India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த பெண்ணிற்கு விமானத்திலேயே குழந்தை பிறந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது. மகப்பேறுக்காக சொந்த ஊர் வந்த ஆந்திராவைச் சேர்ந்த கிருத்திகா என்பவருக்கு விமானத்திலேயே பிரசவ வலி ஏற்பட்டது. மருத்துவக்குழுவை தயாராக வைத்திருக்குமாறு விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு விமானி அறிவுறுத்தினார். சென்னையில் தரையிறங்கும் முன்பே விமானத்திலேயே கிருத்திகா குழந்தையை பெற்றெடுத்தார்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நல்லுறவு மைய கூட்டரங்கில், சட்டமன்றப் பேரவையின் பொது நிறுவனங்கள் குழு ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன் தலைவர் நந்தகுமார் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. குழு உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (ஆக. 23) காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் விவசாயிகள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் வேளாண் துறையைச் சார்ந்த அனைத்து அரசு அலுவலர்களும் பங்கேற்கின்றனர். எனவே விவசாயிகள், விவசாயம் தொடர்பான குறைகளை மனுவாக அளித்து நிவாரணம் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சென்னை அருகே பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று காலை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் கட்சியின் கொடி மற்றும் பாடலை வெளியிடுகிறார். கட்சி அலுவலகத்தில் உள்ள 40 அடி உயர கொடிக்கம்பத்தில் விஜய் தனது கட்சிக் கொடியை ஏற்றவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தை சார்ந்த 35 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதனை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று (ஆக21) பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்வில் ஆட்சியர் ச.அருண்ராஜ், சார் ஆட்சியர் நாராயண சர்மா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அறிஞர் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் குரங்கு அம்மை தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று கண்காணித்து ஆய்வு மேற்கொண்டார். இதில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ், பல்லாவரம் எம்.எல்.ஏ கருணாநிதி, விமான நிலைய அலுவலர்கள், பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
பல்லாவரம் வேல்ஸ் வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள், ‘ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ மற்றும் ‘இந்தியன் புக் ஆப் ரெகார்டஸ்’ சாதனையை நேற்று நிகழ்த்தினர். பள்ளியைச் சேர்ந்த LKG குழந்தைகள் முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் என சுமார் 3,000 பேர், பழைய செய்தித்தாள் மற்றும் பழைய துணிகளை கொண்டு அரை மணிநேரத்திலேயே 10,000 பைகளை தயார் செய்து அசத்தினர். இவை உலக சாதனைகளாக பதிவு செய்யப்பட்டது. பாராட்டலாமே!
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டை, முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். அதில், செங்கல்பட்டு ரெனால்ட் நிசான் – டெக் அண்ட் பிசினஸ் நிறுவனத்தில் (Renault Nissan – Tech and Business) 2,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுதவிர, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்பட்டு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 22) பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அனகாபுத்தூர், பாத்திமா நகர், அரசன் நகர், சிட்லபாக்கம், வேளச்சேரி, திருமகள் நகர், மேத்தா நகர், ராஜேஸ்வரி நகர், அன்னை நகர், விஜயலட்சுமி நகர், சேலையூர், ஆண்டாள் நகர், பாக்கியலட்சுமி நகர், பத்மாவதி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
வண்டலூர் பூங்காவில் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று சட்டப்பேரவை முற்றுகை போராட்டம் ஏ.ஐ.சி.சி.டி.யு மாநில தலைவர் சொ.இரணியப்பன் தலைமையில் அறிவிக்கப்பட்டது. இதனால் இன்று 20/08/24 அதிகாலை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின் பூங்கா இயக்குநர் ஆஷிஷ் குமார் ஸ்ரீவத்சவாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.