Chengalpattu

News February 1, 2025

தாம்பரம் செங்கல்பட்டு வழித்தடத்தில் புதிய பாதை

image

தாம்பரம் – செங்கல்பட்டு இடையே தற்போது 3 பாதைகள் உள்ளன இதனால் பண்டிகை நாட்களில் கூடுதல் ரயில் சேவை அதிகரிப்பதில் சிக்கல் இருந்து வருகிறது. இந்நிலையில் மேற்கண்ட வழித்தடத்தில் 4ஆவதாக புது பாதையை, ரயில்வேயுடன் இணைந்து அமைக்க தமிழக அரசு விருப்பம் தெரிவித்தது. தற்போது அதற்கு விரிவான திட்ட அறிக்கையை தெற்கு ரயில்வே, ரயில்வே வாரியத்துக்கு அனுப்பியுள்ளது. இதன் மதிப்பீடு ரூ.1,165 கோடி திட்டமிடப்பட்டுள்ளது.

News February 1, 2025

மாமல்லபுரம் கற்களை அடுக்கி கட்டப்பட்ட ஒரே கோவில்

image

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், பாறைகளை குடைந்து கோயில், சிற்பம் வடிப்பது பல்லவர் கால வழக்கமாக இருந்தது. ஆனால் மலை குன்றின் மீது இருக்கக்கூடிய ஒரே ஒரு சிறிய மண்டபம் மட்டும், பல்லவர் காலத்தில் பாறைகளை வெட்டி எடுத்து ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி கட்டப்பட்டுள்ளது. தற்போது பாழடைந்து இருக்கும் இந்த மண்டபத்தை சுற்றுலா பயணிகள் விரும்பி பார்த்து செல்கின்றனர். இங்கிருந்து கடற்கரையை ரசிக்கலாம்.

News February 1, 2025

இ.சி.ஆர். சம்பவம்: தலைமறைவு குற்றவாளி கைது

image

முட்டுக்காடு ஈ.சி.ஆர். சாலையில் கடந்த 25ஆம் தேதி இரவு இளம்பெண்கள் வந்த காரை, 2 கார்களில் வந்த 8 வாலிபர்கள் சாலையின் குறுக்கே வழிமறித்து மிரட்டியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கானத்தூர் போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து சந்தோஷ், தமிழரசு, அஸ்வின், விஸ்வேஷ் ஆகிய நால்வரை போலீசார் கைது செய்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில் தற்போது முக்கிய குற்றவாளியான சந்துரு என்பவரை கைது செய்துள்ளனர்.

News February 1, 2025

தாம்பரம் – கோவை இடையே ரயில் சேவை நீட்டிப்பு

image

சென்னை தாம்பரம் – கோவை இடையே போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து பிப்.14ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் மாலை 6 மணிக்குப் புறப்படும் தாம்பரம் – கோவை வாராந்திரச் சிறப்பு ரயில் (06184) மறுநாள் காலை 8.10 மணிக்கு கோவை நிலையத்தைச் சென்றடையும் என சேலம் ரயில்வே அறிவித்துள்ளது. ஷேர் செய்யுங்க

News February 1, 2025

பெண்கள் மீது மோதிய கல்லூரி வேன்: இருவர் பலி

image

திருப்போரூரில், தனியார் மருத்துவக் கல்லூரி வேன் சோழிங்கநல்லுாரிலிருந்து திருவான்மியூா் நோக்கி ராஜீவ் காந்தி சாலை வழியாக நேற்று (ஜன.31) காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, காரப்பாக்கம் அருகே சென்றபோது நிலை தடுமாறி அங்கு நின்றிருந்த 4 பேர் மீது வேகமாக மோதியது. இதில் ராதா(49), பார்வதி (49) ஆகிய இரு பெண்கள் உயிரிழந்தனர். சத்யா (36) சுபுத்பாங்கரா (38) ஆகியோா் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News February 1, 2025

மாமல்லபுரத்தில் போலீஸ் பாதுகாப்பு

image

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் திருமண விழாவில், துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இன்று பங்கேற்க உள்ளனர். இதனை முன்னிட்டு, மாமல்லபுரம் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பேரனுக்கு மாமல்லபுரத்தில் உள்ள கால்டன் சமுத்ரா கடற்கரை விடுதியில் இன்று (பிப்.1) காலை 12:45 மணிக்கு திருமணம் நடைபெற உள்ளது. 

News February 1, 2025

மன உளைச்சலில் பேராசிரியை தீக்குளிப்பு

image

ஜமீன் பல்லாவரம் பாரதி நகர் 2ஆவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் தனலட்சுமி (43). இவர், சென்னை அரசு பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். கணவரை விவாகரத்து செய்துவிட்டு கடந்த ஓராண்டாக தனியாக வசிந்து வந்த இவர், மன உளைச்சலில் நேற்று முன்தினம் (ஜன.31) மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். 

News January 31, 2025

ECR விவகாரத்தில் கல்லூரி மாணவர் உட்பட 5 பேர் கைது

image

ECRல் பெண்கள் சென்ற காரை பின் தொடர்ந்து சென்ற விவகாரத்தில் 6 தனிப்படை அமைத்து கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேரை கைது செய்து, 2 கார்களை பறிமுதல் செய்துள்ளதாக பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் இன்று (ஜன.31) மதியம் செய்தியாளரிடம் தெரிவித்தார். மேலும் கைது செய்யப்பட்ட சந்துரு மீது ஏற்கனவே ஆள்கடத்தல், ஏமாற்றுதல் உள்ளிட்ட வழக்குகள் இருப்பதாகவும், மேலும் 3 பேரை தேடி வருவதாகவும் கூறினார்.

News January 31, 2025

செங்கல்பட்டு கூடுதல் ஆட்சியர் மாற்றம்

image

தமிழகத்தில் திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு கூடுதல் ஆட்சியராக இருந்த ஆர்.அனமிகா பணியிட மாற்றம் செய்யப்பட்டு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

News January 31, 2025

ஜி.எஸ்.டி. சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்டம்

image

ஜி.எஸ்.டி. சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கிளம்பாக்கம் – மகேந்திராசிட்டி இடையே சுமார் ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் 18.4 கி.மீ., தூரத்திற்கு 6 வழி உயர்மட்ட சாலை அமைக்க நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. ஐயன்சேரி சந்திப்பு, சிங்கபெருமாள் கோவில் மற்றும் காட்டாங்குளத்தூர் ஆகிய பகுதிகளில் நுழைவு பாதை மற்றும் வெளியேறும் பாதைகள் அமைக்கப்படவுள்ளன. இதனால் நேரிசல் குறையும்.

error: Content is protected !!