Chengalpattu

News January 14, 2026

செங்கல்பட்டு காவல்துறை சார்பில் போகி வாழ்த்துக்கள்

image

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட மக்களுக்கு இன்று (14.01.2026) இனிய போகித் திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. பழையன கழிந்து புதியன புகும் இந்நாளில், டயர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதைத் தவிர்த்து, புகையில்லா போகி கொண்டாடி சுற்றுச்சூழலைப் பாதுகாக்குமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

News January 14, 2026

செங்கை: மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா?

image

செங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்தில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 14, 2026

செங்கை: பசு மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News January 14, 2026

செங்கை: UPI error-ஆ? பேங்கிடம் இருந்து ரூ.100 பெறலாம்!

image

G-Pay/ Paytm/ PhonePe -ல் பணம் அனுப்பும் போது பேமெண்ட் Error என வந்தபின் பணம் தானாக உங்கள் account -க்கு வந்துவிடும். அப்படி வரலைன்னா கவலை வேண்டாம். உங்கள் வங்கியில் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. மேலும், பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News January 14, 2026

செங்கல்பட்டு: சம்பளப் பிரச்னையா? உடனே CALL!

image

தி.மலை மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். <>இந்த லிங்கிலோ<<>> (அ) கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107 எண்களிலோ புகார் செய்யலாம். ஷேர் செய்து குழப்பத்தில் உள்ளவர்களுக்கு உதவுங்கள்.

News January 14, 2026

செங்கல்பட்டு: ரயில்வேயில் சூப்பர் வேலை – APPLY NOW

image

இந்திய ரயில்வேயில் Senior Publicity Inspector, லேப் அசிஸ்டன்ட், Law Assistant, translator உள்ளிட்ட 15 பதவிகளுக்கு மொத்தம் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லேப் அசிஸ்டன்ட் பணிக்கு 12ஆம் வகுப்பும், மற்ற பிரிவுகளுக்கு டிகிரியும் முடித்திருக்க வேண்டும். சம்பளமாக Rs.44,900 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி-29. <>இந்த லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 14, 2026

செங்கல்பட்டு: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

செங்கல்பட்டு மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே க்ளிக் செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 14, 2026

செங்கை: தொழிலாளி துடிதுடித்து பலி!

image

ஈச்சங்காட்டில் மேற்கு வங்கத்தை சேர்ந்த அமைமச்ஹி (35) கட்டிட தொழிலாளி. அந்த பகுதியிலேயே தங்கி வேலை பார்த்து வருகிறார். தனக்கு சொந்தமான டூவீலரில் ஈச்சங்காட்டிலிருந்து காயார் நோக்கி சென்ற போது நிலைத்தடுமாறி சாலையோர சுவரில் மோதி படுகாயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

News January 14, 2026

செங்கல்பட்டு: வாகன விபத்தில் 2 மான்கள் பலி!

image

அச்சரப்பாக்கம் அருகே வஜ்ரகிரி மலை அடிவாரத்தில் உள்ள சமூக காட்டில் இருந்து சென்னை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடந்த, இரண்டு வயது மதிப்புள்ள ஆண் மற்றும் பெண் புள்ளிமான்கள் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அச்சிறுப்பாக்கம் வனத்துறையினர் மான்களின் உடலை கைப்பற்றி, காப்பு காட்டில் புதைத்தனர்.

News January 14, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (ஜன.14) காலை 6 மணி வரை பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அவசர உதவிகளுக்காகக் காவல் அதிகாரிகள் ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர். செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் மாமல்லபுரம் உட்கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் எந்நேரமும் அதிகாரிகளைத் தொடர்புகொள்ள வசதியாகத் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இரவில் வேளைக்கு செல்லும் பெண்களுக்கு உதவும், ஷேர்!

error: Content is protected !!