Chengalpattu

News December 13, 2024

செங்கல்பட்டில் ரேஷன் கார்டு திருத்த முகாம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அஞ்சூர், மதுராந்தகம், கருங்குழி, செய்யூர், அரசூர், திருக்கழுக்குன்றம், மணப்பாக்கம், திருப்போரூர், நெல்லிகுப்பம், வண்டலூர், பொன்மார் ஆகிய இடங்களில் ரேஷன் கார்டு திருத்தும் தொடர்பாக சிறப்பு முகாம் நாளை (டிச.14) நடக்கிறது. இதில், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தரம் குறித்த புகார்களையும் பதிவு செய்யலாம் என கலெக்டர் அருண் ராஜ் தெரிவித்தார்.

News December 12, 2024

செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை தொடரும்

image

வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, செங்கல்பட்டில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால், பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான இடங்கள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கும் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள். நேற்றுபோல் இன்றும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்க ஏரியாவில் மழையா?

News December 12, 2024

செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

image

தொடர் கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (டிச.12) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News December 11, 2024

செங்கல்பட்டு காவல் துறை சார்பில் விழிப்புணர்வு 

image

பிறந்த நாளன்று போதைப்பொருள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேபோல் குற்றவாளிகள் ஏராளமானோர் போதை பொருள் பயன்படுத்துவதால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். பல லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாழ்க்கை ஒரு அழகான பயணம். போதை பழக்கத்தால் அதை அழிக்க வேண்டாம் என செங்கல்பட்டு காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

News December 11, 2024

திட்ட பணிகள் உறுதிமொழி குழு ஆய்வு

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில், அரசு உறுதிமொழிக் குழு கூட்டம், அதன் தலைவரும், பண்ருட்டி எம்.எல்.ஏ.,வுமான வேல்முருகன் தலைமையில் இன்று நடக்கிறது. கூட்டத்தில், மாவட்டத்தில் நடைபெறும் திட்டப்பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளன. மேலும், மாமல்லபுரம் கோவில் சுற்றுச்சுவர் புனரமைக்கும் பணி, மரகதப் பூங்காவில் ஒளிரும் பூங்கா ஆய்வு செய்யப்பட உள்ளன.

News December 11, 2024

செங்கல்பட்டில் பலத்த காற்றுடன் கனமழை

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் தற்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வேளச்சேரி, தரமணி, மேடவாக்கம், தாம்பரம், ஆதம்பாக்கம், சிட்லபாக்கம், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மடிப்பாக்கம், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மீனம்பாக்கம், சேலையூர், பெருங்களத்தூர், கிளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. உங்க ஏரியாவில் மழையா?

News December 11, 2024

திங்கள் – சனி வரை வழக்கம்போல் ரயில்கள் இயக்கம்

image

சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு மின்சார ரயில்களின் சேவை ஞாயிற்றுக்கிழமை மாற்றம் செய்யப்பட உள்ளதாக கடந்த டிச.6ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அனைத்து நாள்களிலும் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என சில ஊடங்களில் தவறுதலாக செய்தி வெளியானது. இந்த மாற்று அட்டவணை ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் ரயில்களுக்கு மட்டுமே பொருந்தும். திங்கள் – சனிக்கிழமை வரை வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.

News December 11, 2024

செங்கல்பட்டில் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இப்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று இருக்கிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மிதமான மழை பெய்யும். இது கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி நகரும்போது, தமிழகத்தில் அந்தந்த இடங்களில் கனமழை பெய்யும். செங்கல்பட்டில் மிதமான மழையும் சில பகுதிகளில் கனமழையும் பெய்யும். ஷேர் பண்ணுங்க

News December 10, 2024

376 மனுக்களைப் பெற்ற அமைச்சர்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் கோரிக்கை மனுக்களைப் பெறுதல் நிகழ்வு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பங்கேற்று உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி 376 கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

News December 10, 2024

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை அறிவுறுத்தல்

image

இருசக்கர வாகனத்தில் செல்வோர் பெரும்பாலும் ஹெல்மெட் அணிவதில்லை. இதனால் விபத்து ஏற்படும்போது விரைவாக உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், தலைக்கவசம் அணிவதை குழந்தைகளுக்கும் சிறு வயதிலிருந்தே பழக்கத்தில் கொண்டு வருவதன் மூலம், வருங்கால தலைமுறையினரை சாலை விபத்துகளிலிருந்து பாதுகாக்கலாம் என செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

error: Content is protected !!