India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அடுத்த வில்லியம்பாக்கம் பகுதியில், ‘மக்களுடன் முதல்வர்’ நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. திம்மாவரம், ஆத்தூர் பாலூர், வில்லியம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளுக்கு (ஜூலை 25) நடைபெற்ற இந்த நிகழ்ச்சியினை, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தையொட்டி, கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்தப் பணிகளை முடித்து கொடுத்தவுடன் தமிழக அரசு, புதிய ரயில் நிலைய கட்டுமான பணிகள் தொடங்கும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் கிளாம்பாக்கம் ரயில் நிறுத்தம் நடைமுறைக்கு வந்து விடும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறியுள்ளார்.
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரனின் மாமனார் சுந்தரம், வயது மூப்பு காரணமாக நேற்று மாலை 7 மணி அளவில் காலமானார். அவரது உடலுக்கு அதிமுக நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அன்னாரை இழந்து வாடும் அன்பு சகோதரர் ராஜேந்திரனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டில் இன்று (ஜூலை 25) மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாள்களாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், செங்கல்பட்டில் இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யும் என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரனின் மாமனார் சுந்தரம் வயது முதிர்வால் நேற்று மாலை 7 மணி அளவில் காலமானார். அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அன்னாரை இழந்து வாடும் அன்பு சகோதரர் ராஜேந்திரனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் உறவினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

வார விடுமுறையை முன்னிட்டு செங்கல்பட்டில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து நாளை திருவண்ணாமலை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு 260 பேருந்துகளும், 27ஆம் தேதி 290 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. கோயம்பேட்டில் இருந்து வேளாங்கண்ணி, பெங்களூரு, நாகைக்கு 26, 27 ஆகிய தேதிகளில் தலா 65 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மேலும் தகவல்களுக்கு TNSTC-ஐ செக் பண்ணுங்க.
செங்கல்பட்டில் நாளை பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை (ஜூலை 26) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மூடிச்சூர், பழைய பெருங்களத்தூர், பார்வதி நகர், ராஜகீழ்பாக்கம், வேளச்சேரி, சித்தாலப்பாக்கம் மெயின் ரோடு, சிட்லப்பாக்கம், பாபு நகர், சித்தாலப்பாக்கம், மேடவாக்கம், பெரும்பாக்கம், முத்தமிழ் நகர், கோவிலம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரனின் மாமனார் சுந்தரம் வயது முதிர்வால் நேற்று மாலை 7 மணி அளவில் காலமானார். அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அன்னாரை இழந்து வாடும் அன்பு சகோதரர் ராஜேந்திரனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் உறவினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் (24.07.2024) இன்று இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களின் இலகுவான தொடர்புக்கு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://x.com/SP_chengalpattu/status/1816100217453949018?t=uIxEjclEBVWPZ_YxlJhiHw&s=08
என்ற எக்ஸ் பக்கத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் என செங்கல்பட்டு காவல் துறை தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.