India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் நேற்று ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் ராஜ் தெரிவித்தார். அதனை ஈடு செய்யும் விதமாக வரும் 31ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அன்று அனைத்து பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களும் இயங்கும். விடுமுறை என்று நினைத்திட வேண்டாம்.
செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முத்தமிழ் செல்வி (35), மலையேற்ற வீராங்கனையான இவர் இதுவரை ஐந்து கண்டங்களில் உள்ள உயரமான மலைச் சிகரங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து ஆறாவது முறையாக நவம்பர் மாதம் மற்றொரு சிகரத்தில் ஏற இருக்கிறார். அவருக்கு செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் இன்று ஊக்கத்தொகையாக ரூ.1 லட்சம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையால் இன்று 30 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலாக தற்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுராந்தகம், கருங்குழி, சித்தாமூர், மேலவளம்பேட்டை, மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம், செய்யூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த அஜீத் என்பவர் தனது நண்பர்கள் ஏழு பேருடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வயல்வெளி பகுதிக்கு சென்று மது அருந்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதுபோதையில் இருந்த பிரதீப், கார்த்திக் என்ற 2 பேர் அருகிலுள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளனர். இதில் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து, கிளாம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க https://sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். மேலும், மாவட்ட விளையாட்டு அலுவலர் 04427238477, அல்லது 7401703461, 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். முன்பதிவு செய்திட கடைசி நாள்.25.08.2024 ஆகும். இந்த அறிவிப்பை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் வெளியிட்டுள்ளார்.
தாம்பரம் மின்பாதையில் பராமரிப்பு நடைபெற்று வருவதால், 55 மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதற்காக, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகனங்கள் ஊர்ந்தபடியே செல்கின்றன.
தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று முழுவதும் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூவத்துார் அடுத்த பாக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (35). எலக்ட்ரிஷியனான இவர், நேற்று (ஆகஸ்ட் 6) பரமண்கேணியில் உள்ள உணவகத்தில் பார்சல் வாங்கிக்கொண்டு தனது பைக்கில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, பயணவழி உணவகத்தின் எதிரே சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற அரசு பேருந்து, ராஜேஷ் சென்ற பைக்கின் மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
செங்கல்பட்டில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர மேல் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த கனமழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஒரு சில மாவட்டங்களில் மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் குடையுடன் வெளியே செல்லுங்கள்.
ஆடிப்பூரம் திருவிழா என்பது மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் மிகவும் விசேஷமானது. அந்த விழாவை முன்னிட்டு இன்றுஆகஸ்ட் 6ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இன்று பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது. விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வேலைநாள் என மாவட்ட ஆட்சியர் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.