India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருக்கழுக்குன்றம் அடுத்த கானக்கோயில்பேட்டை பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (80), தனது நிலம் தொடர்பான விசாரணைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முன்பு நேற்று (அக்.10) மாலை நேரில் ஆஜரானார். விசாரணை முடிந்து வெளியே வந்த அவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், செங்கல்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழையையொட்டி, மழைநீர் கால்வாய், சிறுபாலங்களை துார்வாரி சீரமைக்க வேண்டும் என கலெக்டர் அருண்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அச்சிறுபாக்கம், கருங்குழி, மாமல்லபுரம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் பேரூராட்சிகளில், மழைநீர் கால்வாய், சிறுபாலங்கள், நீர் நிலைகள் துார்வாரி சீரமைக்கப்பட்டன. தற்போது நடந்து வரும் பணிகளை விரைந்து முடிக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்சாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பகதூர் தபா (34). இவர், பனையூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் காவலாளியாக பணிபுரிந்து அங்கே குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி ஜமுனா நேற்று வேலைக்கு சென்றபோது, இவர்களது ஆண் குழந்தை தமன்தபா (4) அங்குள்ள நீச்சல் குளத்தில் இறங்கி விளையாடியுள்ளான். சிறிது நேரம் கழித்து, தந்தை பகதூர் தபா வந்து பார்த்தபோது, நீச்சல் குளத்தில் மூச்சி திணறி குழந்தை உயிரிழந்தது.
“நான் காவல்துறையில் இருந்து பேசுகிறேன். உங்களுடைய பார்சல் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அதில், போதைப் பொருள் இருப்பதை கண்டுபிடித்தோம். எனவே, விசாரணைக்கு காவல் நிலையம் வர வேண்டும்” எனக் கூறி உங்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் தற்போது உலா வருகிறது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி செங்கல்பட்டு மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களுக்கும் விடுமுறை கிடைக்கிறது. சிபிஎஸ்சி பள்ளிக்கு 10 நாட்கள் விடுமுறை தொடங்குகிறது. இப்படி தொடர் விடுமுறை வருவதால், சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் மக்கள் இன்று சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னைக்கு விமானத்தில் மலேசிய நாட்டிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.1.02 கோடி மதிப்புடைய தங்க நாணயங்கள், தங்கச் செயின்கள், இ-சிகரட்டுகள், ஐ போன்கள் ஆகியவற்றை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த 4 பேரை கைது செய்து, மேல் நடவடிக்கைக்காக சென்னை விமான நிலைய சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகளிர் திட்டம் சார்பில் சுய உதவிக்குழுக்களைச் சார்ந்த மகளிர்கள் பங்கேற்ற மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து உணவு திருவிழா நடைப்பெற்றது. இதில், செங்கல்பட்டு மாவட்டத்தை சார்ந்த மகளிர்குழுக்களைச் சார்ந்த பெண்கள், சிறுதானியங்களால் செய்யப்பட்ட பல்வேறு வகையான உணவுகளை காட்சிப்படுத்தினர். இந்த உணவு திருவிழாவை மகளிர் திட்ட அலுவலர் லோகநாயகி துவங்கி வைத்தார்.
சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சூர்யா (22). இவர், தைலாவரத்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இன்று காலை 5:30 மணி அளவில் கூடுவாஞ்சேரியில் உள்ள நண்பரை பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பினார். ஊரப்பாக்கம் அருகே வந்தபோது, சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்ட்டில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக, தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
திருக்கழுக்குன்றம் அடுத்த புதுப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் அப்பாஸ் அலி. செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளரான இவர், இன்று அதிகாலை திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பிற்கு, அதிமுக நிர்வாகிகள் பலர் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும், மூத்த நிர்வாகிகள் பலரும் நேரில் வந்து உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பூஜை திருவிழா மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கும் சுற்றுலா தளங்களுக்கும் பயணிகள் செல்வது வழக்கம். இதனால், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி, சேலம் விமானங்களில், பயணிகள் கூட்டம் அலைமோதுவதோடு, விமான டிக்கெட் கட்டணங்கள் 3 மடங்குக்கு மேல் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.