India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்டத்தில் திருவள்ளுவர் தினமான இன்று (ஜன.15) அனைத்து விதமான இறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி உள்ளிட்டவற்றின் இறைச்சியை விற்பனை செய்யக் கூடாது, கடைகளை திறந்து வைக்கவும் கூடாது, மீறி செயல்படுபவர்களின் கடைகளில் உள்ள இறைச்சியை பறிமுதல் செய்வதுடன் பொது சுகாதார சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழக அரசு கலை பண்பாட்டு துறை சார்பாக சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா ஜன.13 – 17 வரை சென்னையில் 18 இடங்களில் நடைபெற்று கொண்டிருக்கிறது. அழிந்த கிராமிய கலைகளை மீட்டெடுக்கும் வண்ணம் ஆண்டுதோறும் சென்னை சங்கமம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை அரசு இசை கல்லூரி வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
திருவள்ளுவா் தினமான (ஜன.15) செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பாா்கள், ஹோட்டல்களைச் சாா்ந்த பாா்களில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. இவை கட்டாயம் மூடப்பட வேண்டும். அவ்வாறு மூடப்படாமல், மதுபானம் விற்பனையில் ஈடுபடும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பாா்கள் மீது மதுபானம் விற்பனை விதிகள்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம் அருகே உள்ள பூதூர் மின்சாரக் கிளை வாரியத்தில் பணியில் இருந்த பாலூர் கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் 25 என்பவர் உயர் மின் கம்பத்தில் பனைமரம் ஓலை உரசி வந்த நிலையில் அதை வெட்டுவதற்கு மின்சாரம் துண்டிக்காமல் அப்படியே மின்கம்பத்தில் ஏறிபழுது பார்த்த போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொங்கல் முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த 13, 14ஆகிய தேதிகளில் இயக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கையான 2,092 பேருந்துகள் மற்றும் 2,311 சிறப்புப் பேருந்துகள் என 4,403 பேருந்துகளில் 2,42,715 பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை அதிகாலை 2 மணி வரை 15,866 பேருந்துகளில் 8,72,630 பேர் பயணித்துள்ளனர். மேலும் 3,21,645 பேர் முன்பதிவு செய்தனர்.
மழை வாழ்க.. மாநிலம் வாழ்க.. அது வழங்கும் கொடை வாழ்க உழவுத் தொழில் வாழ்க, உரம் வாய்ந்த மறம் வாழ்க, வழுவாத திராவிட ஆட்சி வாழ்க தமிழ் வாழ்க தமிழர்கள் வாழ்க என செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினரும், காஞ்சி வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளருமான வரலட்சுமி மதுசூதனன் பொங்கல் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மதுரை மாவட்டத்தில் மாநில அளவில் நடைபெற்ற குடியரசு தின விளையாட்டு போட்டிகளில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் பூப்பந்து விளையாட்டு போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் அவர்கள் பாராட்டி பதக்கங்களை வழங்கினார்.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் 10ஆம் தேதி 1,446 பேருந்துகளில் 57 ஆயிரம் பயணிகளும், 11- தேதி 1,680 பேருந்துகளில் 68 ஆயிரம் பயணிகளும், இன்று 13-தேதி தேதி 1,640 பேருந்துகளில் 65,000 பயணிகளும் சென்னையில் இருந்து தமிழகத்தில் பிற பகுதிகளுக்கு பயணித்துள்ளனர். மொத்தம் சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு ஆம்னி பேருந்துகளை சுமார் 1.90 லட்ச பயணிகள் பயன்படுத்தியுள்ளனர்.
முடிச்சூர் ஊராட்சியில் அன்னை இந்திரா நகர் மற்றும் ரங்கா நகர் பகுதிகளில் மக்கள் போகிப் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். மாசிலா போகியை கொண்டாடும் விதமாக எந்த பொருளையும் போட்டு எரிக்காமல் போகி கொண்டாடப்பட்டது. இதில், தீமைகள் ஓய்ந்து நன்மைகள் வளர்ந்திட வேண்டும் என உறுதிமொழி எடுத்து போகியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், 11, 12ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வரும் 23ம் தேதி ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்து உள்ளார். இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் அவரவர் பள்ளி, கல்லூரி முதல்வரிடம் பரிந்துரை பெற்று பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.