India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 359 கிராம ஊராட்சிகளிலும், நாளை காலை 10 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளை கிராம சபையில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றலாம் என ஆட்சியர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்ததோடு, ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. எனவே, வெளியே செல்லும்போது குடை மற்றும் ரெயின் கோர்ட் எடுத்துச்செல்லுங்கள்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 14) பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செம்பாக்கம், வேளச்சேரி, சாம்ராஜ் நகர், குருசாமி நகர், காயத்திரி நகர், அனகாபுத்தூர், அப்பாசாமி & சங்கர் நகர், திருநீர்மலை, பெருங்களத்தூர், கலைஞர் நடுஞ்சாலை, சிவசங்கரன் தெரு, பாலாஜி தெரு, சீனிவாச நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும். ஷேர் பண்ணுங்க
சுதந்திர தினம், தொடர் விடுமுறையையொட்டி ஆகஸ்ட் 14, 16, 17 ஆகிய தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி, இன்று கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம் ஆகிய பகுதிகளுக்கு 470 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, வேளாங்கண்ணி, பெங்களூரு, நாகை, ஓசூர், பெங்களூருவுக்கு 70 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. <
திருப்போரூர், தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் பிரியன் – ஜானகி தம்பதிகளுக்கு ஜோயல்(4) என்ற மகனும், ஷைலா(2) என்ற மகளும் உள்ளனர். மகன் ஜோயல் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில், இன்று மாலை பள்ளி வாகனத்தில் வந்த மகனை அழைக்க தாய் சென்றுள்ளார். அப்போது தாயை பின்தொடர்ந்து வந்த 2 வயது பெண் குழந்தை ஷைலா மீது பள்ளி வேன் மோதி தாய் கண்முன்னே குழந்தை ஷைலா பரிதாபமாக உயிரிழந்தார்.
சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த தென்மேல்பாக்கம் பகுதியில் உள்ள மருத்துவ கழிவுகள் எரியூட்டும் இடத்தில், இன்று 1,000 கிலோ கஞ்சா எரித்து அழிக்கப்பட்டது . சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய 3 மாநகர காவல் நிலையங்கள் சார்பில் கைப்பற்றப்பட்ட சுமார் 1,000 கிலோ கஞ்சாவை போலீசார் தீயிட்டு எரித்து அழித்தனர். மேலும், கஞ்சா கடத்துவது, விற்பனை செய்வது குறித்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
செங்கல்பட்டில் நாளை பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், ஜலகண்டாபுரம், மலையம்பாளையம், சித்தலபாக்கம், வெங்கைவாசல், முடிச்சூர், அஸ்தினாபுரம், செம்பாக்கம், ஜெயேந்திரா நகர், சாம்ராஜ் நகர், அனகாபுத்தூர், ஆதம் நகர், பெருங்களத்தூர், கலைஞர் நெடுஞ்சாலை, மாடம்பாக்கம், ஜோதி நகர், ஆதித்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
சுதந்திர தினம், தொடர் விடுமுறையையொட்டி ஆகஸ்ட் 14, 16, 17 ஆகிய தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி, நாளை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம் ஆகிய பகுதிகளுக்கு 470 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, வேளாங்கண்ணி, பெங்களூரு, நாகை, ஓசூர், பெங்களூருவுக்கு 70 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. <
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கள்ளச்சாராயம், போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தடுப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா, செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வி.சாய் பிரனித் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் “குறை கேட்பு கூட்டம்” அமைச்சர் அன்பரசன் தலைமையிலும், மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் முன்னிலையிலும் நடைபெற உள்ளது. நாளை (13.8.24) மாலை 3.00 மணியளவில் நடைபெறவுள்ள மேற்கண்ட கூட்டத்தில் பொதுமக்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்கள் மூலம் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.