Chengalpattu

News September 22, 2024

செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நியமனம்

image

பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகளைக் கண்காணிக்க மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித் துறையில் ஐஏஎஸ் தரத்தில் உள்ளவர்களை கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஆர்த்தி என்பவர் செங்கல்பட்டு பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மாதத்திற்கு ஒருமுறை பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

News September 22, 2024

மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே

image

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் வரையிலான புறநகர் ரயில் சேவை இன்று (செப்.22) காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை முழுவதுமாக ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், பயணிகளின் வசதிக்காக சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரம் வரையும், அதேபோன்று, பல்லாவரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News September 22, 2024

எஸ்பிஐ வங்கி யோனோ ஆப் மூலம் 48 ஆயிரம் அபேஸ்

image

தாம்பரம் அருகே வரதராஜபுரத்தை சேர்ந்தவர் பாபு (40). எலக்ட்ரீசியன். இவரின் மொபைல் எண்ணிற்கு செப் 11ம் தேதி எஸ்பிஐ வங்கி யோனோ ஆப் மூலம் ரிவார்ட் கிடைத்ததாக குறுந்தகவல் வந்துள்ளது. குறுந்தகவலை தொட்டதும் நேரடியாக, எஸ்பிஐ வங்கியின் யோனோ ஆப்பிற்குள் சென்றது. வங்கி கணக்கில் இருந்து ரூ.48,976 எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பாபு தாம்பரம் சைபர் கிரைமில் புகார் அளித்தார்.

News September 22, 2024

தாம்பரத்தில் மரம் வளர்ப்பவர்களுக்கு தங்க நாணயம் பரிசு

image

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் தென்சென்னை எம்பியுமான சிட்லபாக்கம் ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், தாம்பரம் மாநகராட்சியில் உள்ளவர்களுக்கு நாங்கள் இலவசமாக செடி நட்டு தருவோம் என்றும், செடி வளர்க்க ஆர்வமுள்ள முதல் 100 நபர்களுக்கு காட் பாக்ஸ் மற்றும் சிறப்பாக செடி வளர்க்கும் 10 பேருக்கு தங்க நாணயம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். (வாட்ஸ்ஆப் எண் 96000 80764)

News September 22, 2024

“டெக்னோ விஐடி 24” திருவிழாவில் அமைச்சர் டி.ஆர்.பி‌.ராஜா

image

வி.ஐ.டி.தொழில்நுட்பத் திருவிழாவில் தமிழக தொழில்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி‌.ராஜா பங்கேற்றார். அவருக்கு, வி.ஐ.டி சென்னை துணைத்தலைவர் முனைவர்.சேகர் விசுவநாதன் நினைவுப்பரிசு வழங்கினார். அருகில், கெளரவ விருந்தினர் இமானி தீபா வெங்கட், இணைத்துணை வேந்தர் முனைவர் டி.தியாகராஜன், வேந்தரின் ஆலோசகர் முனைவர் எஸ்.பி.தியாகராஜன், கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன் உடனிருந்தனர்.

News September 21, 2024

காய்ச்சல் பரவுவதை தடுக்க கொசு ஒழிப்பு பணி தீவிரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில், 359 ஊராட்சிகள் உள்ளன.
இங்கு, கொசு ஒழிப்பு நடவடிக்கையை கட்டுப்படுத்த, தாம்பரம் மாநகராட்சியில் 300 பேர், காட்டாங்கொளத்துார், திருப்போரூர், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், தலா 50 பேர், மற்ற ஊராட்சி ஒன்றியங்களில் தலா 20 பேர் கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

News September 21, 2024

மூதாட்டி தலையை வெட்டி நகை பறித்த கும்பல்

image

மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட கீழக்கரணை பகுதியில் வசித்து வருபவர் சரஸ்வதி. இவர் வீட்டில் தனியாக இருக்கும்போது உள்ளே சென்ற 2 மர்ம நபர்கள் மூதாட்டியின் தலையை வெட்டி, அவர் அணிந்திருந்த 3 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 21, 2024

செங்கல்பட்டில் 4673 பேருக்கு நிதி ஒதுக்கீடு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் 359 ஊராட்சிகள் உள்ளன. இதில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 17,455 பேரை தேர்வு செய்து அதில் 2024 – 25ம் ஆண்டிற்கு 4673 பேருக்கு வீடு கட்ட ரூ.56.7 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. முதற்கட்டமாக 180 பயனாளிகளுக்கு வீடு கட்ட தலா ரூ.1.20 லட்சம், கழிப்பறை கட்ட ரூ.12,000 -க்காண பணி ஆணை பிடிஓ மூலம் வழங்கப்பட்டுள்ளது.

News September 21, 2024

மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது

image

தாம்பரம் அடுத்த தாழம்பூர் அருகே மேலக்கோட்டையூரில் 11ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News September 21, 2024

செங்கல்பட்டில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக, செங்கல்பட்டில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு 11 மணி முதல் தற்போது வரை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் பகிரவும்.

error: Content is protected !!