Chengalpattu

News October 16, 2024

வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று விடுமுறை

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கனமழையை தொடர்ந்து இன்று வண்டலூர் பூங்காவுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. என்வே, பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளது.

News October 16, 2024

நடிகர் கருணாகரன் வீட்டில் திருடிய பணிப்பெண் கைது

image

காரப்பாக்கத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகர் கருணாகரன் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் சிறுக சிறுக நகையை திருடி வந்துள்ளார். இது தொடர்பான புகாரின்பேரில் கண்ணகி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைரேகை நிபுணர்கள் கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். இதில் வேலை செய்யும் பெண் திருடியது உறுதியானது. பின்னர், அவரை கைது செய்த 60 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.

News October 15, 2024

2,500 படகுகள் கரையில் நிறுத்தம்

image

வங்ககடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, மீனவர்கள்மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையின் அறிவித்துள்ளது. இதனால், மாமல்லபுரம், நெம்மேலி, கொக்கிலமேடு, கல்பாக்கம், புதுப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களின் 2,500 பைபர் படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 15, 2024

தாம்பரம் மாநகராட்சியில் அமைச்சர்கள் ஆய்வு

image

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் தா.மோ.அன்பரசன் ஆகியோர் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, அரசு அதிகாரிகள், அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். அப்போது, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து கேட்டறித்தனர்

News October 15, 2024

அதிக விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை

image

தமிழகம் முழுவதும் வரும் 18ஆம் தேதி வரை அதி கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழையால் பாதிக்கப்படும்போது மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கிடைக்காமல் திண்டாடுவர். இதனை பயன்படுத்தி சிலர் பால் உள்ளிட்ட அத்தியாயத்தை உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வார்கள். அவ்வாறு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

News October 15, 2024

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

image

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வரும் 18ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. முகாம் தொடர்பான விவரங்களுக்கு 044-27426020 மற்றும் 6383460933, 8838893259 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News October 15, 2024

சராசரியாக 39.10 மில்லி மீட்டர் மழைப்பதிவு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (அக்.14) காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை மழை பதிவான விவரம் (மி.மீ.): செங்கல்பட்டு 37, திருப்போரூர் 42.50, கேளம்பாக்கம் 28,60, திருக்கழுக்குன்றம் 42.40, மாமல்லபுரம் 63, மதுராந்தகம் 36, செய்யூர் 31, தாம்பரம் 32.30 என மொத்தம் 312.30 மழை பதிவாகியுள்ளது. சராசரியாக 39.10 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மகாபலிபுரத்தில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. ஷேர் பண்ணுங்க

News October 15, 2024

செங்கல்பட்டிற்கு நாளை ரெட் அலர்ட்

image

தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை முதல் அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், செங்கல்பட்டு உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளை (16ஆம் தேதி) ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும், இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 15, 2024

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுன் கனமழை

image

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் சார்பில் ரெட் அலார்ட் தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்தது. அதைத்தொடர்ந்து மாலை 7 மணிக்கு மேல் மாவட்டத்தின் பெரும்பலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பொய்தது.

News October 15, 2024

மாற்றுத்திறனாளி தனக்குத் தானே பெட்ரோல் ஊற்றி தற்கொலை

image

தாழம்பூர் அருகே காரணை வேம்புலி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜா(55). இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் தனது வாகனத்திலிருந்து பெட்ரோலை பிடித்து உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாழம்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.