India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

செங்கல்பட்டு ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் அடிக்கடி புகார் தெரிவிக்கின்றனர். விதிமுறைபடி ஆட்டோக்கள் முதல் 1.8 கி.மீ க்கு ரூ.25ம், அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு கி.மீ க்கும் ரூ.12, காத்திருப்பு கட்டணம் 5 நிமிடங்களுக்கு ரூ.3.50 வசூலிக்கலாம். இரவு (11-5) நேரத்தில் 50% கூடுதலாக கட்டணம் வசூலிக்கலாம். இதை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் <

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் உடனே SHARE பண்ணுங்க!

செங்கை வாடகை வீட்டில் குடியேறுபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர்!

செங்கை மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். மிக முக்கியமாக ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் கட்டாயமாக பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)

செங்கை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2) Canara Bank – 90760 30001, 3) Indian Bank – 87544 24242 4) IOB – 96777 11234, 5) HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

செய்யூர், சோத்துப்பாக்கம் பூங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் மகன் சத்யபிரியன் (16) 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று காலை முகத்துவாரம் பகுதிக்கு குளிக்க சென்றபோது கடலில் மூழ்கி மாயமானார். அங்கிருந்த மீனவர்கள் இவரை மீட்டு, செய்யூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சூணாம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்கள் வசதிக்காக வரும் ஜன.18-ந்தேதி நெல்லை – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நெல்லையில் இருந்து மதியம் 1:00 மணிக்கு புறப்படும் ரயில் ராஜபாளையம் வழியாக மறுநாள் அதிகாலை 3:00 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க. மற்றவர்களுக்கு பயன்படும்.

செங்கல்பட்டு (ஜனவரி-15) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு (ஜனவரி-15) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.