Chengalpattu

News August 18, 2024

தாம்பரம் ரயில் நிலையத்தில் சீரானது ரயில் போக்குவரத்து

image

தாம்பரம் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணி நிறைவடைந்து, மின்சார ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. செங்கல்பட்டு – தாம்பரம் – சென்னை கடற்கரை மின்சார ரயில் போக்குவரத்து தொடங்கியது. தாம்பரத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழக்கம் போல நின்று செல்லும். அனைத்து ரயில்களும் வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கப்பட உள்ளது. நாளை முதல் சீராகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பணிகள் முன்கூட்டியே நிறைவடைந்து.

News August 18, 2024

தனியார் மருத்துவமனையில் நர்ஸ் தற்கொலை

image

திண்டிவனத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு வேதவல்லி, விந்தியா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இருவரும் ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி விந்தியா லேப்டாப் டெக்னிஷனாகவும், வேதவல்லி நர்ஸாகவும் பணி செய்தனர். நேற்று வித்தியா மட்டும் பணிக்கு சென்றுவிட்டு இன்று காலை அறைக்கு வந்து பார்த்தபோது, வேதவல்லி(22) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் விசாரணை செய்கின்றனர்.

News August 18, 2024

முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி

image

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு மாவட்ட செயலாளர்கள் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் ஆகியோர் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

News August 18, 2024

தாம்பரம் – செங்கல்பட்டு ரயில்கள் ரத்து

image

செங்கல்பட்டு – தாம்பரம் இடையே இயங்கும் அனைத்து மின்சார ரயில்களும் இன்று மதியம் 12 மணி வரை ரத்து செய்ப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் பாதையில் கடந்த சில நாட்களாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், பகுதி நேரமாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மதியம் 12 மணி வரை அனைத்து மின்சார ரயில்களும் ரத்து செய்யவாடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News August 18, 2024

செங்கல்பட்டில் 119 பேருக்கு பணி ஆணை

image

செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேற்று முன்தினம், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், 33 நிறுவனங்கள் கலந்து கொண்டன. இந்த முகாமில் மொத்தம் 487 போ் பங்கேற்ற நிலையில், அவர்களில் 62 ஆண்கள், 57 பெண்கள் என 119 போ் தோ்வு பெற்று அவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இரு மாற்றத்திறனாளிகள் பணி வாய்ப்பு பெற்றனா்.

News August 18, 2024

திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு இன்று மற்றும் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்திலிருந்து இன்று 130 பேருந்துகளும், நாளை 250 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து இன்று 30 பேருந்துகளும், நாளை மாதாவரத்திலிருந்து 40 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும். குறிப்பாக கிளாம்பாக்கத்தில் இருந்து படுக்கை வசதி கொண்ட 50 ஏசி பேருந்துகள் நாளை இயக்கப்படும். <>www.tnstc.in<<>>

News August 17, 2024

செங்கல்பட்டில் அதிமுக பிரமுகர் மரணம்

image

அதிமுக செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், சித்தாமூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பேரம்பாக்கம் கிருஷ்ணமூர்த்தி, இன்று உடல் நலக்குறைவால் காலமானார். இவர் 1972ஆம் ஆண்டு கட்சி தொடங்கப்பட்டதில் இருந்தே, அதிமுகவில் செயல்பட்டு வருகிறார். 1989 ஆம் ஆண்டு சித்தாமூர் ஒன்றிய குழு தலைவராகவும், 2011 – 2016 காலகட்டத்தில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News August 17, 2024

செங்கல்பட்டு பகுதிகளில் மிதமான மழை

image

செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. குரோம்பேட்டை, வண்டலூர், தாம்பரம், சேலையூர், பல்லாவரம், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. எனவே, பொதுமக்கள் குடை, ரெயின் கோர்ட்டுடன் செல்லுங்கள். உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா?

News August 17, 2024

கணவர் கண்முன்னே மனைவி, குழந்தை பலி

image

கானத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முதாசார் அகமது. இவர் நேற்றிரவு மனைவி, 2 குழந்தைகளுடன் பைக்கில் முட்டுக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த சினிமா கேரவன் ஹாரன் அடித்ததால், அவர் நிலை தடுமாறினார். இதைத் தொடர்ந்து, பாண்டிச்சேரி நோக்கி சென்ற அரசு பேருந்து இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே முதாசாரின் மனைவி பெனாசியர் (30) மற்றும் ஒரு வயது குழந்தை அசின் அகமது (1) உயிரிழந்தனர்.

News August 17, 2024

MSME தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன்

image

மறைமலை நகர் கிளை அலுவலகத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா வரும் 19ஆம் தேதி முதல் செப்.6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், தமிழக அரசின் 25% முதலீட்டு மானியம் ரூ.150 லட்சம் வரை வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 9445023488, 7845529657, 9600130247, 9445023494. எண்களில் தொடர்பு கொள்ளலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!