India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாளை (செப்.5) முகூர்த்த நாள், சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி மற்றும் ஞாயிற்றுகிழமை வார இறுதி நாட்களை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. செப்.5, 6, 7 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களுக்கு 1,035 பேருந்துகளும், 8ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 725 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இவ்வுலகம் எல்லோருக்குமானது, இங்கே அனைவரும் சுதந்திரமாக இயங்கலாம். அதே சமயம் உங்கள் இயக்கமும் நடமாட்டமும் மற்றவர்களின் இயக்கத்தையும் நடமாட்டத்தையும் பாதிக்காத வகையில் இருக்கவேண்டும். இதனை உணராதவர்கள் தான் பைக் ரேஸ், ஆட்டோ ரேஸ், வீலிங் முதலிய ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவார்கள். எனவே விபத்தை தவிர்க்க சாலையில் சாகசம் செய்வதை தவிர்க்க வேண்டுமென செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
தினமும் எழும்பூரில் இருந்து இரவு 11:15 க்கு புறப்பட்டு மங்களூர் சென்ட்ரல் செல்லும் ரயில் (16159) வரும் 9 – ந் தேதி முதல் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து 11:50 க்கு புறப்பட்டு செல்லும். மறு மார்க்கத்தில் காலை 6:45 க்கு புறப்படும் ரயில் (16160) வரும் 8-ந் தேதி முதல் அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையம் வந்தடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு (இரவு 10 மணி வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கடந்த 2 நாட்களாக மாவட்டத்தின் ஒருசில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. எனவே, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் குடை எடுத்துக் கொண்டு செல்லுங்கள். மழை பெய்யுமா?
விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் வரும் சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, சொந்த ஊர்கள் செல்வோருக்காக கிளாம்பாக்கத்திலிருந்து வரும், செமப்.5,6,7-ஆகிய தேதிகளில் திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 725 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 5:30 க்கு ஹைதராபாத் புறப்பட வேண்டிய சார்மினார் அதிவிரைவு ரயில் (12759) இணை ரயில் தாமதம் காரணமாக 3 மணி நேரம் தாமதமாக இரவு 8:30 மணிக்கு புறப்பட்டு செல்லும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதனால் ஏற்படும் அசௌகரியத்தை தவிர்க்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறது.
விநாயகர் சதூர்த்தி மற்றும் ஓணம் பண்டிகையொட்டி தாம்பரம் – கொச்சுவேலி இடையே வரும் செப்.6, 8, 13, 15, 20, 22 ஆகிய தேதிகளில் இரவு 7:30 மணிக்கும், கொச்சுவேலி – தாம்பரம் இடையே 7, 9, 14, 16, 21, 23 ஆகிய தேதிகளில் மாலை 3.35 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதே போல், சென்னை – கோவை இடையே செப்.6-இல் சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 3.45 மணிக்கு சிறப்பு ரயில் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ஆந்திரவைச் சேர்ந்தவர் கொண்டா ஸ்ரீனிவாச நிக்கில்(20). இவர், பொத்தேரியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி அதே பகுதியில் உள்ள கல்வி நிறுவனத்தில் பி.டெக் 4ஆம் ஆண்டு படித்து வநதுள்ளார். அண்மையில், போதை பொருள் சோதனையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதோடு, அவரது பெற்றோரை அழைத்துவரும்படி கூறினர். இதனால், மன உலைச்சல் அடைந்த அவர் நேற்றிரவு 4ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
செங்கல்பட்டில், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு 8 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பேரமனூர் பள்ளி பி.கொம்பையா, கோவளம் பள்ளி தலைமை த.நக்கீரன், செங்கல்பட்டு அரசு பெண்கள் பள்ளி சு.கீதா குமாரி, திருக்கழுக்குன்றம் அரசு மகளிர் பள்ளி பா.செந்தில் குமார், கீரப்பாக்கம் பிளசிங் பள்ளி முதல்வர் தா.சோபியா, செங்கல்பட்டு அறிஞர் அண்ணா பள்ளி சுரேஷ் ராஜ், மதுராந்தகம் இந்து பள்ளி பா.பாண்டியராஜன் ஆகியோர் ஆகும்.
கேரளவைச் சேர்ந்தவர்கள் முகமது ஷரீப்(35) மற்றும் ஐஸ்வர்யா(28) இருவரும், நேற்றிரவு கூடுவாஞ்சேரி – பொத்தேரி ரயில் தண்டவாளத்தை பேசிக்கொண்டே கடக்க முயன்றனர். அப்போது, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த மின்சார ரயில் ஒன்று அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரும் காதலர்கள் என்றும், வேலை தேடி சென்னைக்கு வந்ததார்கள் என்றும் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.