India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 20 காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த தனிப்பிரிவு காவலர்களை, நேற்று ஆகஸ்ட் 8ஆம் தேதி பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரனீத் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட முழுவதும் கள்ளச்சாராயம், கஞ்சா, பான் மசாலா, குட்கா விற்பனையை கட்டுப்படுத்த மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்கவே இந்த பணியிட மாற்றம் என்று காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
24 காவல் அதிகாரிகளுக்கு காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கி, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தின் சைபர் கிரைம் கூடுதல் காவல் கணிப்பாளராக பணிபுரிந்து வந்த கார்த்திகேயனுக்கு, மாவட்ட கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அவர் தாம்பரம் மற்றும் பள்ளிக்கரணை காவல் துணை ஆணையராக தற்போது பணியமர்த்தப்பட்டுள்ளார்.
இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கிளாம்பாக்கத்திலிருந்து மதுரை, நெல்லை, குமரி, தூத்துக்குடி, திருச்சி, கோவை, தி.மலை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 275 பேருந்துகளும், நாளை 315 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. கோயம்பேட்டில் இருந்து தி.மலை, நாகை, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு இன்று 55 பேருந்துகளும், நாளை 55 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. லேசாக பெய்த மழை பின்னர் கனமழையாக மாறி விடிய விடிய மழை பெய்தது. குறிப்பாக, பல்லாவரம், மதுராந்தகம், மாமல்லபுரம் ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தத்தால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அவ்வப்போது மழை பெய்து வருவதால், பொதுமக்கள் குடையுடன் வெளியே செல்லுங்கள். உங்க பகுதியில் மழை பெய்ததா?
சுதந்திர தினத்தை முன்னிட்டு, செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி மைதானத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரங்குகள் அமைத்தல், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், குடிநீர் சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
மாதம்பாக்கம் அருகே 13 வது மாடியில் இருந்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் வெள்ளூருதி பகுதியைச் சேர்ந்த சிங்கம் வெங்கட் ரெட்டி(18) என்ற மாணவர் தாழம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். இந்நிலையில், கல்லூரில் செல்போன் பயன்படுத்த தடை விதித்து செல்போனை நிர்வாகம் வாங்கியதால் மனம் உடைந்த அவர் 13 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
மாடம்பாக்கம் பிரதான சாலையில் இன்று தனியார் நகைக்கடை திறப்பு விழாவில் நடிகை நமிதா கலந்து கொண்டு கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை நமிதா, மீண்டும் நடிக்க உள்ளதாகவும், ஆனால் 100% கவர்ச்சியான வேடங்களில் நடிக்க மாட்டேன் எனவும் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. வல்லம், ஆலப்பாக்கம், திம்மாவரம், பரனூர் உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்த நிலையில் தற்போது மழை பெய்து வருகிறது.
திருப்போரூர் அடுத்த சிறுதாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மேற்கூரை பெயர்ந்து தலையில் விழுந்ததில் 6 மாணவர்கள் காயமடைந்தனர். சிறுதாவூரில் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வரும் நிலையில், இன்று பத்தாம் வகுப்பில் ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்தி வந்துள்ளார். அப்போது பள்ளியில் மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது. காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள கொளவாய் ரூ.60 கோடி மதிப்பீட்டில் ஏரிகளை ஆழப்படுத்தி, கரைகள் பலப்படுத்தி, நடைபாதைகள் அமைக்கப்பட உள்ள பணியினை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதில், செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா, நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.