India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூரை சேர்ந்த அஸ்வினி (19) என்பவர் படூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்துள்ளார். ஏகாட்டூரில் தனியார் பெண்கள் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.இந்த நிலையில் தனது தோழிகளுடன் விடிய விடிய மது அருந்திவிட்டு உறங்கிய அவர் மாலை ஆகியும் எழவில்லை.தகவலறிந்த போலீசார் அஸ்வினியின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கூரியர் மோசடிகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கூரியர் மூலம் பார்சல் அனுப்புவதாகவும், உங்கள் பெயரில் வந்துள்ள கூரியரில் போதைப்பொருட்கள் உள்ளது என்றும் பொய்யான தகவலை கூறி உங்களிடம் பணம் பறிப்பார்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழக விவசாயிகள் அரசின் அனைத்து விவசாய சலுகைகளையும் பெறுவதற்காக தனித்துவமான அடையாள எண் மற்றும் அட்டை வழங்கப்பட உள்ளது. மார்ச் 31ம் தேதிக்குள் அனைத்து விவசாயிகளும் தங்களுடைய நில உடைமைகளை பதிவு செய்யவேண்டும். செங்கல்பட்டு மாவட்ட விவசாய பெருமக்கள் உடன பதிவு செய்ய மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பா. பிரேம்சாந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பயனூர் கிராமத்தில் பிரசித்திபெற்ற எடீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. கிடைக்காத ( எட்டாத) தையும் கிடைக்க வைக்கும் சக்திவாய்ந்தவர் என்பதால், இத்தல இறைவன் எடீஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பலிப்பது சிறப்பு. வழக்கு விவகாரத்தில் நீதி கிடைக்காமல் திண்டாடுவோரும், சகல செல்வதை பெறவும் மக்கள் இங்கு வந்து தரிசனம் செய்கின்றனர். ஷேர் பண்ணுங்க.
ஒரகடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பூ வியாபாரம் செய்து வருபவரின் 9 வயது சிறுமியை, அதே பகுதியைச் சார்ந்த அருணாச்சலம் (60) என்ற முதியவர், தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருந்த போது சிறுமிக்கு தின்பண்டங்கள் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பேத்தி வயதுடைய குழந்தையை வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி நஷிமா பானு தீர்ப்பாளித்தார்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 475 மனுக்களை பெற்றுக்கொண்டு, மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். உடன் கூடுதல் ஆட்சியர் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வெ.ச.நாராயண சர்மா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காஜா சாகுல் ஹமீது ஆகியோர் உள்ளனர்.
செங்கல்பட்டில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 52 பணியிடங்கள். கணினி அறிவு, சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.12,000 – ரூ.29,380, உதவி போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.10,000 – ரூ.24,470 வரை சம்பளம். இன்றுக்குள் (மார்.3) இந்த <
செங்கல்பட்டு மாவட்டம் திரிசூலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு திரிசூலநாதர் திருக்கோயில்.இங்கு கல்வியில் சிறக்க வேண்டி வீராசன தட்சிணாமூர்த்தி இடம் வேண்டிக் கொள்ளப்படுகிறது. வேண்டிக் கொள்ளும் பிரார்த்தனை நிறைவேறினால் சாமிக்கு வஸ்திரம் அணிவித்து விசேஷ அபிஷேகம் செய்யப்படுகிறது.இரவு இல்லாத சரபேஸ்வரர் இங்கு அருள் பாலிக்கிறார்.தேர்வு எழுதிக் கொள்ளும் மாணவர்கள் இங்கு வந்து வழிபட்டுச் சென்றால் நன்மை பயக்கும்.
செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம், 15 வயது சிறுமியை மயக்க மருந்து கொடுத்து பாலாத்காரம் செய்த அரவிந்த் (24) என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.2019 நடந்த இந்த சம்பவத்தில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.நீதிபதி நசீமா பானு, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், ஆயுள் தண்டனை மற்றும் ₹3,000 அபராதம் விதித்தார். சிறுமிக்கு ₹4 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டது.
செங்கல்பட்டில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 52 பணியிடங்கள். கணினி அறிவு, சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.12,000 – ரூ.29,380, உதவி போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.10,000 – ரூ.24,470 வரை சம்பளம். நாளைக்குள் (மார்.3) இந்த <
Sorry, no posts matched your criteria.