India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்டத்தில், காட்டாங்கொளத்துார், புனிததோமையார் மலை, சித்தாமூர், லத்துார் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி, மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகம் ஆகியவற்றில் பணியாற்றியவர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர். ஏழு இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர் ஒருவர் என, மொத்தம் எட்டு பேருக்கு பதவி உயர்வு வழங்கி, கலெக்டர் அருண்ராஜ் நேற்று உத்தரவிட்டார்.
அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருட்கள் வழங்குவதை புகைப்படம் எடுத்து எக்ஸ் தளத்தில் பதிவேற்ற வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பின்னர் இதற்கு விலக்கு அளிக்கப்பட்டாலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் இதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டுமென ஆசிரியர்களுக்கு அழுத்தம் தரப்படுவதாக கூறப்படுகிறது, இதனால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சார்நிலைப் பணியாளர்கள் தேர்வு-II (Combined Civil Service Examination-II) மூலம் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 17 நேரடி உதவியாளர்களுக்கு ஆட்சியர் அருண்ராஜ் பணிநியமன ஆணைகளை நேற்று வழங்கினார்.
தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் மாற்றான் தாய் மனத்துடன் செயல்படுவதாக மத்திய அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்தது. அதன்படி, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் இன்று காலை தாம்பரத்தில் தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக பொருளாளரும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான டி.ஆர்.பாலு கண்டன உரையாற்றினார்
செங்கல்பட்டு நகரத்தின் மூத்த வழக்கறிஞரும், அச்சரப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சி.கணேசன் வயது முதிர்வின் காரணமாக நேற்று(ஜூலை 26) மாலை இறந்தார். இவரின் சொந்த ஊரான காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே வடக்குபட்டு கிராமத்தில் உள்ள இல்லத்தில், பொதுமக்களின் அஞ்சலிக்காக கணேசன் வைக்கப்பட்டுள்ளது. MGR ஆட்சி காலத்தில் 1980 – 84 ஆம் ஆண்டு அதிமுகவில் எம்எல்ஏவாக இருந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் அருகே தொழுப்பேடு சுங்கச்சாவடியில் நேற்று(ஜூலை 26) இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வந்த ரூ.30 லட்சம் பணம் மற்றும் அரை கிலோ தங்க நகைகள், கார் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி, அவற்றை எடுத்து வந்த நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் பாதுகாப்பற்ற பழுதடைந்த நிலையில் கைதிகளுக்கு போதிய அடிப்படை வசதி இல்லாத, கைதிகள் குறைவாக உள்ள மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ள சிறைகளை மூட சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் மதுராந்தகம் கிளைச் சிறை உட்பட 18 கிளைச் சிறைகளை மூட சிறைத்துறை ஏடிஜிபி மகேஷ்வர் தயாள் இன்று உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணியின் போது இன்று (ஜூலை 26) குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சென்னையில் இருந்து தென் மாவட்டத்தை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் சிங்கபெருமாள்கோவில் பகுதியில் மெதுவாக ஊர்ந்து செல்கின்றது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் (26.07.2024) இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களின் இலகுவான தொடர்புக்கு வெளியிடப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு
https://x.com/SP_chengalpattu/status/1816813377819210045?t=lxGXL84RyYKb33du0Rxjeg&s=08
என்ற எக்ஸ் பக்கத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் என செங்கல்பட்டு காவல் துறை தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் – 2023-24–ன்கீழ் உயிர்ம வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அருண்ராஜ் (ஜூலை26) குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இதில், வேளாண்மை இணை இயக்குநர் அசோக், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராஜேஸ்வரி, உதவி மண்டல மேலாளர் முத்தையா அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்
Sorry, no posts matched your criteria.