Chengalpattu

News September 11, 2024

இரவு ரோந்து பணியில் இருக்கும் போலீசார் விவரம்

image

செங்கல்பட்டு காவல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) இரவு ரோந்து பணிக்கு செல்லும் போலீஸ் அதிகாரிகளின் விவரம் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதிகாரிகள் பெயர் மற்றும் அவர்களது மொபைல் போன் குறித்த விவரங்களை, செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையின் அதிகாரப்பூர்வ X தளத்தில் விரிவாக்க பார்க்கலாம். இரவு நேரங்களில் வெளியே செல்லும் பெண்கள், அசம்பாவிதம் நடந்தால் உடனே போலீசாருக்கு கால் செய்யுங்கள்.

News September 11, 2024

வரும் 14ஆம் தேதி ரேஷன் கார்டு குறைதீர் முகாம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் குறைதீர் முகாம், வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. செங்கல்பட்டு, செய்யூர், அணைகட்டு, மதுராந்தகம், ஊனமலை, திருக்கழுக்குன்றம், கொத்திமங்கலம், திருப்போரூர், நாவலூர், வண்டலூர், முருகமங்கலம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இதில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் செய்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க

News September 11, 2024

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி வருவார்: அமைச்சர்

image

புனித தோமையார் மலை ஒன்றியத்திற்கு உட்பட்டதா கோவிலம்பாக்கம் பகுதியில், திமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பங்கேற்று பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “வரும் 17ஆம் தேதி நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவில் Ai தொழில்நுட்பத்தில் கருணாநிதி வந்து, ஸ்டாலின் அருகில் அமர்வார்” என்று தெரிவித்தார். இதனால், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.

News September 11, 2024

ஐ.டி.ஐ. தொழில் பழகுநர் பயிற்சி சிறப்பு முகாம்

image

மெக்கானிக், மோட்டோ வாகனம், டிசல் மெக்கானிக், பிட்டர் உள்ளிட்ட பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற ஐ.டி. மாணவர்களுக்கு மாதம் ரூ.14,000 உதவி தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சி மாநகர போக்குவரத்து கழகத்தில் வழங்கப்பட உள்ளது. வரும் 26ஆம் தேதி குரோம்பேட்டை போக்குவரத்து கழக தொழிற்பயிற்சி பள்ளியில் நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News September 11, 2024

கூட்டுறவு பணியாளர்களின் குறைதீர் முகாம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட இணை பதிவாளர் தலைமையில் நாளை காலை 10 மணி முதல் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவு பணியாளர்களின் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இதனால், அனைத்து பணியாளர்களும் தங்கள் பணி சம்பந்தமான கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 11, 2024

செங்கல்பட்டு ரயில்களில் அடிபட்டு 3 பேர் உயிரிழப்பு

image

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர், பொத்தேரி, கிண்டியில் ரயில்களில் அடிபட்டு மூன்று பேர் இன்று உயிரிழந்துள்ளனர். வண்டலூர் அருகே மின்சார ரயிலில் அடிபட்டு பீகாரை சேர்ந்த பப்பு குமார் உயிரிழந்தார். மேலும் பொத்தேரி ரயில் நிலையம் அருகே விழுப்புரத்தைச் சேர்ந்த ராமு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். கிண்டி ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் அடிபட்டு 25 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.

News September 11, 2024

மதுராந்தகம் அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து

image

மதுராந்தகம் அருகே ஒழுப்பாக்கம் கிராமத்தில் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு புதியதாக கட்டப்பட்டு வருகிறது. இங்கு, வேலை செய்து வரும் நபர்கள் உணவு சமைத்து சாப்பிடும் போது இன்று (செப்டம்பர் 11) கேஸ் சிலிண்டர் வெடித்து பரிமளம், முத்துக்குமரன் ஆகிய இருவர் லேசான தீக்காயங்களுடன் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News September 11, 2024

பன்னாட்டு அரங்கம் கட்டுமான பணிக்கு ஒப்பந்தம்

image

முட்டுக்காட்டில் உலக தரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் பன்னாட்டு அரங்கம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பொதுப்பணித்துறையின் கண்காணிப்பு பொறியாளர் மின்னணு ஒப்பந்த புள்ளிகளை கோரியுள்ளார். இந்த அரங்கத்திற்கு மொத்தம் 488 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த ஆவணங்களை அக்டோபர் 16-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 11, 2024

செங்கையில் சிறுமியருக்கு எதிரான அத்துமீறல்கள்

image

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் குழந்தை திருமணம் (ம) பாலியல் வன்கொடுமையால் 800க்கும் மேற்பட்ட சிறுமியர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை, தவிர்க்கவும் கட்டுப்படுத்தவும் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 12ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு “எனக்குள் நான்” என்ற தலைப்பில் பாலியல் ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

News September 10, 2024

செங்கல்பட்டுக்கு வந்த குரூப் 2 வினாத்தாளகள்

image

டின்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாள்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை வந்தது. வருகின்ற செப்டம்பர் மாதம் சனிக்கிழமை குரூப் 2 தேர்வு நடைபெற உள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 22 ஆயிரம் பேர் தேர்வு எழுத உள்ள நிலையில் அவர்களுக்கான வினாத்தாள்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து இறங்கியுள்ளது. இதை கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!