Chengalpattu

News April 27, 2024

செங்கல்பட்டு: ஆட்சியர் அதிரடி உத்தரவு

image

திருக்கழுக்குன்றத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில் தலமாக விளங்கும் ஸ்ரீ வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சங்க தீர்த்த களத்தில் கழிவு நீர்கள் கலந்து அசுத்தம் ஏற்பட்டுள்ளது.  அதனை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, செங்கல்பட்டு ஆட்சியர் அருண்ராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டு குளத்தை தூர்வார உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News April 27, 2024

ஊர்காவல் படையில் சேர இளைஞர்களுக்கு அழைப்பு

image

தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட மீனவ இளைஞர்கள் ஊர்காவல் படையில் சேர்வதற்கு வரும் ஏப்.29 முதல் மே.14 ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தாம்பரம் காவல் உதவி கமிஷனர் தெரிவித்துள்ளார். இதில் 18வயது நிரம்பிய 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் மேலும் விபரங்களுக்கு 82207 29165, 74183 75910, 86104 15418 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 27, 2024

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ரிப்போர்ட்டர்கள் தேவை

image

தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் பகுதி நேரமாக மாவட்டம், தாலுகா வாரியாக பணியாற்ற அனுபவம் வாய்ந்தவர்கள் அல்லது உங்கள் பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் திறன் உடையவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் 8340022122 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

News April 27, 2024

திருவிடந்தை பெருமாள் கோவில் சிறப்பு

image

108 வைணவ திவ்ய தேசங்களில் 63ஆவது திவ்ய தேசமான நித்தியக் கல்யாண பெருமாள் கோயில் செங்கல்பட்டு, திருவிடந்தையில் அமைந்துள்ளது. 7ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டு 11ஆம் நூற்றாண்டில் சோழர்களால் பராமரிக்கப்பட்டது. இக்கோவிலில் சிற்பத்தூண் மண்டபம், மற்றும் கிபி. 959 ஆம் ஆண்டுகால கல்வெட்டுக்களும் உள்ளன. தென்கலை வழிபாட்டு முறை இங்கு பின்பற்றப்படுகிறது.

News April 27, 2024

தங்க நகைகளை லாக்கருடன் திருடியவர்கள் கைது

image

தாம்பரம் சிட்லப்பாக்கத்தில் கடந்த 5 ஆம் தேதி புரோகிதர் வீட்டின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க முயன்று முடியாததால் 27 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை லாக்கருடன் திருடி சென்றனர். இச்சம்பவத்தில் கொலை வழக்கு குற்றவாளியான வெள்ளை செந்தில் மற்றும் கால் டாக்சி ஓட்டுநர் குமரன் இருவரை நேற்று போலீசார் கைது செய்த நிலையில் செல்வகுமார் என்பவரை தேடி வருகின்றனர்.

News April 27, 2024

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு துறையின் மூலம் செயல்படும் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தினை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருள்ராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள குழந்தைகளிடம் நலம் விசாரித்து குறைகளை கேட்டறிந்தார். உடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

News April 26, 2024

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு துறையின் மூலம் செயல்படும் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தினை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருள்ராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அங்குள்ள குழந்தைகளிடம் நலம் விசாரித்து குறைகளை கேட்டறிந்தார். உடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

News April 26, 2024

தாம்பரம்: ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

image

தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த ஏப்.6ஆம் தேதி நெல்லை எக்ஸ்பிரசில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகராத்தில், நயினார் நாகேந்திரனின் உறவினர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கின் ஆவணங்களை சிபிசிஐடியிடம், தாம்பம் போலீசார் ஒப்படைக்க உள்ளனர்.

News April 26, 2024

செங்கல்பட்டு: இளைஞர் தலை நசுங்கி பலி

image

கூவத்தூர் பகுதியை சேர்ந்தவர் முரளி(36). இவர் கூவத்தூர் செட்டி தெரு வழியாக இருசக்கர வாகனத்தில் இன்று சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியதில் முரளி நிலை தடுமாறி விழுந்து தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

News April 26, 2024

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்கு பெட்டிகள் குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரியில் வாக்கு எண்ணிக்கைக்காக வைத்து பூட்டி சீலிடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான அருண்ராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கு வைக்கப்பட்டிருந்த வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டார்.