Chengalpattu

News September 17, 2024

திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்

image

பௌர்ணமியை முன்னிட்டு இன்று பக்தர்கள் கிரிவலம் செல்வதற்காக கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 300 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்கள், இதனை பயன்படுத்தி, தங்களது பயணத்தை சிறப்பாக்கி கொள்ளலாம்.

News September 17, 2024

பெருங்களத்தூரில் காதலிக்க மறுத்த பெண்ணை மிரட்டியவர் கைது

image

ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஷாம்ஜாய் ஹரிஷ்(26) பெருங்களத்தூரில் தங்கி தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அவருடன் பணியாற்றிய பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்துள்ளார். அந்த பெண் காதலை ஏற்க மறுத்ததால், ஷாம்ஜாய் ஆபாசமான புகைப்படங்களை அனுப்பி மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின்பேரில், பீர்க்கன்காரணை போலீசார் ஷாம்ஜாயை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News September 17, 2024

செங்கல்பட்டில் வரும் 20ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் செப்.20ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு 044-27426020, 6383460933, 8056789359 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இதை SHARE பண்ணுங்க

News September 16, 2024

3 பூத் கண்ணாடி உடைப்பு: பரனூரில் பதற்றம்

image

பரனூர் சுங்கசாவடியில், இன்று மனித நேய மக்கள் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின்போது, போராட்டக்காரர்கள் சிலர் 3 பூத் கண்ணாடிகளை உடைத்தனர். போலீசார் அவர்களை கைது செய்தனர். கைது செய்தவர்களை விடுவிக்க கோரி 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

News September 16, 2024

பரனூர் சுங்கசாவடியில் 3 பூத் கண்ணாடி உடைப்பு

image

பரனூர் சுங்கசாவடியில், இன்று 500க்கும் மேற்பட்ட மனித நேய மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். சுங்க கட்டணத்தை திரும்ப பெற கோரி நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட சிலர், அங்குள்ள 3 பூத் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். கண்ணாடி உடைத்தவர்களை போலீசார் உடனடியாக கைது செய்தனர். இதனால், பரனூர் சுங்கசாவடியில் பதற்றம் நிலவி வருவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

News September 16, 2024

செங்கல்பட்டில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டம்

image

பரனூர் சுங்கசாவடியில், இன்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மாநில தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில், 500க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். பரனூர் சுங்கசாவடி கட்டணத்தின் பெயரில் நடைபெறும் வழிப்பறி கொள்ளையை கண்டித்து இந்த ஆர்பாட்டமானது நடைபெற்று வருகிறது. அசம்பாவிதம் நடக்காதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News September 16, 2024

பரனூர் சுங்கசாவடியில் போலீசார் குவிப்பு

image

செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடியில், இன்று (செப்டம்பர் 16) மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட உள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தனர். இதை முன்னிட்டு, அந்தப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சுங்கசாவடி என்ற பெயரில் கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகவும், அதனால் சுங்கச்சாவடியை அகற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News September 16, 2024

பல்லாவரம் மருத்துவமனை உயிரிழப்பு விவகாரத்தில் உத்தரவு

image

புதுச்சேரியை சேர்ந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க பல்லாவரம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டதில் உயிரிழந்தார். இதையடுத்து, மருத்துவமனையின் பதிவை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு உத்தரவை ரத்து செய்து, மேலும் 4 வாரங்களுக்குள் தனியார் மருத்துவமனை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News September 16, 2024

செங்கல்பட்டில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில், எரிவாயு நுகர்வோர்களுக்கான குறை தீர்க்கும் கூட்டம், செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 19-ஆம் தேதி காலை 11:00 மணிக்கு நடைபெறவுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், எரிவாயு நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, எரிவாயு விநியோகம் தொடர்பான தங்களது குறைகளுக்கு தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 16, 2024

வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை வழக்கம் போல் இயங்கும்

image

பராமரிப்பு பணிக்காக வாரந்தோறும் செவ்வாய் கிழமை தினங்களில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமையான நாளை மிலாடி நபிக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பார்வைக்காக நாளை வண்டலூர் உயிரியல் பூங்கா வழக்கம் போல் இயங்கும் என பூங்கா இயக்குனர் ஆஷிஷ் குமார் வத்ச்சவா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!