை சென்று கொண்டிருக்கிறது. காரை லட்சுமி காந்தன் என்ற இளைஞர் ஓட்டி சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக கார் மீது லாரி மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரை ஓட்டி வந்த இளைஞர் காருக்குள் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார். அவரை மீட்ட தீயணைப்பு துறையினர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். வரும் ஜன.13ஆம் தேதி வரை காலை 9 முதல் மாலை 6 மணி வரை விநியோகம் செய்யப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்பு ரேஷன் கடை விற்பனை முனைய இயந்திரத்தின் பயோமெட்ரிக் முறை மூலம் வழங்கப்படும். பொங்கல் பரிசு வழங்கப்பட்ட விவரம் குடும்ப அட்டைதாரர்களின் கைபேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
தமிழின் முன்னணி செய்தி நிறுவனமான Way2News Appல் திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர் உள்ளிட்ட தாலுகாக்களுக்கு செய்தியாளராக விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட லிங்கில் <
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் – 9498341045, வட்ட வழங்கல் அலுவலர் செங்கல்பட்டு – 9941183641, மதுராந்தகம் – 7397630313,திருக்கழுக்குன்றம் – 9865984506, திருப்போரூர் – 7200453440, வண்டலூர் – 9629749023, செய்யூர் – 9788264833 ஆகிய செல்போன் எண்கள் மூலம் பொங்கல் தொகுப்பு தொடர்பான புகார்கள் இருந்தால் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என செங்கல்பட்டு ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த 3ஆம் தேதி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்லாவரம் அடுத்த திரிசூலம் வைகை தெருவைச் சேர்ந்த பாபு என்பவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். 70% தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தச் சூழலில், சிகிச்சை பலனின்றி பாபு நேற்று (ஜன.6) உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த செங்கல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் ஆண்கள் 13,57,923. பெண்கள் 13,89,146 வாக்காளர்கள் ஆகும். இதர 481 என மொத்தம் 27,47,550 வாக்காளர்கள் உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6,90,958 வாக்காளர்கள் இருக்கின்றனர். 18-19 வயதுடையோர் 37,749 வாக்காளர்கள் உள்ளனர். ஷேர் பண்ணுங்க
செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், சாலை விபத்துகள் அதிகமாக உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, “இருசக்கர வாகனத்தில் செல்லும் பெற்றோர்கள் தலைக்கவசம் அணிவதுடன், தங்கள் உடன் வரும் குழந்தைகளுக்கும் தலைக்கவசம் அணிவிக்க வேண்டும். குழந்தைகளை பாதுகாப்பது பெற்றோரின் கடமை” என்று அறிவுறுத்தியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.