India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்மேல்பாக்கத்தில் உள்ள மருத்துவ கழிவுகள் எரியூட்டும் இடத்தில், தமிழக போதைத்தடுப்பு நுண்ணறிவு பிரிவு சார்பில், கைப்பற்றப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் நேற்று (ஜன.24) எரித்து அழிக்கப்பட்டன. சென்னை, கோவை, சேலம், மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட சுமார் 1,400 கிலோ கஞ்சா மற்றும் 75 கிலோ ஹாஷிஷ் ஆயில் ஆகியவை தீயில் போட்டு எரிக்கப்பட்டன.
வல்லம் ஊராட்சியில் உள்ள நேரு நகர் ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பை, கலெக்டர் அருண்ராஜ் கடந்த 9ஆம் தேதி தொடங்கி வைத்தார். அதன்பின், மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாவில் நேற்று முன்தினம் வரை லட்சத்து 58,962 ரேஷன் கார்டுதாரர்கள், பொங்கல் தொகுப்பு வாங்கி சென்றனர். பொங்கல் தொகுப்பு 77,099 பேர் வாங்கவில்லை. இவர்கள், இன்று ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட வழங்கல் அலுவலகத்தினர் அறிவித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாக்களில் 359 கிராம ஊராட்சிகள் உள்ளன. அவற்றில், நாளை (ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதில், ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, நடப்பாண்டிற்கான செயல் திட்டங்கள், ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், மாற்றுத்திறனாளிகளின் நலன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் தீர்மானங்களும் நிறைவேற்றலாம். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று தனியார் துறை மூலம் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் செங்கல்பட்டு ஆட்சியார் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் தேர்வா 46 பேருக்கு உடனடியாக வேலை ஆணை வழங்கப்பட்டது. இந்த ஆணைகளை மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் நாராயண சர்மா, வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், இன்று (ஜன.24) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 50க்கும் மேற்பட்ட முன்னனி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, 5,000 காலி பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வினை நடத்தி தேர்வு செய்ய உள்ளன. இந்த முகாமில் 8, 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வாராய் கலந்து கொள்ளலாம்.
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிவிப்பில், நாளை (24.01.25) காலை 10.30 மணியளவில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ‘டி’ பிளாக்கில் நடைபெற இருக்கிறது. எனவே மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன சுமார் 5000 காலி பணியிடங்கள் நிரப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது. வேலைநாடுவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும்படி மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். யூஸ் பண்ணிக்கோங்க. மறக்காம ஷேர் பண்ணுங்க.
செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையினர், மதுவிலக்கு வழக்குகளில் 26 பல்வேறு வகையான வாகனங்களை கைப்பற்றி உள்ளனர். தற்போது மொத்தமுள்ள 49 வாகனங்கள், செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலகம் அருகில் உள்ள ஐ.டி.ஐ., மைதானத்தில் வரும் 30ஆம் தேதி ஏலம் விடப்பட்ட உள்ளன. விருப்பம் உள்ளவர்கள், வரும் 28-29ஆம் தேதிகளில் மாலை 5 மணி வரை நுழைவு கட்டணமாக ரூ.1,000 செலுத்தி பங்கேற்கலாம் என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
5 மணி நேரத்தில் பெண் போலீஸ் உட்பட குறைந்தது 10 பேரிடம் 2 முகமூடி கொள்ளையர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 18ஆம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை கூடுவாஞ்சேரி, வண்டலூர், ஓட்டேரி, பீர்க்கன்கரணை, மணிமங்கலம், சேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த செயின் பறிப்பு நடந்துள்ளன. அதன் மதிப்பு 20 சவரன் ஆகும். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம் அழகேசன் தெருவில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 15க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் அங்கு மேலாளராக பணிபுரிந்து வந்த ராஜா (37) என்பவர் அங்கு பணிபுரிந்து வந்த 23 வயது பெண்ணை தொடர்ச்சியாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். புகாரின் பேரில் தாம்பரம் போலீசார் இன்று ராஜாவை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.