Chengalpattu

News January 6, 2026

BREAKING: செங்கல்பட்டில் மழை வெளுக்கும்!

image

தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் வரும் ஜன.10 அன்று மிக கன மழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜன-11 அன்றும் மழை இருக்குமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே ஜன.10க்கு மேல் செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலான மழையை எதிர்பார்க்கலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News January 6, 2026

செங்கை: இனி Whats app-ல் ஆதார் அட்டை!

image

செங்கல்பட்டு மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது இங்கே <>கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 6, 2026

செங்கை:பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

image

செங்கல்பட்டு மக்களே, பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 6, 2026

செங்கை: 8 பேரை துரத்தி துரத்தி கடித்த தெரு நாய்!

image

செங்கல்பட்டு, வெடால் கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளில் உலா வந்த வெறிநாய் ஒன்று தேவி(50) என்பவரின் காலை கடித்துவிட்டு தப்பியோடியது.இதைத் தொடர்ந்து ரத்தினம் (50), கண்ணப்பன்(55), முனியம்மாள் (60),சீதா 40) உள்ளிட்ட 8பேரை அந்த வெறிநாய் கடித்துள்ளது. மேலும் கட்டி வைக்கப்பட்டிருந்த மூன்று பசு கன்றுகளையும் கடித்துள்ளது. காயமடைந்தோர் இடைக்கழிநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

News January 6, 2026

செங்கை: Spam Calls-க்கு இனி ‘End Card’!

image

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் செங்கல்பட்டு மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 6, 2026

செங்கை: இன்ஸ்டா live-ல்; தண்டவாளத்தில் தலை!

image

செங்கல்பட்டு அண்ணா நகரைச் சேர்ந்த பெயிண்டர் ஜெகதீஸ்வரன் 22, காதலித்துத் திருமணம் செய்த கொண்டார். அதன் பின் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை, “21 வயதுக்கு முன் யாரும் திருமணம் செய்ய வேண்டாம்; 25 வயதுக்கு மேல் செய்தால் தான் வாழ்க்கை சரியாக இருக்கும்” என இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டார். பின்னர், விரைவு ரயில் முன் பாய்ந்தார்.ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 6, 2026

செங்கை: தூக்கி வீசப்பட்டு வாலிபர் பலி!

image

ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஸ்டீபன் ராஜ் (30), கொளத்தூரில் நேற்று ஒரு கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 6, 2026

செங்கை: தூக்கி வீசப்பட்டு வாலிபர் பலி!

image

ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஸ்டீபன் ராஜ் (30), கொளத்தூரில் நேற்று ஒரு கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 6, 2026

செங்கை: வீட்டில் கேஸ் வெடித்து குழந்தை பலி!

image

காட்டாங்குளத்தூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாரதி, நேற்று முன்தினம் பால் காய்ச்ச அடுப்பை பற்றவைத்தபோது வீடு முழுவதும் தீப்பற்றியது. இதில் அவரும், தூங்கிக்கொண்டிருந்த அவரது மகன் திருக்குமரனும் பலத்த காயமடைந்தனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் திருக்குமரன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். தந்தை பாரதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

News January 6, 2026

8 பேரை கடித்த வெறிநாய் மக்கள் பீதி

image

செங்கல்பட்டு, வெடால் கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளில் உலா வந்த வெறிநாய் ஒன்று தேவி(50) என்பவரின் காலை கடித்துவிட்டு தப்பியோடியது.இதைத் தொடர்ந்து ரத்தினம் (50), கண்ணப்பன்(55), முனியம்மாள் (60),சீதா 40) உள்ளிட்ட எட்டு பேரை அந்த வெறிநாய் கடித்துள்ளது கட்டி வைக்கப்பட்டிருந்த மூன்று பசு கன்றுகளையும் கடித்துள்ளது. காயமடைந்தோர் இடைக்கழிநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

error: Content is protected !!