India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிளாம்பாக்கத்தில் பேருந்துக்காக காத்திருந்த 16 வயது வட மாநில சிறுமி ஆட்டோவில் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோவில் கடத்தும்போது சிறுமி அலறல் கேட்டு பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் ஆட்டோவை பின் தொடர்ந்தனர். அப்போது, போலீசார் பின்தொடர்வதை அறிந்து கோயம்பேட்டில் அந்த சிறுமியை கடத்தியவர்கள் விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த ஆண்டில் சாலை விபத்துகளில், 404 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 6 ஆண்டுகளில் நடந்த மொத்தம் 7,454 விபத்துகளில், 2,136 பேர் உயிரிழந்துள்ளனர். 8,353 பேர் காயமடைந்து உள்ளனர். இதுகுறித்து செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ, சாலை விபத்துகளைக் குறைப்பதற்காக பள்ளி, கல்லூரி போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக கூறினார்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து பட்டா முதியோர் உதவித்தொகை ஓய்வூதியம் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவைகள் தொடர்பான 358 மனுக்கள் பெற்று அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். சார் ஆட்சியர் நாராயண சர்மா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. பொறியாளர்கள், அதிகாரிகள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் 11ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க
விருதுநகர் மாவட்டம் கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (24). இவர், சிங்கபெருமாள் கோவில் ஜெ.ஜெ.நகர் பகுதியில் தங்கி உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்தார். நேற்று (பிப்.2) மதியம் சிங்கபெருமாள் கோவில் – திருக்கச்சூர் சாலையில் டூவீலரில் உணவு டெலிவரி செய்ய சென்றபோது, காஞ்சிபுரம் சென்ற கன்டெய்னர் லாரி ஒன்று அவர் மீது மோதியது. இதில் வேல்முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகம் அருகில் உள்ள சிக்னலில், நேற்று (பிப்.2) செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த கண்டெய்னர் லாரி ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சிக்னலில் நின்றிருந்த 1 கார், 2 பைக்குகள் மீது மோதியது. இதில் சம்பத் என்பவரின் பைக் மீது மோதியதில், சம்பத்தின் மனைவி சசிகலா சாலையில் விழுந்து உயிரிழந்தார். கூடுவாஞ்சேரி போலீசார் கண்டெய்னர் லாரி டிரைவர் கருப்பசாமியை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள சிறிய மலை குன்றின் மீது, 2ஆம் நரசிம்ம வர்மன் பல்லவர் மன்னர் காலத்தில் செதுக்கப்பட்ட சிறிய திரௌபதி குளம் உள்ளது. வருடம் முழுவதும் நீர் தேங்கியுள்ள இந்த சிறிய குளத்தில், மன்னரும் ராணியும் நீராட பயன்படுத்தி உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வருடம் முழுவதும் நீர் தேங்கி இருக்கும் இக்குளத்தை சுற்றுலா பயணிகள் ஆர்வத்தோடு பார்க்கின்றனர். ஷேர் பண்ணுங்க
பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று (பிப்.1) கட்சியின் தலைவர் விஜய்யை, ஜப்பான் ரசிகைகள் சிலர் பார்க்க வந்திருந்தனர். அவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது ரசிகர்கள், தாங்கள் வைத்திருந்த போன், கையில் கட்டி இருந்த ஸ்மார்ட் வாட்ச் என்ற அனைத்திலும் விஜய்யின் போட்டோவை வைத்திருந்ததை காட்டி விஜய்யை நெகிழ வைத்தனர்.
ஊரப்பாக்கம் மின்வாரிய அலுவலக மேற்கு பிரிவில் கம்பியாளராக பணிபுரிந்து வந்தவர் பன்னீர்செல்வம் (49). இவர், நேற்று (பிப்.1) பணி முடிந்து வீடு திரும்பியபோது, ஊரப்பாக்கம் சிக்னல் அருகே செல்லும்போது, பின்னால் வந்த மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து அவரது பைக் மீது மோதியது. இதில் சாலையில் துாக்கி வீசப்பட்ட அவர் தலையில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கூடுவாஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (பிப்.1) இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.