Chengalpattu

News August 3, 2024

லாரி மோதி கொரியர் வேன் டிரைவர் உயிரிழப்பு

image

புதுச்சேரியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (40). கொரியர் வேன் டிரைவரான இவர், இன்று அதிகாலை 2:15 மணிக்கு சென்னைக்கு கொரியர் எடுத்துக்கொண்டு சென்றார். அப்போது, செங்கல்பட்டில் இருந்து ஜல்லி ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று, செட்டிப்புண்ணியம் அருகே வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார், லாரி ஓட்டுநரான சேட்டு (41) என்பவரை கைது செய்தனர்.

News August 3, 2024

மாநகராட்சியை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

image

அனகாபுத்தூரில், சென்னை குடிநீர் வாரியம் பாதாள சாக்கடை பணிகளை நீண்ட நாட்களாக மேற்கொண்டு வருகிறது. பணிகள் நந்தை வேகத்தில் நடப்பதால், பல்வேறு சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தியும், அம்மா உணவகத்தை முடக்க நினைக்கும் திமுக அரசை கண்டித்தும், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், அனகாபுத்தூரில் இன்று (ஆகஸ்ட் 3) காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News August 3, 2024

மின்சார ரயில் சேவைகள் ரத்து

image

தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று (ஆக.3) முதல் 14ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், காலை 10.30 முதல் பிற்பகல் 2.30 வரையும், இரவு 10 முதல் 11.59 வரையும் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் பல்லாவரம் ரயில் நிலையம் வரையும், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும்.

News August 2, 2024

திமுகவில் அவசர செயற்குழு கூட்டம்: அன்பரசு அறிவிப்பு

image

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் ஆகஸ்ட் 4ஆம் தேதி அன்று 3.00 மணிக்கு பம்மலில் நடைபெற உள்ளது என மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார். இதில், கலைஞரின் 6ஆவது ஆண்டு நினைவு நாள் – அமைதி ஊர்வலத்தில் பங்கேற்பு, முதல்வர் நமது வருகை., இளைஞர் அணியில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது சம்மந்தமாக ஆலோசிக்கப்பட உள்ளன.

News August 2, 2024

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

image

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் திருவிழா நடைபெறுவதை ஒட்டி ஆகஸ்ட் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News August 2, 2024

செங்கல்பட்டில் இன்று இரவு 10 மணி வரை மழை

image

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகின்றது. இந்நிலையில், குமரி, நெல்லை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையுடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 2, 2024

நாளை முதல் 70 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

நாளை (ஆகஸ்ட் 3) முதல் 14ஆம் தேதி வரை காலை 9.30 மணி முதல் 13.30 மணி வரை பல்லாவரம் – கூடுவாஞ்சேரி இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பல்லாவரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு 30 பேருந்துகளும், பல்லாவரத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு 20 பேருந்துகளும், தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து தி.நகர், பிராட்வேக்கு 20 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

News August 2, 2024

செங்கல்பட்டில் இன்று இரவு 7 மணி வரை மழை

image

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகின்றது. இந்நிலையில், குமரி, நெல்லை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையுடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 2, 2024

வேன் மோதி சாப்ட்வேர் இன்ஜினியர் பலி

image

பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் சதீஷ் (27). சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் நேற்றிரவு வேளச்சேரி அருகே பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மயிலை பாலாஜி நகர் அருகே இரவு 12.45 மணியளவில், எதிரே வந்த வேன் ஒன்று அவர் மீது மோதியது. இடத்தில், அவர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவர் திருமலையை (42) கைது செய்தனர்.

News August 2, 2024

செங்கல்பட்டில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

image

படூர் புதிய பைபாஸ் சாலையில், நேற்றிரவு அதிவேகமாக சென்ற கார் ஒன்று விபத்திற்குள்ளானது. இதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரை ஓட்டிச்சென்ற சென்னையைச் சேர்ந்த சிவா, அந்தமானைச் சேர்ந்த கர்லின் பால் இருவரும், மருத்துவமனையில் தீவிர சிகிசிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கர்லின் பால் நள்ளிரவில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். <<13755147>>முந்தைய செய்தி<<>>

error: Content is protected !!