India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது.மேலும், பயணிகளின் வசதிக்காக, தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் கிளாம்பாக்கத்தில் 3 நடைமேடைகளுடன் கூடிய புதிய ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சென்னை ரயில்வே கோட்டம் திட்டமிட்டுள்ளது.
சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல, மேம்பாலத்தின் கீழ் திருப்பம் இல்லாததால், மாத்துார் சென்று ‘யூ- டர்ன்’ எடுத்து ஒரகடம் வந்து, இடது திரும்பி, வாலாஜாபாத் சாலை வழியே வாகனங்கள் சென்று வந்தன. கடந்த வாரம் இச்சாலையில், தனியார் ஹோட்டல் அருகே புதியதாக யூ -டர்ன் ஏற்படுத்தப்பட்டது. புதியதாக அமைக்கப்பட்ட யூ -டர்ன் குறித்து எச்சரிக்கை பலகை இல்லை.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த உள்ள நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஹஜ்ரத் முகமது ஷா காதிரி ஒலியுல்லா அவர்களின் 351ம் ஆண்டு வருட கந்துரி எனப்படும் சந்தனக்கூடு திருவிழா, இன்று(ஏப்.21) வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த திருவிழாவில் திரைப்பட இசையமைப்பாளர் A.R.ரகுமான் கலந்துகொண்டார். மேலும் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பரனுர் அருகே திருச்சி மார்க்கமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஜான் சம்பத் (46) என்பவர் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் ஏழாம் நாளான இன்று (ஏப்ரல்.20) திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து, சாமி தரிசனம் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் சூணாம்பேடு அருகே தொழுப்பேடு முதல் சூணாம்பேடு வரையிலான 18 கி.மீ., தார் சாலை உள்ளது. இந்த சாலை, மாநில நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்து, நெடுஞ்சாலைத்துறை சார்பாக டெண்டர் விடப்பட்டு, 6.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணி, சில நாட்களுக்கு முன் துவங்கியது.
ஸ்ரீ பெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட பல்லாவரம் அடுத்த பம்மலில் உள்ள வேளாங்கண்ணி மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடிகை ரம்யா பாண்டியன் தனது குடும்பத்துடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தார்.
வாக்களித்த பின் தனது கையில் வைக்கப்பட்ட அடையாள மை காட்டினார்.
பின்னர் ரம்யா பாண்டியனுடன் ரசிகர்கள் பலரும் செல்பி எடுத்து கொண்டனர்.
தாம்பரம் ரயில் நிலையம் அருகில் ஆவடி, திருபெருமந்தூர் செல்ல அரசு ஊழியர்கள் தனியார் நிறுவன ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். காரணம் சேர் ஆட்டோ மற்றும் தனியார் பஸ்களால் பொது மக்களுக்கு இடையூராக வாகனங்களை நிறுத்துகின்றனர் என்றும் அரசு உடனே நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நாளான நாளை அனைவரும் ஓட்டளிக்க வசதியாக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கடைகள் என அனைத்திற்கும் விடுமுறை விட உத்தரவிடப்பட்டுள்ளது. விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில், குடைவரை கோவில்கள், ஒற்றைக்கல் ரதங்கள், புடைப்பு சிற்ப தொகுதிகள் உள்ளிட்ட கலைப் படைப்புகள், நரசிம்மவர்ம பல்லவர்களால் செதுக்கப்பட்டவை. இன்று(ஏப்.18) உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சுற்றுலா பயணிகள், பார்வையாளர்களுக்கு இன்று ஒருநாள் இலவசமாக பார்வையிடலாம் என மத்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மாலை நட்சத்திர கலை சங்கமம் நாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Sorry, no posts matched your criteria.