Chengalpattu

News September 21, 2024

கொட்டித் தீர்த்த கனமழை: மின்சாரம் துண்டிப்பு

image

தமிழகம் முழுவதும் ஆங்காங்கே சில இடங்களில் சுமார் இரவு 11 மணியிலிருந்து கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. சென்னை அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் இரவு பெய்த கனமழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, காலையில் வேலைக்கு செல்வோர் சிரமத்தை அடைந்துள்ளனர். மழை நீர் தேங்கி, சாலைகளில் கழிவு நீரோடு கலந்து ஓடுகின்றது. ஊரப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழையால் விடிய விடிய மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

News September 20, 2024

வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கோர்ட் உத்தரவு

image

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 1,000 கிலோ யானை தந்தம் திருடு போனதாக வெளியான செய்தி தவறானது, பூங்கா இயக்குனர் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம். ஒரு கிலோ எடை கொண்ட இரண்டு துண்டுகள் மட்டும் ஒப்பந்த பணியாளரால் திருடப்பட்டதாகவும், பிறகு அது மீட்கப்பட்டதாகவும் பூங்கா இயக்குனர் விளக்கம். பூங்காவில் உள்ள யானைத் தந்தங்களை கணக்கிட்டு, அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News September 20, 2024

தலையில் அம்மிக்கல்லை போட்டு வாலிபர் கொலை

image

சென்னை பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணன்(25). நேற்று முன்தினம், கலைவாணன் மது அருந்திவிட்டு வீட்டுற்கு சென்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவரது மனைவி சௌந்தர்யா(25), அவரைத் திட்டி வெளியே படுக்க சொல்லிவிட்டார். வெளியே வந்த கலைவாணன் அவர்களுடைய மாடியில் வசித்து வரக்கூடிய சரளா என்ற பெண்ணை ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த சரளாவின் மகன், கலைவாணனின் தலையில் கல்லை போட்டுக் கொன்றுள்ளனர்.

News September 20, 2024

லண்டன், சிங்கப்பூர் செல்லும் 2 விமானங்கள் தாமதம்

image

சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு லண்டன் செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், இன்று 4 மணி நேரம் தாமதமாக காலை 9.30 மணிக்கு புறப்பட்டது. சிங்கப்பூர் விமானம் சுமார் 4 மணி நேரம் தாமதமாக இன்று அதிகாலை 5.30 மணிக்கு, சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டது. இதனால், இந்த 2 விமானங்களிலும் பயணிக்க இருந்த சுமார் 400க்கும் மேற்பட்ட பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

News September 20, 2024

பர்னிச்சர் கடை உரிமையாளரின் மனைவி கொலை

image

தைலவரத்தைச் சேர்ந்தவர் சந்தனகுமார்(46), மாடம்பாக்கத்தில் பர்னிச்சர் கடை வைத்துள்ளார். இவரது இளைய மகள் காவியா, நேற்று மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்பியபோது, அம்மா பரமேஸ்வரி கழுத்தில் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டிருந்தார். தந்தையும் படுகாயம் அடைந்து இருந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். கொலைக்கான காரணம் குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

News September 20, 2024

பட்டா கத்தியுடன் ஒருவர் கைது

image

செங்கல்பட்டு தாலுகா பகுதிகளில், போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, காவலர்களை கண்டு ஓடிய நபரை போலீசார் விரட்டி பிடித்து விசாரணை மேற்கொண்டர். விசாரணையில், அவர் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவு குற்றவாளி கணபதி(22) என்பது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த பட்டா கத்தி பறிமுதல் செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News September 20, 2024

போஸ்டர் ஒட்டி பிரபல ரவுடியை தேடும் போலீசார்

image

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், பிரபல ரவுடி சீசிங் ராஜாவை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்ற வழக்கில், சீசிங் ராஜா தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, அவரது புகைப்படத்துடன் கூடிய பொது அறிவிப்பு போஸ்டர், தாம்பரம் மாநகர காவல் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் புறநகர் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

News September 19, 2024

பைக் வாங்கி தராததால் இளைஞர் தற்கொலை

image

செங்கல்பட்டு மாவட்டம் வீராபுரதைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவரது மகன் சக்திவேல், ஐடிஐ முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர், தனக்கு பைக் வாங்கித் தர வேண்டுமென தந்தையை வலியுறுத்திய நிலையில், குடும்பச் சூழ்நிலை காரணமாக தந்தை மறுத்துள்ளார். மனமுடைந்த சக்திவேல், இன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 19, 2024

வரும் 26ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

image

தாம்பரம் மாநகராட்சி, 5ஆவது மண்டலத்தில் உள்ள அதிமுக உறுப்பினர்களின் வார்டுகளை புறக்கணிக்கப்படுகிறது. இதனை கண்டித்து வரும் 26ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அனைத்து திட்டங்களையும் முடக்கி விட்டதாகவும், அதிமுகவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் முயற்சியை திமுக செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

News September 19, 2024

சாலையோர தடுப்பில் பைக் மோதி கணவன் பலி!

image

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விஜயகுமார்(40) – குணசுந்தரி(32) தம்பதியினர். இருவரும், இன்று அதிகாலை 1 மணிக்கு பைக்கில் மிண்டிலிருந்து கடலூருக்கு மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக சென்றனர். தாம்பரம், இரும்புலியூர் பாலத்தின் மேல் வந்தபோது, பைக் தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், விஜயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!