Chengalpattu

News January 22, 2025

பெருங்களத்தூரில் அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

image

தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூர் பகுதிகளில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாததை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 29ஆம் தேதி மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதில் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News January 22, 2025

செங்கல்பட்டு ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அரசு சாரா அமைப்புகளில் மற்றும் பொது நிறுவனங்களில் சமூக பொறுப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தலைமையில் இன்று (22.01.2025) நடைபெற்றது. இதில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அனாமிகா ராமேஷ், உதவி திட்ட அலுவலர் சரவணகுமார், மற்றும் நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News January 22, 2025

1 வயது குழந்தை தண்ணீரில் மூழ்கி பலி

image

காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பாலுார் அடுத்த மேலச்சேரி காவாங்கரை தெருவைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் (28) – ஜாய்ஸ் (25) தம்பதி. இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளன. இதில் ஒரு வயதுள்ள ஆண் குழந்தை அகஸ்டின் நேற்று முன்தினம் (ஜன.20) வீட்டின் வெளியே தெருக்குழாய் அருகே தண்ணீர் நிரப்பி வைத்திருந்த பக்கெட்டில் தலைகீழாக விழுந்து உயிரிழந்தது. இதுகுறித்து பாலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News January 22, 2025

சுவாச பிரச்னையால் தினமும் பல குழந்தைகள் சிகிச்சை

image

செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மருத்துவமனை, கிளினிக்குகளில், சுவாச பிரச்னையால் தினமும் பல குழந்தைகள் சிகிச்சைக்கு வருவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். நிமோனியா பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்றுகளால், நுரையீரல் திசுக்களில் ஏற்படும் தொற்று தற்போது தீவிரமடைந்து உள்ளது. குறிப்பாக, டெங்கு, கொரோனா, டைப்பாய்டு, மலேரியாவால் பாதிக்கப்பட்டோருக்கு, நிமோனியா பாதித்தால் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும்

News January 22, 2025

வறட்டு இருமல் அதிகரிப்பு

image

குளிர்காலம் தொடங்கிய நிலையில், பெரும்பாலான குழந்தைகள் காய்ச்சல், சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரவில் வறட்டு இருமலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, அலட்சியம் காட்டாமல் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். 2 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, உடல் வலி, தொண்டை வலி, வறட்டு இருமல், சளியுடன் கூடிய காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

News January 21, 2025

7 வயது சிறுமி பலாத்காரம்; ஆயுள் தண்டனை

image

காஞ்சிபுரம் அருகே 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த முருகன் (39) என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. முருகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் 2019-ல் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்றம் முருகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.

News January 21, 2025

சிறந்த மக்கள் பணிக்குசேவை ரத்னா விருது

image

தமிழக அளவில் மிகச்சிறந்த மக்கள் பணியாற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் சேவை ரத்னா விருது வழங்கப்பட்டது. இதில் தமிழக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 நகர மன்ற உறுப்பினர்களில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் நகராட்சி 13வது வார்டு நகர மன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தேவி வரலட்சுமி கோபிநாத்துக்கு சேவை ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

News January 21, 2025

பொத்தேரியில் இன்று மின்தடை 

image

பொத்தேரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக இன்று (ஜன.21) பொத்தேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தைலாவரம் ஜி.எஸ்.டி சாலை, மேற்கு பொத்தேரி, கிழக்கு பொத்தேரி, வல்லாஞ்சேரி, வள்ளலார் நகர், மாடம்பாக்கம் ஒரு பகுதி, குத்தனூர், மாணிக்கபுரம், திருத்தவேளி ஆகிய இடங்களில் இன்று (ஜன.21) 9-3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..

News January 21, 2025

ரயில் தண்டவாளம் அருகே ஆண் சடலம்; போலீசார் விசாரணை

image

மறைமலைநகர் ரயில் நிலைய தண்டவாளம் அருகே இறந்த நிலையில், ஆண் சடலம் கிடப்பதாக, நேற்று தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு பயணியர் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். இறந்த நபர் மண்ணிவாக்கம், புவனேஸ்வரி நகரை சேர்ந்த மணிகண்டன்(44) என தெரிய வந்தது. அவர் தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி உயிரிழந்தாரா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 20, 2025

நந்திவரத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த நர்ஸ்

image

கூடுவாஞ்சேரி அடுத்த நந்திவரத்தை சேர்ந்த அரோண்ராஜ்(40). இவரது மனைவி சுமதி(38). அங்குள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று இரவு கணவர் இல்லாத நேரத்தில் சுமதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சுமதியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!