India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவிலம்பாக்கம் பகுதியில் ஒரு வீட்டில் ரகசியமாக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா ஆகியவை விற்பனை செய்யப்படுவதாக பள்ளிக்கரணை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட வீட்டில் நேற்று இரவு ஆய்வு மேற்கொண்ட போது அரசால் தடை செய்யப்பட்ட 500 கிலோ குட்கா, பான் மாசாலா கைப்பற்றி முருகேசன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தாம்பரம் மாநகராட்சி ஆணையராக இருந்த அழகு மீனா கன்னியாகுமாரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அதேபோல் சேலம் மாநகராட்சி கமிஷனராக இருந்த பாலச்சந்தர் தாம்பரம் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சி ஆணையராக இன்று சி. பாலச்சந்தர் பொறுப்பேற்றுக்கொண்டார் அவர்களுக்கு சக அதிகாரிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் செங்கல்பட்டு முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, பொதுமக்கள் இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்.
அண்ணா பல்கலைக் கழக உறுப்பு கல்லூரியான எம்.ஐ.டி., கல்லூரி குரோம்பேட்டையில் இயங்கி வருகிறது. இக்கல்லூரி 1949, ஜூலை, 18ம் தேதி ராஜம் என்பவரால் தொடங்கப்பட்டது. இக்கல்லூரியின் 75ம் ஆண்டு விழா இன்று அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் வேல்ராஜ் தலைமையில் நடந்தது. இதில் கல்லூரி நிறுவனர் ராஜம் தபால் தலை மற்றும் 75ம் ஆண்டு விழா மலர் வெளியிடப்பட்டது.
தாம்பரம் மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து நாளை காலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் சிட்லபாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக அமைச்சர் அன்பரசன் கண்டம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 20 காவல் நிலையங்கள் உள்ளன. இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக 16 காவல் நிலையங்களில் பணிபுரியும் ஆய்வாளர்கள் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வி. சாய் பிரனீத் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்தரவைப் பெற்ற ஆய்வாளர்கள் உடனடியாக பணியில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொழிச்சலூர் ஊராட்சியில் தனியார் பள்ளியில் மக்களுடன் முதல்வர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று நிவர்த்தி செய்யும் முகாம் இன்று நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி ஆகியோர் கலந்துகொண்டு முகாமை தொடக்கி வைத்து பொதுமக்களிடம் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை, பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு மனுக்களை பெற்றார்.
TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தாம்பரம் ரயில் தண்டவாளங்களில் நடைபெறும் 2 ஆம் கட்ட பராமரிப்பு பணி காரணமாக ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை 23 நாட்களுக்கு 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் பயணிகள் வசதிக்காக சென்னை கடற்கரை – பல்லாவரம், பல்லாவரம் – சென்னை கடற்கரை, கூடுவாஞ்சேரி – செங்கல்பட்டு, செங்கல்பட்டு – கூடுவாஞ்சேரி இடையே 44 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
Sorry, no posts matched your criteria.