Chengalpattu

News October 9, 2024

வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பார்வையாளர்கள்

image

திமுக சார்பில் பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளை கவனிக்க, மாநில நிர்வாகிகளை தொகுதி பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, பல்லாவரம் தொகுதிக்கு – ரத்னா லோகேஸ்வரன், தாம்பரம் தொகுதிக்கு – கே.எஸ்.ரவிச்சந்திரன், செங்கல்பட்டு தொகுதிக்கு – பிரபு கஜேந்திரன், திருப்போரூர் தொகுதிக்கு – சி.தசரதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News October 9, 2024

1 லட்சம் பனை விதைகளை நட திட்டம்

image

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் மீட்டெடுத்தல் ஆகியவற்றிற்காக 1 லட்சம் பனை விதைகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், பள்ளியில் பயிலும் மாணவர்கள் மூலம் பனை விதைகளை சேகரித்து பள்ளி வளாகம் அருகிலுள்ள குளங்கள், ஏரிகளில் நடவு செய்தல் வேண்டும் என்றும், மேலும் பனை விதைகளை சேகரித்து பிறத் துறைகளுக்கு வழங்க வேண்டும் என்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 9, 2024

தமிழ் அறிஞர்களுக்கு உதவித் தொகை: கலெக்டர்

image

தமிழுக்காக வாழ்நாளை அர்ப்பணித்த தமிழ் அறிஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.4,000 மற்றும் பேருந்து இலவச பயணம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற, முதிர்ந்த தமிழ் அறிஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தை www.tamilvalarchithurai.tn.gov.in என்ற மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.

News October 9, 2024

கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அருண்ராஜ் தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் கோரிக்கை மனுக்களை பெறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு உள்ளாட்சித் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் 255 மனுக்கள் பெறப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News October 9, 2024

இலவச பட்டாக்களை வழங்கிய அமைச்சர்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறு,சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் திருப்போரூர் திருக்கழுகுன்றம் வட்டத்தைச் சார்ந்த 60 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும், வண்டலூர் வட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் முருகமங்கலம் 20 குடியிருப்பு ஒதுக்கீட்டிற்கான ஆணைகளையும் வழங்கினார்.

News October 8, 2024

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் சீசன் துவக்கம்

image

மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு 86 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. சைபீரியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பர்மா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கூழைகுடா, நத்தை கொத்தி நாரை, பாம்பு தாரா, வக்கா உள்ளிட்ட பறவை இனங்கள், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வலசை வரத் துவங்கியுள்ளன. அக்டோபர் 2ஆவது வாரம் முதல் சீசன் துவங்கும் என வனதுறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.

News October 8, 2024

செங்கல்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் மழை

image

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. திம்மாவரம், புலிப்பாக்கம், பரனூர், மகேந்திராசிட்டி, சிங்கப்பெருமாள் கோவில், மறைமலை நகர், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மழையில் நனைந்த கொண்டே சென்றனர்.

News October 8, 2024

அணிவகுப்பில் மயங்கி விழுந்த வீரரால் பரபரப்பு

image

இந்திய விமானப்படையின் 92ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு, தாம்பரம் விமானப்படை தளத்தில் வீரர்களின் அணிவகுப்பு மற்றும் விமான சாகச நிகழ்ச்சி இன்று காலை (அக்.8) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அணிவகுப்பில் பங்கேற்ற ஒரு வீரர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர், உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு பதில் மாற்று வீரர் கலந்து கொண்டார்.

News October 8, 2024

அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்

image

செங்கல்பட்டு நகரம் மற்றும் காட்டாங்கொளத்தூர் அதிமுக சார்பில், திமுக அரசை கண்டித்தும், சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், நகர செயலாளர், மேற்கு ஒன்றிய செயலாளர், வடக்கு ஒன்றிய செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ கணிதாசம்பத் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

News October 8, 2024

விமான சாகச நிகழ்ச்சியைக் காண சென்றவர் பலி

image

மெரினா கடற்கரையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த விமானப்படை வான் சாகச நிகழ்ச்சியைப் பார்க்க வந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். இதில், செய்யூர் அடுத்த கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி மணி (58) என்பவரும் இறந்துள்ளார். இவர் சென்னையில் தனது தம்பி வேலு வீட்டில் தங்கி வேலை செய்து வந்த நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது. நேற்று, பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!