Chengalpattu

News March 5, 2025

பேருந்தில் 5 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

image

செங்கல்பட்டு அருகே ஓடும் பள்ளி பேருந்தில் வைத்து 5 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது.பள்ளி பேருந்தில் இருந்து வீட்டிற்கு சென்ற சிறுமி தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் பற்றி தெரிவித்துள்ளார்.அதன் அடிப்படையில் பேருந்தின் கிளீனர் முருகன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

News March 5, 2025

கேஸ் வெடித்து பயங்கர விபத்து: 4 பேருக்கு தீக்காயம்

image

கோவிலம்பாக்கம் காந்திநகர் 14ஆவது தெருவில் வசித்து வருபவர் முனுசாமி. இவரது வீட்டில் நேற்றிரவு கேஸ் கசிந்துள்ளது. இன்று (மார்.5) காலை அவரது மனைவி ராணி சுவிட்சை ஆன் செய்தபோது, தீப்பிடித்தது. இதில், முனுசாமி, ராணி, மகள் சாந்தி, சாந்தியின் கணவர் ரகு 4 பேரும் தீயில் சிக்கிக் கதறியுள்ளனர். 4 பேரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். 4 பேருக்கும் 40% தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

News March 5, 2025

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தியா முழுவதும் 750 பணியிடங்கள், தமிழகத்தில் 175 பணியிடங்கள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலை.,த்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 20 – 28 வயது வரை இருக்க வேண்டும். மாதம் ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க

News March 5, 2025

விவசாயிகளின் விவரப் பதிவு 31ம் தேதி வரை சிறப்பு முகாம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் பதிவு சரிபார்த்தல் சிறப்பு முகாம், 31ம் தேதி வரை நடக்கிறது.செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் தங்களது கிராமங்களில் வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள். பொதுசேவை மையங்களுக்கு நேரடியாக சென்று தங்கள் நில உடைமை விவரங்கள், ஆதார், மொபைல் எண் ஆகிய விவரங்களை அளித்து வரும் 31ம் தேதிக்குள் பதிவு செய்யலாம்.

News March 5, 2025

சிறுமி பலாத்கார வழக்கில் முதியவருக்கு ஆயுள்

image

ஒரகடம் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி வீட்டின் அருகில்,கடந்த 2019 ஜூலை 10ம் தேதி விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது, காஞ்சிபுரம் அருணாச்சலம் (60) என்பவர் சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்தார்.இதுகுறித்த புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நசீமா பானு ஆயுள் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

News March 5, 2025

பச்சை பசேல் என உலா வரும் ஆட்டோ

image

தாம்பரம் அருகே ஜி.எஸ்.டி., சாலையில் குபேந்திரன் என்பவர் தனது ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளின் மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் தனது ஆட்டோ முழுவதும் பச்சை பசேலென தோட்டம் போல அழகுபடுத்தியுள்ளார். பசுமை மீது தீராத காதல் கொண்ட குபேந்திரன் இவ்வாறு வடிவமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த ஆட்டோ சாலையில் செல்லும் போது அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

News March 4, 2025

நோய் நீங்கி நீண்ட ஆயுள் பெற செய்யும் பெருமான்

image

செங்கல்பட்டு மாவட்டம், வல்லம் என்ற ஊரில் பல்லவ மன்னன் மகேந்திர வர்மனால் கட்டப்பட்ட குடவரை கோயில் உள்ளது. இங்குள்ள சிவபெருமானை தரிசனம் செய்தால் நோய் நீங்கி நீண்ட ஆயுள் பெறுவர். அம்பிகையை தரிசனம் செய்தால் திருமணம் எளிதில் கைகூடும். விநாயகரை வேண்டினால் காரியங்கள் யாவும் வெற்றிகரமாக முடியும். முருகரை வேண்டினால் நவக்கிரக தோஷம் நட்சத்திர தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News March 4, 2025

சித்தா, ஆயுர்வேதா படித்தவர்களுக்கு அரசு வேலை

image

அரசு மருத்துவமனைகளில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள 29 உதவி மருத்துவ அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன . அதிகபட்சமாக 59 வயது வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக இன்றைக்குள் (மார்ச்.04) விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு பின்னர் அறிவிக்கப்படும்.

News March 4, 2025

செங்கல்பட்டு: 9 சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

image

ஒரகடம் காவல் எல்லைக்குட்பட்ட வல்லக்கோட்டை கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 10.7.2019 அன்று அதேபகுதியை சேர்ந்த பூ வியாபாரி அருணாச்சலம் (65) என்பவரால் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று அருணாசலம் மீது குற்றம் நிரூபணம் ஆனதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர்.

News March 4, 2025

கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும்

image

போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, தென்மாவட்டங்களில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்பட்ட பேருந்துகள் இன்று (மார்ச் 4) முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலுருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு 80 வழித்தடங்களில் 589 பேருந்துகள் 3795 பயணநடைகள் இயக்கப்பட்டு வருவதுடன் கூடுதலாக 104 பேருந்துகள் 816 பயணநடைகள் இயக்கப்படும். ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!