Chengalpattu

News October 18, 2024

விராலூர் ஊராட்சியில் மழையினால் குடிநீர் தொட்டி இடிந்து விழுந்தது

image

விராலூர் ஊராட்சியில் வெற்றிக்காடு கிராமத்தில் கனமழை பெய்தால், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது. இதனால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். மேலும், இடிந்து விழுந்த குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு பதிலாக புதிய தொட்டி அமைக்க கோரிக்கை எழுந்துள்ளன.

News October 18, 2024

பழைய காவல் குடியிருப்பில் வெடித்த மர்மபொருள்!

image

மாமல்லபுரம் பழைய காவலர் குடியிருப்பு அருகில் இருந்த பாழடைந்த கட்டிடத்தில், பயங்கர சத்தத்துடன் மர்மபொருள் ஒன்று நேற்றிரவு வெடித்தது. இதில், கட்டிடத்தின் சுவர் இடிந்த நிலையில், மர்ம பொருள் வெடித்த அதிர்வினால் அருகில் உள்ள குடியிருப்புகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின. தகவல் அறிந்து அங்கு வந்த மாமல்லபுரம் டி.எஸ்.பி. ரவி அபிராம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

News October 18, 2024

தாம்பரம் மாநகராட்சிக்கு உதவி ஆணையர் நியமனம்

image

போடிநாயக்கனூர் நகராட்சி ஆணையராக இருந்த ஜி.ராஜலக்ஷ்மி, தாம்பரம் மாநகராட்சியின் உதவி ஆணையராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஒன்பது மாநகராட்சிகளுக்கு நகராட்சிகளில் பணிபுரிந்த ஆணையர்கள் பணியை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்க துறை சார்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News October 18, 2024

புலிப்பாக்கம் அருகே லாரி ஓட்டுநரை மிரட்டி வழிப்பறி

image

அரியலூரில் இருந்து சென்னைக்கு சிமெண்ட் லோடு ஏற்றி வந்த கடையநல்லூர் அடுத்த புளியங்குடியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் விஷ்ணுதேவா(40) செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் ஜி.எஸ்.டி சாலை அருகில் லாரியை நிறுத்திவிட்டு தூங்கியபோது, இன்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் இருவர் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் 1000 ரூபாயை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 17, 2024

உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

image

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாக வேலையின்றி உள்ள இளைஞர்களிடமிருந்து 01.10.2024 காலாண்டிற்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். டிசம்பர் 10ஆம் தேதிக்குள்ள விண்ணபிக்க வேண்டும்.

News October 17, 2024

தீபாவளிக்கு 10,500 பேருந்துகள் இயக்க முடிவு

image

தீபாவளி பண்டிகை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 16,500 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் வரும் 19ஆம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

News October 17, 2024

8 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிடை மாற்றம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் ச.அருண் ராஜ் உத்தரவின் பெயரில், இந்த பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்தூர், புனித தோமையார் மலை, ஊரக வளர்ச்சி முகமை மற்றும் ஊராட்சித் துறையில் பணியாற்றும் 8 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News October 17, 2024

ஜியோ நிறுவன அதிகாரி வீட்டில் ஐ.டி. சோதனை

image

கோவிலம்பாக்கத்தில் உள்ள சோபா அடுக்குமாடி குடியிருப்பில், மது என்பவர் தங்கியுள்ளார். இவரது வீட்டில் வருமான வரித்துறையினர் இரு சோதனை நடத்தி வருகின்றனர். இவர், ஜியோ நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், வருமான வரி செலுத்துவதில் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இன்று காலை 7:20 மணிக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் 8 பேர் தீவிர சோதனை நடத்தி வருவதாகத் தெரிகிறது.

News October 17, 2024

அடுத்தடுத்து 6 வாகனங்கள் முது மோதிய டேங்கர் லாரி

image

வடசென்னையில் இருந்து நிலக்கரி கழிவு சாம்பல் ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி ஒன்று உத்திரமேரூர் தனியார் சிமெண்ட் நிறுவனத்திற்கு நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி மறைமலைநகர் அருகே மெல்ரோசபுரம் சாலை சந்திப்பில் நின்றிருந்த தனியார் வேன், கார்கள், ஆட்டோ, பைக் என 6 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News October 17, 2024

பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்

image

செங்கல்பட்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என மாட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மற்றும் நேற்று முன்தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்று மாலை ஓரளவு மழை சீரானதால், இன்று வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும். ஷேர் பண்ணுங்க