India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தாம்பரம் அருகே ஏரிக்கரை பேருந்து நிறுத்தத்தில் ஒன்பது மாதமான பெண் குழந்தையை தனியாக இருந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த, போலீசார் குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், குழந்தையை பேருந்து நிறுத்தத்தில் விட்டு சென்றது யார் என்பதை கண்டறிய அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வருகின்ற 7-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்களின் நேரம் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயங்கும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
யூ-டியூப் செயலியில் தொழில் பற்றிய விளம்பரங்களை கண்டு 3ஆம் ரக செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அச்செயலிகளில் தங்களின் வங்கி விவரங்களை தெரிந்தவுடன் வங்கி பணத்தை ஏமாற்றி திருடும் சைபர் குற்றங்கள் நடைபெறுகின்றன. மேலும், விவரங்களுக்கு Cyber Crime On Helpline: 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம் என செங்கல்பட்டு சைபர் கிரைம் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இன்று வெள்ளிக்கிழமை என்பதால் கிளாம்பாக்கத்தில் இருந்து வழக்கமாக அனைத்து வழித்தடங்களிலும் சுமார் 500 பேருந்துகள் இயக்கப்படும். இதில், திருவண்ணாமலைக்கு மட்டும் 166 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், இன்று கூடுதலாக திருவண்ணாமலைக்கு மட்டும் 80 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
பெருங்களத்தூர் பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வருபவர் சுப்புராயன். இவரது மகள் அஸ்வினி, 1ஆம் வகுப்பில் இருந்து 10ஆம் வகுப்பு வரை கிழக்கு தாம்பரம் மெட்ரிக் பள்ளியில் படித்து வந்தார். இவர், கடந்த மே5ஆம் தேதி நாடு முழுவதும் நடந்த நீட் நுழைவு தேர்வில் 673 மதிப்பெண்கள் எடுத்து தனது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றார். அவரது இந்த வெற்றியை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பாராட்டி மகிழ்வித்தனர்.
பெருங்களத்தூர் பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வருபவர் சுப்புராயன். இவரது மகள் அஸ்வினி, 1ஆம் வகுப்பில் இருந்து 10ஆம் வகுப்பு வரை கிழக்கு தாம்பரம் மெட்ரிக் பள்ளியில் படித்து வந்தார். இவர், கடந்த மே5ஆம் தேதி நாடு முழுவதும் நடந்த நீட் நுழைவு தேர்வில் 673 மதிப்பெண்கள் எடுத்து தனது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றார். அவரது இந்த வெற்றியை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பாராட்டி மகிழ்வித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்றிரவு முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குரோம்பேட்டை, தாம்பரம், சேலையூர், மாடம்பாக்கம், மேடவாக்கம், செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சாலைகளில் மழைநீர் தேங்கி இருக்கும் என்பதால், பணிக்கு செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்வோர் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உங்க ஏரியாவில் மழையா?
போரூர் அருகே மதுரவாயல் – தாம்பரம் புறவழிச்சாலையில் லாரி, கார் என அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வானகரம் சுங்கச்சாவடி பகுதியில் 1 கி.மீ தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்தில் லாரி, கார் ஓட்டுநர் என 4 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். பொதுமக்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செங்கல்பட்டு அருகே பெருந்தண்டலம் கிராம ஏரிக்கரையில் இன்று மதியம் பெண் ஒருவர் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது குழந்தை அழும் சத்தம் கேட்டு அப்பெண் குழந்தையை தேடியுள்ளார். மரத்தில் இரத்த கரையுடன் கட்டை பையில் உயிருடன் பிறந்து சில மணி நேரமே ஆன தொப்புள் கொடி அகற்றப்படாத நிலையில் ஆண் குழந்தையை கண்டு அதிர்ச்சி அடைந்தார். போலீசார் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து விசாரித்து வருகின்றனர்.
வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த யானை தந்தங்களை அங்கு வேலை செய்து வந்த தற்காலிக பணியாளர் அப்பு (எ) சதீஷ் என்பவர் திருடி விற்பனை செய்துள்ளார். தலைமறைவாக உள்ள சதீஷை வனத்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.இந்நிலையில், இந்த திருட்டில் தொடர்புடைய 4 பேரை கைது செய்த வனத்துறையினர்அவர்களிடமிருந்து யானை தந்தத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.