India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக பொருளாதார ஆய்வறிக்கையை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இதில் கடந்த 2024 – 25ஆம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியானது, 5.97 லட்சம் கோடி ரூபாய். மேலும் தமிழகத்தின் 38 மாவட்டங்களில் முதன்மையானதாக செங்கல்பட்டு மாவட்டம் தனி நபர் வருமானத்தில் ரூ.6,47,962 ரூபாயில் உள்ளது. காஞ்சிபுரம் ரூ. 6,47,474 சென்னை மாவட்டம் ரூ.5,19,941 என முறையே 2, 3 இடத்தை பிடித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னை – செங்கல்பட்டு – திண்டிவனம் – விழுப்புரம் இடையே 167 கிமீ தூரத்திற்கும், சென்னை – காஞ்சிபுரம் – வேலூர் இடையே 140 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் மித அதிவேக ரயில்வே அமைப்பினை உருவாக்கிட சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் விரிவான சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இன்று பட்ஜெட் தாக்கலின் போது மெட்ரோ ரயில் வழித்தடத்தை விமான நிலையம் – கிளாம்பாக்கம் வரையிலும், கோயம்பேடு – ஆவடி – பட்டாபிராம் வரையிலும், பூந்தமல்லி – திருப்பெரும்புதூர் – சுங்குவார்சத்திரம் வரையிலும் நீட்டித்திடும் வகையில் விரிவான திட்ட அறிக்கையில் பெறப்பட்டுள்ளன. இவை ஒன்றிய அரசின் பங்களிப்பை பெறுவதற்காக விரைவில் அனுப்பப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
2025-26ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கான பட்ஜெட் தாக்கல் இன்று (மார்.14) சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில் தமிழ்நாட்டிற்கு வருகை புரியும் பிற மாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தமிழரின் தொன்மை மற்றும் தொடர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக மாமல்லபுரம் பகுதியில் தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகம் உருவாக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
சென்னை ஈசிஆரில் 4 வழித்தட உயர்மட்ட சாலை அமைக்கப்படும். மேலும், திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை ரூ.2,100 கோடியில் உயர்மட்ட நான்கு வழிச்சாலை அமைக்கப்படும் என்றும், குறிப்பாக, சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 4 வழிச்சாலை அமைக்க சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என்றும் 2025-26ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
2025-26ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கான பட்ஜெட் தாக்கல் இன்று (மார்.14) சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில், மூன்றாம் பாலினத்தவர்க்கு உரிய பயிற்சி வழங்கி ஊர்க்காவல் படையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 50 மூன்றாம் பாலினத்தவர்களை கொண்டு சென்னை தாம்பரம் ஆவடி மாநகரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
சென்னை மெட்ரோ ரயிலின் 3ஆவது கட்ட திட்டத்தில், தாம்பரத்தில் இருந்து கிண்டி வரை வேளச்சேரி வழியே மற்றும் கலங்கரை விளக்கத்தில் இருந்து உயர் நீதிமன்றம் வரை புதிய வழித்தடம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என 2025-26ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெட்ரோ திட்டங்கள் அறிவிப்பு வெளியானதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சென்னை பூந்தமல்லி – போரூர் மெட்ரோ வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். மேலும், விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ. 9335 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு – பட்டாபிராம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.9744 கோடியும், பூந்தமல்லி – ஸ்ரீபெரும்புதூர் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.8779 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கொளத்தூரில் அமைக்கப்பட்ட முதல்வர் படைப்பகம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 30 மாநகராட்சிகளிலும் அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மழை வெள்ள நீரை சேமிக்க சென்னையில் புதிய நீர்த்தேக்கமும், கோவளம் அருகே உபவடி நிலத்தில் 3,010 ஏக்கர் பரப்பில் 1.6 டி.எம்.சி. வெள்ள நீரை சேகரிக்கும் வகையில் ரூ.360 கோடியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும்.
திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று நான்கு வருடங்களாகும் நிலையில் இன்று கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்வதை முன்னிட்டு 2025 ஆம் ஆண்டுக்கான நேற்று பொருளாதார ஆய்வறிக்கையை முதல்வர் ஸ்டாலின் சமர்ப்பித்தார். அதன் தொடர்ச்சியாக இன்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். இதில் திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை தாம்பரத்தில் நிறுவப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.