India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் களியப்பேட்டையை சேர்ந்தவர் சரவணன். இவர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றபோது, சிங்கப்பெருமாள்கோவிலைச் சேர்ந்த பிரவீன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவருக்கும் பிரச்சனை இருந்து வந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் சரவணனை நேற்றுமுன்தினம் பிரவீன் தனது நண்பர்களுடன் கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டார். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் <
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னையை நோக்கி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நேற்று (ஜன.16) ஆயிரக்கணக்கான பொதுமக்கள் படையெடுத்து வந்தனர். இதனால் சென்னைக்கு வரும் அனைத்து முக்கிய சாலைகளிலும், சுங்கச்சாவடிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, பெருங்களத்தூரில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்ததால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
பொங்கலை ஒட்டி தொடர் விடுமுறை விடப்பட்டதால் சுற்றுலா தலங்களில் பொதுமக்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இன்று ஒரு நாள் மட்டும் சுமார் 23 ஆயிரம் பேர் வருகை புரிந்துள்ளனர். மேலும் கடந்த சனிக்கிழமை 11ஆம் தேதி முதல் இன்று வரை 80 ஆயிரம் பேர் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காணும் பொங்கலையொட்டி பொதுமக்கள் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் மாமல்லபுரத்தில் சிற்பங்களை கண்டு ரசித்த பொதுமக்கள் அங்குள்ள கடற்கரையில் குவிந்தனர். கடற்கரை மண் தெரியாத அளவில் மக்கள் கூட்டம் நிரம்பி வழுகிறது. கடலில் குளிக்க வேண்டாம் என போலீசார் எச்சரித்து தடுப்பு அமைத்துள்ளனர். ஆனாலும் பொதுமக்கள் சிலர் தடுப்புகளை மீறி கடலில் நீராடி வருகின்றனர்.
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த 15 தமிழக மீனவர்கள், விமானம் மூலம் நேற்று (ஜன.15) இரவு சென்னை விமான நிலையம் வந்தனர். சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், விடுவிக்கப்பட்ட மீனவர்களை வரவேற்று தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.
உத்திரமேரூர் அருகே உள்ள ஏரியில் 12ஆம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களின் சடலம் முகம் எரிக்கப்பட்ட நிலையில் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ஏரியில் மிதந்த 3 சடலங்கள் மீட்கப்பட்டன. அவர்கள், பழையசீவரத்தை சேர்ந்த விஷ்வா, சத்ரியன், பரத் ஆகியோர் என்பது தெரியவந்தது. முன்பகை காரணமாக மூவரும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தனியார் நிறுவனம் சார்பில் கோவளத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்கப்பட்டது. இதில் ஒருவருக்கு ரூ.6,000 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. 1,000 அடி உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டரில் 5 நிமிடத்துக்கு ECR சாலையில் உள்ள இயற்கை காட்சிகளை கண்டுகளிக்கலாம். இந்நிலையில், சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் ஹெலிகாப்டரை இயக்கியதால் கலெக்டர் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவளத்தில் அண்மையில் தனியார் ஹெலிகாப்டர் மூலம் சுற்றுலா சவாரி தொடங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஹெலிகாப்டர் சவாரி நடத்துவதற்கு அந்த நிறுவனம் முறையாக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறவில்லை என திருப்போரூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திருப்போரூர் வட்டாட்சியர் நடராஜ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்த உரிய ஆவணங்கள் இல்லாததால் சீல் வைக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் திருவள்ளுவர் தினமான இன்று (ஜன.15) அனைத்து விதமான இறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி உள்ளிட்டவற்றின் இறைச்சியை விற்பனை செய்யக் கூடாது, கடைகளை திறந்து வைக்கவும் கூடாது, மீறி செயல்படுபவர்களின் கடைகளில் உள்ள இறைச்சியை பறிமுதல் செய்வதுடன் பொது சுகாதார சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழக அரசு கலை பண்பாட்டு துறை சார்பாக சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா ஜன.13 – 17 வரை சென்னையில் 18 இடங்களில் நடைபெற்று கொண்டிருக்கிறது. அழிந்த கிராமிய கலைகளை மீட்டெடுக்கும் வண்ணம் ஆண்டுதோறும் சென்னை சங்கமம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை அரசு இசை கல்லூரி வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
Sorry, no posts matched your criteria.