India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சரகத்திற்கு மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளராக சிவசக்தி என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மதுரை மாவட்டத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்ட நிலையில் மதுராந்தகம் சாரகத்தின் புதிய துணை கண்காணிப்பாளராக மேகலா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கள்ளச்சாராயம், போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தடுப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா , செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வி.சாய் பிரனித் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வெள்ளிக்கிழமை விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகள் மற்றும் கருத்துக்களை தெரிவித்தும் மனுக்களை அளித்தும் பயன்பெறலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
செய்யூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருக்கழுக்குன்றம் ஒன்றியம் விட்டிலாபுரம் ஊராட்சியில், குடிபேரம்பாக்கத்தில் இருளர் இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்பாக்கம் முதல் செங்கல்பட்டு வரை பள்ளிக்கு செல்ல மாணவர்களுக்கு புதிய பேருந்து வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, இன்று பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட அப்பேருந்தை எம்.எல்.ஏ பாபு கொடி அசைத்து துவங்கி வைத்தார்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்லைன் பஸ் பாஸ் வழங்க, நாளை முதல் வரும் 23ஆம் தேதி வரை (4 நாட்கள்) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மீனம்பாக்கம் ரயில் நிலையம் அருகே உள்ள முக்தி செயற்கை அவயங்கள் நிலையத்தில் இந்த முகாமானது நடைபெறும். இதில், அனைத்து பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினம் மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊர் சென்றவர்கள் இன்று திரும்பி கொண்டிருக்கின்றனர். இதனால், தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து ஏற்பட்டது. கார்கள், பேருந்துகள் என அனைத்து வாகனங்கள் வரிசையாக நீண்ட தூரத்துக்கு நிற்பதோடு, ஆமைபோல் ஊர்ந்து கொண்டே செல்கின்றன. இதனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் அவதி அடைகின்றனர்.
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் சித்தாமூர் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு அதிமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், நேற்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இதில், அதிமுக முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் தாமோதரன்(53). இவர் தனது மனைவி துர்கா (47) உடன் திருப்போரூர் முருகன் கோயிலுக்கு இன்று அதிகாலை பைக்கில் சென்றுள்ளார். வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் சென்றபோது, தொழிலாளர்களை ஏற்றி செல்லும் பேருந்து பைக் மீது பின்பக்கமாக மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பேருந்து ஓட்டுநர் கோடீஸ்வரனை(27) போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம் ரயில் பாதையில் நடைபெற்று வந்த மேம்பாட்டு பணிகள் நேற்று காலை வெற்றிகரமாக முடிவடைந்தன. பணிகள் முடிந்ததால், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் நேற்று ஞாயிற்றுகிழமை அட்டவணைப்படி ரயில் சேவை தொடங்கியது. இன்று முதல் புறநகர் மின்சார ரயில் சேவை வழக்கமான அட்டவணைப்படி இயங்கும் என்றும், விரைவு ரயில்களும் அட்டவணைப்படி இயக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஷேர் பண்ணுங்க.
வண்டலூர் அருகே வேங்கடமங்கலம் அம்பேத்கார் நகரை சார்ந்தவர் பிரசன்னா( 39) இவர் யுபிஎஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். கடந்த 15-ஆம் தேதி மனைவியின் ஊரான திண்டுக்கல் மாவட்டத்திற்கு சென்றார். இன்று காலை மேல் மாடியில் குடியிருக்கும் இவரது தாய் பிரேமா வீடு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது 35 சவரன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.
Sorry, no posts matched your criteria.