Chengalpattu

News October 13, 2024

செங்கல்பட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று கனம்ழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் காலை வேலைகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை வேலைகளில் செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் செய்யூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்.15ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News October 13, 2024

செங்கல்பட்டு – நெல்லை இடையே சிறப்பு ரயில்

image

சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறையை முன்னிட்டு, பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். பயணிகளுக்கு உதவும் வகையில், செங்கல்பட்டு திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் (06003) செங்கல்பட்டில் இருந்து இன்று மாலை 3:45 மணிக்கும், திருநெல்வேலியில் இருந்து (0600) நாளை 5:40 மணிக்கு புறப்படும். ஷேர் பண்ணுங்க

News October 13, 2024

உள்ளாடையில் ரூ.72 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்

image

மலேசியா நாட்டிலிருந்து சென்னை வந்த விமானத்தில், ரூ. 72 லட்சம் மதிப்புடைய 1 கிலோ சுத்தமான 24 கேரட் தங்கத்தை, உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்திக் கொண்டு வந்த சென்னையைச் சேர்ந்த 30 வயது உடைய சுற்றுலா பயணியை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். தங்கத்தை பறிமுதல் செய்த விமான நிலைய அதிகாரிகள், அந்தப் பயணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பல்லாவரத்தில் கால்வாய் சீரமைப்பு பணி தொடக்கம்

image

தாம்பரம் மாநகராட்சி 2ஆவது மண்டலம், 6ஆவது வார்டு ராஜாஜி குறுக்குத் தெருவில் உள்ள கால்வாயை சீரமைக்கும் பணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்று பல்லாவரம் எம்.எல்.ஏ இ.கருணாநிதி அந்தப் பணிகளை தொடங்கி வைத்தார். இதில், மண்டல குழுத் தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர் புசீராபானு நாசர், குடியிருப்போர் நல்வாழ்வு சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

News October 12, 2024

உள்ளாடையில் ரூ.72 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்

image

மலேசியா நாட்டிலிருந்து சென்னை வந்த விமானத்தில், ரூ. 72 லட்சம் மதிப்புடைய 1 கிலோ சுத்தமான 24 கேரட் தங்கத்தை, உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்திக் கொண்டு வந்த சென்னையைச் சேர்ந்த 30 வயது உடைய சுற்றுலா பயணியை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். தங்கத்தை பறிமுதல் செய்த விமான நிலைய அதிகாரிகள், அந்தப் பயணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

News October 12, 2024

செங்கல்பட்டு – நெல்லை இடையே சிறப்பு ரயில்

image

சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறையை முன்னிட்டு, பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். பயணிகளுக்கு உதவும் வகையில், செங்கல்பட்டு திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் (06003) செங்கல்பட்டில் இருந்து நாளை மாலை 3:45 மணிக்கும், திருநெல்வேலியில் இருந்து (0600) நாளை மாலை 5:40 மணிக்கு புறப்படும். ஷேர் பண்ணுங்க

News October 12, 2024

பல்லாவரத்தில் தமிழக வெற்றிக் கழக ஐடி Wing ஆலோசனை

image

தமிழக வெற்றிக் கழகம் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக நேற்று பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட பகுதி IT WING நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் மின்னல் குமார், மற்றும் மாவட்ட செயலாளர் அறிவானந்தம் தலைமை தாங்கி, மாநாட்டில் IT WING பிரிவின் செயல்பாடுகள் குறித்து அறிவுரை வழங்கினர்.

News October 11, 2024

செங்கல்பட்டு இரவு ரோந்து பணி விவரம்

image

செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் மாமல்லபுரம் (11.10.2024) ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செல்லும் காவலர்களின் விவரம், காவல் நிலையம் வாரியாக வெளியிடப்பட்டு உள்ளது. https://x.com/SP_chengalpattu/status/1844721246258278542?t=W5MohNjHAYi1WtMQTsvGOg&s=08 என்ற X பக்கத்தில் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News October 11, 2024

மீனவர் குடிசை எரிந்து ரூ.7 லட்சம் நாசம்

image

மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு மீனவர் பகுதியைச் சேர்ந்தவர் கேசவராம். இவர் வீட்டின் மாடியில், கீற்றுக்கொட்டகை அமைத்து வசித்தார். நேற்று கீற்றுக் கொட்டகையில் தீப்பற்றி, முற்றிலும் எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இந்த தீவிபத்தில், வீடு கட்டுவதற்காக வைத்திருந்த, ரூ.7 லட்சம், வீட்டு உபயோக பொருட்கள், மீனவர் சங்க உறுப்பினர் அட்டை, ஆதார் உள்ளிட்ட தீக்கிரையாகின.