Chengalpattu

News September 1, 2024

வண்டலூர் பூங்காவில் சமீபத்தில் பிறந்த நீர்யானை குட்டி உயிரிழப்பு

image

வண்டலுார் உயிரியல் பூங்காவில் பிரகுர்த்தி என்ற பெண் நீர்யானை 8 மாத கர்ப்பத்திற்கு பிறகு கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி ஒரு குட்டியை ஈன்றது. நிர்வாகம் சார்பில் தாயும், குட்டியும் தனி கூண்டில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் நேற்று, இந்த நீர்யானை குட்டி திடீரென உயிரிழந்தது. இது பூங்கா நிர்வாகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

News September 1, 2024

தாம்பரம் அருகே ரூ.50.65 கோடி மதிப்பில்போதைப்பொருள்

image

சென்னையில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு போதை பொருள் கடத்தவிருப்பதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பொத்தேரில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ரூ.50.65 கோடி மதிப்புள்ள 10.13 கிலோ மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 31, 2024

மாணவர்களுக்கு போதைப் பொருள் விநியோகித்த ரவுடி கைது

image

பொத்தேரியில் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதாக வந்த புகாரின் பேரில் மாணவர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் சோதனை நடத்தினர். இதில், அரை கிலோ கஞ்சா, 6 போதை சாக்லேட், கஞ்சா எண்ணெய், 5 பாங், புகை பிடிக்கும் பானை, 7 ஹூக்கா, ஹூக்கா தூள் ஆகியவை பறிமுதல் செய்ததுடன் இதனை மாணவர்களுக்கு விற்பனை செய்த ரவுடி செல்வமணியை (29) கைது செய்தனர்.

News August 31, 2024

மாணவர்களிடம் பத்து மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை

image

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் மாணவர்கள் தங்கி இருந்த விடுதிகளில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாணவர்களிடம் இருந்து கஞ்சா, போதை மாத்திரைகள், போதை சாக்லேட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 50-க்கும் அதிகமான மாணவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து பத்து மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 31, 2024

சிங்கபெருமாள்கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

image

செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் பகுதியில் இன்று (ஆக.31) கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சிங்கபெருமாள்கோவில் பகுதியில் மேம்பால பணிகள் நடைபெறுவதாலும், அடிக்கடி இரயில்வே கேட் மூடப்படுவதாலும் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவ்வப்போது ஏற்படும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர்.

News August 31, 2024

பொத்தேரியில் 32 கல்லூரி மாணவர்கள் கைது

image

காட்டாங்கொளத்தூர் பொத்தேரியில் உள்ள SRM கல்லூரியில் கஞ்சா புகாரில் ஒரு மாணவி உள்பட 32 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் பொத்தேரியில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த ரவுடி செல்வமணி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், மாணவர்களின் அறையில் இருந்து கஞ்சா சாக்லேட்டுகள், ஹூக்கா பவுடர், கஞ்சா ஆயில் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தனியார் மண்டபத்தில் மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

News August 31, 2024

மாமல்லபுரத்தில் மேலும் 2 மாணவர்களின் உடல்கள் மீட்பு

image

மாமல்லபுரத்தில் மேலும் 2 மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சென்னை தனியார் கல்லூரி மாணவர்கள் 19 பேர் 7 பைக்குகளில் நேற்று மாமல்லபுரம் சுற்றுலா சென்றிருந்தனர். கடலில் குளித்தபோது அலையில் சிக்கியதில் 3 மாணவர்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். மாமல்லபுரம் கடற்கரையில் நேற்று ஒரு மாணவர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் 2 மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

News August 31, 2024

படூரில் கல்லூரி பேராசிரியர் பாலியல் வழக்கில் கைது

image

படூரில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக இருந்த கேரளாவைச் சேர்ந்த பென்ஷா ஷாஜி(27) என்பவர் அதே கல்லூரியில் படித்த 3 மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த ஏப்.10ஆம் தேதி அன்று கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த பேராசிரியரை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News August 31, 2024

படூரில் கல்லூரி பேராசிரியர் பாலியல் வழக்கில் கைது

image

படூரில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக இருந்த கேரளாவைச் சேர்ந்த பென்ஷா ஷாஜி(27) என்பவர் அதே கல்லூரியில் படித்த மூன்று மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த10.04.24 அன்று கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த பேராசிரியரை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News August 31, 2024

மாமல்லபுரம் கடலில் குளித்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு

image

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் 17 மாணவர்கள் மாமல்லபுரம் பகுதிக்கு நேற்று (ஆக.30) சுற்றுலா வந்தனர். பின் கடலில் குளித்தபோது சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ரோஷன்(21) என்பவர் ராட்சத அலையில் சிக்கிய உயிரிழந்தார். மேலும், அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ்(19), கவுதம்(19) ஆகியோர் கடலில் மாயமாகினார். அவர்களை தேடும் பணியில் தீயணைப்பு மீட்பு படைவீரர்கள், போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!