Chengalpattu

News September 2, 2024

கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி

image

கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:தீன்தயால் உபாத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தின் கீழ், 18 – 35 வயதிற்குட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு, தொழில் சார்ந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி, நிலையான வருமானம் ஈட்டும் வகையில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தொழில் பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு, வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது. இப்பயிற்சி, மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை வழங்கப்படும்.

News September 2, 2024

காஞ்சி மாவட்ட நிர்வாகிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்

image

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் 6 சட்டமன்றத் தொகுதியில் வாக்குச்சாவடிகள் மாற்றம் செய்வது பற்றி செப்டம்பர் 4ஆம் தேதிக்குள் எழுதி தரவேண்டும் என்று ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்களுக்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் திமுக நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News September 1, 2024

கொடூர் அருகே 16-ஆம் நூற்றாண்டு அரிகண்ட நடுகல் கண்டெடுப்பு

image

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே கொடூர் கிராமத்தில் உள்ள சிவன் கோயில் கோபுர வாசலில் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிகண்ட நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர்களான மதுராந்தகம் இந்து மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் இரா.ரமேஷ் மற்றும் தா்மபுரி அரசு கலை கல்லூரி பேராசிரியர் சி.சந்திரசேகர் ஆகியோர் இதனை ஆய்வு செய்து கண்டறிந்தனர்.

News September 1, 2024

செங்கல்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் கன மழை

image

செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதலே வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில் இன்று (செப்.1) மாலை நேரத்தில் கன மழை பெய்தது. திம்மாவரம், புலிப்பாக்கம் பரனூர், ஆத்தூர், மகேந்திராசிட்டி, வீராபுரம், அஞ்சூர், தென்மேல்பாக்கம், சிங்கபெருமாள்கோவில், மறைமலைநகர் ஆகிய பகுதிகளில் பரவலாக கன மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

News September 1, 2024

மாமல்லபுரம் வீரர் ஃபார்முலா 4 கார் ரேஸில் பங்கேற்பு

image

தெற்காசியாவில் முதன்முறையாக சென்னையின் மையப்பகுதியில் பார்முலா – 4 கார் ரேஸின் பயிற்சி போட்டி நேற்று துவங்கியது. இரண்டாம் நாளன இன்று இரண்டு சுற்று போட்டிகள் சென்னை தீவுத்திடலை சுற்றி 3.5 கி.மீ தூரம் நடைபெறுகிறது. இதில், மாமல்லபுரம் திருக்குளத்தெருவை சேர்ந்த கார் பந்தய வீரர் ராகுல் ரங்கசாமி(31) கலந்து கொள்கிறார். இவர் தேசிய அளவில் 9 முறை பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 1, 2024

செங்கல்பட்டு: மகளை கர்ப்பமாக்கிய தந்தை கைது

image

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 53 வயது கூலித்தொழிலாளி ஒருவரது 15 வயது மகள் சில தினங்களாக வயிறு வலிப்பதாக தாயிடம் கூறியுள்ளார். இதையடுத்து அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சிறுமியை மிரட்டி அவரின் தந்தை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் தந்தையை கைது செய்துள்ளனர்.

News September 1, 2024

மனைவியை கொன்ற பாதிரியார்

image

பொன்மார், அட்வென்ட் கிறிஸ்தவ ஆலயத்தின் போதகர் விமல்ராஜ்(35), தனது தோழி ஜெயஷீலாயுடன்(30) சேர்ந்து போதை மாத்திரை விற்று வந்துள்ளார். அதற்கு, அவரது மனைவி வைஷாலி(33) எதிர்ப்பு தெரிவித்ததால், விமல்ராஜ், திணேஷ்(23), சந்திரசேகரன்(29), அரவிந்த்(23), அஜய்(24), மைக்கேல்(33), சங்கர்(44) ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் வைஷாலியை கொலை செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் அனைவரையும் நேற்று கைது செய்தனர்.

News September 1, 2024

எலக்ட்ரோலைசர் உற்பத்தியாலை அமைக்க ஒப்பந்தம்

image

சான் பிரான்சிஸ்கோவில், ஓமியம் நிறுவனத்துடன் ரூ.400 கோடி மதிப்பில் எலக்ட்ரோலைசர் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஆலையானது, செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைக்கவும், இதில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஏற்கெனவே, செங்கல்பட்டில் 2 ஆலைகள் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

News September 1, 2024

மாநில அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

13 – 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள், மாநில அரசு விருதுக்கு தமிழக அரசின் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் நவம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்தபின், அனைத்து ஆவணங்களையும் கையேடாக 3 நகல்களை மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு வரும் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி மாலை 5:45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 1, 2024

15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

image

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் குமார். கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர், 3 நாட்கள் பரோல் விடுப்பில் வெளியே வந்து 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். மேலும், தலைமறைவாக இருந்தபோது வந்தவாசி, மேல்மருவத்தூர் பகுதிகளில் திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட அவரை, போலீசார் இன்று காலை செய்துள்ளனர்.

error: Content is protected !!