Chengalpattu

News August 29, 2024

செங்கல்பட்டில் லேசான மழைக்கு வாய்ப்பு

image

செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கடந்த 2 நாட்களாக மாவட்டத்தின் ஒருசில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. எனவே, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் குடை எடுத்துக் கொண்டு செல்லுங்கள். மழை பெய்யுமா?

News August 29, 2024

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மின்தடை

image

செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், ரமணி நகர், மல்லிகா நகர், குமரன் நகர், ஸ்ரீராம் நகர், முடிச்சூர், பழைய பெருங்களத்தூர், கடப்பேரி, ஜிஎஸ்டி சாலை, குளக்கரை, பெருங்குடி, சிபிஐ காலனி, காமராஜ் நகர், வீராசாமி சாலை, டெலிபோன் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

News August 29, 2024

விவசாயத்தில் நஷ்டம்; விவசாயி தற்கொலை

image

சித்தாமூர் ஒன்றியம் மணப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விவசாயியான சண்முகம், தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் பூச்சி மருந்து குடித்தார். இதையடுத்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று (ஆகஸ்ட் 28) உயிர் இழந்தார். இதுகுறித்து சூனாம்பேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 28, 2024

தமிழ்நாடு வெல்டிங் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

image

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு வெல்டிங் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பாக இன்று (ஆகஸ்ட் 28) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மின் கட்டண உயர்வை கண்டித்தும், மின்சார கட்டணத்தில் மானியம் வழங்கிட கோரியும், இரும்பு விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும், ஜிஎஸ்டி வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

News August 28, 2024

தாம்பரம் பாஸ்போர்ட் அலுவலகம் 3 நாட்களுக்கு இயங்காது

image

தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் 3 நாட்களுக்கு இயங்காது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரம் தலைமை தபால் நிலைய அலுவலக வளாகத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா நாளை இரவு 8 மணி முதல் செப்டம்பர் 2ம் தேதி காலை 6 மணிவரை இயங்காது என சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அறிவித்துள்ளது. இதனால் 30ம் தேதி சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.

News August 28, 2024

தாம்பரம் ரயிலில் அடிபட்டு 2 பேர் உயிரிழப்பு

image

தாம்பரம் – பெருங்களத்தூர் ரயில் பாதை, ஏரிக்கரை தண்டவாளம் அருகே நேற்று காலை ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விசாரணையில், அவர் திருச்சியைச் சேர்ந்த ஜெயசிவா(21) என்பதும், இருங்காட்டுக்கோட்டை கார் தயாரிக்கும் நிறுவனத்தில் பணி புரிந்ததும் தெரிந்தது. இதேபோல், நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத ஒருவர் அதேப் பாதையில் வந்த வேறுவொரு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.

News August 28, 2024

பாதுகாப்பாக சாலை பயணத்திற்கு 6 வழிமுறைகள்

image

பாதுகாப்பான பயணத்திற்கு 6 முறைகளை பின்பற்றும்படி, செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. சீட் பெல்ட் அணிய வேண்டும், போதுமான இடைவெளியுடன் வாகனத்தை இயக்க வேண்டும், வாகனம் இயக்கும் போது செல்போன் பேசக்கூடாது, மது அருந்தி பயணிக்காதீர்கள், வேகமாக வாகனத்தை இயக்காதீர்கள், வாகனம் ஓட்டு முன் ஓய்வு எடுக்கவும் என 6 வழிமுறைகளை அனைத்து வாகன ஓட்டிகளும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

News August 28, 2024

செங்கல்பட்டு மாவட்டத்தில் லேசான மழை

image

செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. பல்லாவரம், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, பம்மல், திரிசூலம், விமான நிலையம், கல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளிக்கு செல்வோர் குடை மற்றும் ரெயின் கோர்ட்டுடன் செல்லுங்கள். சாலைகளில் மழைநீர் தேங்கி இருக்கவும் வாய்ப்புள்ளது. உங்க ஏரியாவில் மழையா?

News August 28, 2024

தமிழ்நாட்டின் ஒரே சிவாலயம் துளசீஸ்வரர் கோயில்

image

சிங்கபெருமாள் கோயில், கொளத்தூர் கிராமத்தில் உள்ள துளசீஸ்வரர் கோயில் அகத்திய முனிவரால் பூஜிக்கப்பட்ட 108 சிவலிங்கங்களில் ஒன்று. இங்கு  அகத்தியர் துளசி இலையால் சிவனை வழிப்பட்டு சிவனின் அருளை பெற்றார். சிவபெருமானுக்கு உகந்த ஆவணி மாதத்தில் தமிழ்நாட்டிலே துளசி இலையால் அர்ச்சனை செய்யும் ஒரே சிவாலயம் இந்த துளசீஸ்வரர் கோயில். இங்கு சென்றால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

News August 27, 2024

செங்கல்பட்டில் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து

image

செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கத்தில் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் சிக்கிய இரண்டு பெண்கள் மீட்கப்பட்டனர். ஆனால் கடும் புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். நிறுவனத்தின் கட்டடத்தில் முதல் தளத்தில் ஏற்பட்ட தீயை தீயனைப்பு வீரர்கள் ஒருமணி நேர போராட்டத்திற்கு பின் அணைத்தனர்.

error: Content is protected !!